மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன, அரசியல்தான்!

எதிர்பார்த்தபடியே இன்றைக்கு கர்நாடக சபாநாயகர் நீண்டதொரு தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, தன்னுடைய ராஜினாமாவைக் கொடுத்து விட்டு பதவி விலகிவிட்டார். எடியூரப்பா நம்பிக்கை வாக்கைக் கோருவதே சட்ட விரோதமானது, நியாயமற்றது என்றெல்லாம் சித்தராமையா, குமாரசாமி இருவரும் பேசினார்கள் என்பதை விட தங்களை நியாயப்படுத்தி கொள்ள, பரப்புரை செய்தார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றிபெற்ற பிறகே இந்த மாதிரிப் பெயரளவிலான பரப்புரை, அதைத் தொடர்ந்து சபாநாயகர் உணர்ச்சிகரமான ராஜினாமா உரை என்று தொடர்ந்ததில் கர்நாடக சட்டசபை மாலைவரை ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் சபாநாயகர் 17 MLA க்களைத் தகுதி நீக்கம் செய்தது சரிதானா? இல்லை, ஒருதலைப்பட்சமானது, சபாநாயகர் தெரிந்தே உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவைப் புறந்தள்ளி, நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளார் என்கிறார் மூத்த வழக்கறிஞர் BV ஆசார்யா! இவரை நினைவிருக்கிறதா? 


இன்றைக்கு அதிருப்தி MLA க்கள் சபாநாயகருடைய முடிவு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருக்கிறார்கள். நான் தொடர்ந்து சொல்லிவருகிற மாதிரி ரமேஷ்குமார் என்கிற காங்கிரஸ் ஆசாமியின் முடிவாக மட்டுமே, அதிருப்தி MLAக்களுடைய ராஜினாமாவை முதலில் முடிவு செய்யாதது மட்டுமே அல்ல, இப்போது தகுதிநீக்க உத்தரவையும் கூட அதன்மீது சம்பந்தப் பட்டவர்கள் என்னசொல்கிறார்கள் என்பதைக் கேட்க வாய்ப்புத் தராமல் நிருபர்கள் கூட்டத்தைக் கூட்டி அறிவித்தது, natural justice மறுக்கப்பட்டு ஒரு முறையான விசாரணையை சபாநாயகராக அவர் நடத்தவில்லை. இதை உச்சநீதிமன்றம் என்ன மாதிரி எடுத்துக் கொள்ளும், தீர்ப்பளிக்கும் என்பதை ஊகிப்பதொன்றும் கடினமானதில்லை. பத்தாவது ஷெட்யூல் பற்றி வாய்கிழிய பேசிவிட்டு, அடிப்படைவிஷயங்களைக் கூட மறந்து அவசர அவசரமாக முடிவை அறிவித்தது சபாநாயகரைப் பின்னால் இருந்து இயக்கிய சித்தராமையா மற்றும் காங்கிரசுக்கு வாடிக்கையாகிப்போன இன்னொரு கேலிக்கூத்து. 

இப்படி ஒரு பகிர்வை முகநூலில் பார்த்தேன்! இதுமாதிரிக்  குத்தூசி, குத்தீட்டி  என்ற பெயர்களில் குத்தாட்டம் போட்டு எழுதுகிற கழகச் சவடால் எவரையும் சட்டை செய்து படித்தது இல்லை. தங்கா   தமிழ்ச்செல்வன் இவருடைய வெள்ளந்தியான மருதைத்தமிழ் பிடிக்கும் என்பதால் இவர் பேசுவதைக் கொஞ்சம் கேட்டிருக்கிறேன்! ஆனால் பெயர் முன்னால்  இருப்பது தங்கமில்லை, துருப்பிடித்த தகரம்தான் என்றாகிப் போனபிறகு, இவரைப்பற்றி படித்த முதல் செய்தி இதுதான் என்பதால் இங்கேயும்!
      
      
GoodReads தளத்தில் இந்தப் புத்தகத்தின் மீதான விமரிசனங்கள், அப்புறம் இணையத்தில் தேடல்கள் என்று நேற்றைக்கு மார்கரெட் ஆல்வா என்கிற காங்கிரஸ் கட்சிக்காரருடைய சுயசரிதை பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். சோனியாவின் வஞ்சகக் குணம், பணப்பேராசை, கூட இருந்தவர்களைக் கைகழுவி விடுவது முதலான உன்னதமான தலைமைப் பண்புகளை 391 ரூபாய் கொடுத்து வாங்கிப் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்கிற சலிப்பு நிறைய இருக்கிறது. 

நரேந்திர மோடி ஊடகங்களை சந்தித்ததே இல்லை என்று நிறையப் பேசுகிறவர்களுக்கு சோனியா காண்டியிடம் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் இருந்த குளறுபடிகள் பற்றியோ, bofors ஊழலில் அவரும் அவரது உறவினர்களும் சம்பந்தப் பட்டிருந்தது பற்றியோ, சீதாராம் கேசரியைத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்தது, அதில் 10 ஆண்டுகள் ஆட்சியில் மன்மோகன்சிங்கை வெறும் டம்மிப்பிரதமராக மட்டுமே வைத்திருந்தது, 2G ஸ்பெக்ட்ரம் உட்பட வெடித்துக் கிளம்பிய ஊழல்களைப்  பற்றியோ எந்த ஊடகமாவது அவரிடம் ஒரு கேள்வியையாவது கேட்டிருக்குமா? ஊடகங்களுக்கு எந்தப் பிரச்சினை மீதாவது ஒரு முழுமையான பேட்டியை அளித்திருக்கிறாரா? கொஞ்சம் தேடிப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.


                   

2 comments:

  1. ரசித்த பதிவு. ஆனால் இந்தக் குத்தீட்டியின் தங்கத் தமிழ்ச்செல்வன் கதை, இந்தத் தளத்துக்குப் பொருத்தமானதல்ல. த.தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் அவர்களின் இடை மோதலால் வேறு வழியில்லாமல் திமுகவுக்குப் போனவர் அவர்.

    ReplyDelete
    Replies
    1. ஒருகை ஓசையாக நான்மட்டுமே விமரிசிப்பானேன் என்று மற்றவர்கள் சொல்வதையும் எடுத்துக் போடுகிற quota வில் தானா தமிழ்ச்செல்வன் பற்றிய குத்தீட்டி விமரிசனமும் வந்தது அவ்வளவுதான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!