இட்லி வடை பொங்கல்! #35 அரசியல்! மனவருத்தம்! கண்ணீர்!

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோமாளிகள் கட்சியாகவே இருந்து வருவதில் நமக்கும் பதிவெழுத நிறைய காமெடிக் காட்சிகள் கிடைக்கிறது என்பதைத் தவிர, காங்கிரசால் நாட்டுக்கு வேறு எந்த உபயோகமும் இல்லை என்பதைப் ராகுல் பப்புவும் பிரியங்கா பப்பியும் நிரூபித்துக் கொண்டே வருகிறார்கள்!  

2018இல் இந்தியா டுடே so sorry நக்கல் 

ஆனால் அண்ணன் ராகுல் காண்டியை மீறித் தனிக்காமெடி டிராக்கில் பிரியங்கா வாத்ரா பயணிக்கிறாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. இந்த  விவாதத்தைக் கொஞ்சம் பாருங்களேன்! 


இந்த வீடியோ வெறும்  35 நிமிட விவாதம்தான்! நேரம் இருந்தால் தவறவிட வேண்டாமே!  என்ன விஷயமாக? நிலப் பிரச்னையால் சோன்பத்ரா கிராமத்தில் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கும் முயற்சியில்   பிரியங்கா காந்தி இன்று மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக நேற்று மிர்சாபூர்  சோன்பத்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சொத்து தகராறு காரணமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உ.பி., மாநிலத்தை உலுக்கியது. அங்கு அவர்களைப் பார்க்கச் சென்ற பிரியங்கா காந்தியை காவலர்கள் தடுத்ததைத் தொடர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் நேற்று கைது செய்து விடுவிக்கப்பட்டார். இதற்கு அவரது சகோதரர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். இன்று பிரியங்கா தன் ஆதரவாளர்களுடன் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் என்கிறது இன்றைய செய்தி. இழவு வீட்டில் அரசியல் செய்வது இங்கே திராவிடங்களின் ஸ்பெஷாலிடி! காங்கிரஸ் கட்சியும் வெற்றிகரமாக அதைப் பரிசோதனை செய்து பார்க்கிறது. கைது வேறு தடுப்புக்காவல் என்பது வேறு ஆனால் இங்கே அரசியல்வாதிகளுக்கு அந்த வித்தியாசம் எல்லாம் கிடையாது.அவர்களுக்கு ஒருபரபரப்புச் செய்தியாக வருவதற்கு, இதுமாதிரி நாடகங்கள் அவசியம்! ஜுஜுலீப்பா என்று நாமும் ஆகா என்ன வீரம்! செத்தவர்கள் மீது என்ன கருணை! என்று அண்ணாந்து பார்க்கிறோம் பாருங்கள்!  

இதையும் கொஞ்சம் பாருங்கள். 


15-ம் நூற்றாண்டை சேர்ந்த மகான் ஸ்ரீவியாசராஜர் எங்கள் குலகுரு.
எங்கள் முன்னோருக்கும் எங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்ரீவியாசராஜ மடம் வணக்கத்துக்கு உரிய ஸ்ரீகுருபீடம்.
ஸ்ரீவியாசராஜர் கர்நாடகாவில் அனைத்து தரப்பு மக்களும் போற்றி வணங்கும் மகான். தமிழ்நாட்டில் இருந்தும் எந்த வேற்றுமையும் இன்றி பலரும் சென்று வழிபட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டு வரும் திருத்தலம்.
எவ்வித ஆடம்பரங்களும் கட்டிடங்களும் இன்றி வெட்ட வெளியில் நவ பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் 9 குருமார்களின் பிருந்தாவனம் இந்த திருத்தலத்தில் உள்ளன. சுற்றிலும் பசுமையான மரங்கள். ஆகாயமே இந்த மகான்கள் இளைப்பாறும் பிருந்தாவனங்களுக்கு கூரை,
இஸ்லாமிய பேரருளாளர்களின் தர்கா போல மாத்வ யதிகளின் பிருந்தாவனங்கள் அந்த மகான்களின் ஜீவ சமாதிகளாகும். மந்திராலயத்தில் உள்ள யதிராஜர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் இதற்கு சிறந்த உதாரணம்.
இது போன்ற பிருந்தாவனங்களில் மிக அற்புதமான மன அதிர்வுகள் லபிக்கும். அந்த மகான்களின் அருள் தொடரும். மன அமைதி கிடைக்கும்.
ஹம்பி/ஆனேகுந்தியில் ஸ்ரீவியாசராஜர் பிருந்தாவனம் (ஜீவசமாதி) யாரோ சில துவேஷிகளாலோ அல்லது சமூக விரோதிகளாலோ ஓரிரு நாட்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டது.
மிகவும் மனவியாகூலம் தந்த சம்பவம் இது. இந்துக்கள் மட்டும் இன்றி அப்பகுதி இஸ்லாமிய சகோதரர்களுக்கும் மிகவும் மனவருத்தமும் கலக்கமும் அளித்த விஷயம் இது.
ஆனால் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் அல்லது கலவரங்களும் இன்றி சத்தமே இன்றி முற்றிலும் சிதிலமான அந்த பிருந்தாவனம் ஒரே நாளில் மீண்டும் புனரமைக்கப்பட்டது மிகப்பெரும் சாதனை. மிகவும் நெகிழ்ச்சியும் பெருமையும் தரும் நிகழ்வு.
குருவருளால் சமாதானமும் பேரன்பும் சகோதரத்துவமும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஆச்சார்ய தேவோ பவ.

கர்நாடக ஜனங்கள் அங்கே அரசியலில் நடக்கும் குதிரை பேரங்களைக் கண்டு       நிஜமாகவே கண்ணீர் வடிக்கிறார்களா என்ன?! ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி அல்லவா தோன்றுகிறது!

மீண்டும் சந்திப்போம்.No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!