அரசியல் சுறுசுறுப்பாக இல்லாத நேரம், பாட்டு கேட்கலாமா?

இன்றைக்கு பட்ஜெட் முதலான செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே யூட்யூபில் பழைய பாடல்களைப் பின்னணியில் கேட்டுக் கொண்டிருந்ததில் ஒருமாறுதலுக்கு அரசியலுக்குப் பதிலாகப் பாடல்களை பற்றிப் பேசலாமே என்று தோன்றியதில் இந்தப் பதிவு! Strictly இன்று மட்டும்தான்!இதில் எங்கள்Blog ஸ்ரீராமுடன் போட்டி போட முடியாது!



ராசாத்தி ரோஜாக்கிளி! 1985 இல் வந்த படம். சுரேஷ் நளினி இருவரும்  முக்கியரோல்களில்! ஆனால் இந்தப் பாட்டில் ராஜேஷ் சுலக்ஷனா தான் மெயின். நளினியும் சுரேஷும் சம்பந்தமே இல்லாமல் ஒரு ஓரமாக வேறொரு ஸ்பாட்டில் டான்ஸ் என்பது தமிழ்சினிமாவின் அந்தநாளைய அபத்தம். அருமையான சந்தம், கேஜே யேசுதாசும் ஜானகியும் அப்படி இழைந்து பாடிய பாட்டு இது. இசையமைப்பாளர் ஞாபகம் வரவேண்டுமே! சந்திரபோஸ் தான் இந்த அருமையான பாடலுக்கு இசையமைப்பாளர்!     கதை நிறையவே குழப்பமான கதை. கதாநாயகன். உயிரோடிருக்கும்போது அப்பாவியாக இருக்கும் கதாநாயகன் ராஜேஷ், செத்தபின் ஆவியாக வந்து பழிதீர்க்கிறான் என்று காதில் பூ சுற்றிய கதை, படம். 

  

சந்திரபோஸ் அந்தநாட்களில் தமிழ் தெலுங்கு என்று இருமொழிகளிலும் மிக பிஸியான இசையமைப்பாளராக இருந்திருக்கிறார், என்றால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அவரே இசையமைத்து அவரே பாடிய பாடல் இது. படம் ஒரு தொட்டில் சபதம்.  

ராணி சந்திரா சிவகுமாரை வாங்கோன்னா அட வாங்கோன்னா என்று குத்தாட்டம்போட்டு அழைக்கிறார். இளையராஜா பாட்டென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது!  


பத்ரகாளி! இந்தப்படம் வெளிவந்தது 1976. ஆனால் 1964 இலேயே இதே மாதிரி சிச்சுவேஷனில் வைஜயந்திமாலா சங்கம் படத்தில் கலக்கோ கலக்கென்று கலக்கியிருப்பாரே!  


பதிவுக்குள் வந்தால் ஒன்றிரண்டு மணிநேரமாவது ஆகிறதே என்று குறைப்பட்டுக்கொள்கிற நண்பர்களுக்காக இப்படி ஒரு சுருக்கமான பதிவு. நான்கு வீடியோக்களும் சேர்ந்தால் கூட 12 நிமிடம் தான்! போதுமா?😃😊  

மீண்டும் சந்திப்போம்.

   

2 comments:

  1. ஓடையின்னா நல்லோடை பாடல் என் லிஸ்ட்டில் இருக்கும் பாடல்! யேசுதாஸ் குரல் அற்புதமாய் இருக்கும். சந்திரபோஸ் இசையில் நிறைய நல்ல பாடல்கள் உண்டு."மாம்பூவே.. சிறுமைனாவே..", சந்திரபோஸ் குரலில் இன்னொரு புகழ்பெற்ற பாடல் உண்டு. ஆறுபுஷ்பங்கள் படத்தில் "ஏண்டி முத்தம்மா..." சங்கம் பாடல் லிங்க் வேலை செய்யவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சங்கம் பாடல் பதிவுக்குள் வேலைசெய்யாது ஸ்ரீராம்! இங்கிருந்தே யூட்யூப் தளத்துக்கு லிங்கைப் பிடித்தால் இன்னொரு விண்டோவில் வேலைசெய்யும்!

      ஏண்டி முத்தம்மா பாடலை மறக்கவில்லை. முதலில் இதை சந்திரபோஸ் ஸ்பெஷலாகவே போடலாம் என்றுதான் நினைத்தேன்! ஆனால் காலவோட்டம் மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதால் இரண்டு பாடல்களோடு சுருக்கிக் கொண்டு, இளையராஜாவின் ஒரு பாட்டைப் பிடித்தால், அந்த சிச்சுவேஷன் அதற்கு 12 வருடங்கள் முந்தியே ராஜ்கபூர் செய்திருக்கிறாரே என்று சங்கம் பாடலுக்கு இழுத்துக் கொண்டுபோய் விட்டது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!