சாத்தான் கூட வேதம் ஓதுமாம்! சித்தராமையா கட்சித்தாவல் பற்றிப் பேசுகிறார்!

கர்நாடக அரசியல் குழப்பம் ஆன்டி கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் குமாரசாமி பேசி முடித்த பிறகு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஒரு point of order மீது ராஜீவ் காண்டி காலத்தில் கொண்டுவரப்  பட்ட கட்சித்தாவல் தடைச் சட்டம் பற்றி, மது தண்டவதே an era of clean politics என்று சிலாகித்தது முதலான விஷயங்களை நீண்ட சொற்பொழிவாற்றிக் கொண்டிருப்பதில் (இதை எழுதுகிற இந்த வினாடி வரை முடிக்கவில்லை) சபாநாயகர் point of order என்னவென்று சொல்லுங்கள் என்று அடிக்கடி கேட்டபோதும் கூட சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஆக, முடிந்தவரை இந்த விவாதத்தை நீட்டித்துக் கொண்டுபோய், கர்நாடக ஜனங்களுக்கு ஒரு நீண்ட லெக்சர் கொடுத்துவிட்டே அவர்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு அவையில் அமளிதுமளி நடக்காவிட்டால் மட்டுமே, அப்புறம்  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார்கள் போலிருக்கிறது.  

   ஆதாயமிருந்தால் சாத்தானும் கூட வேதம் ஓதுமாம்!
சித்தராமையா அதைத்தான் செய்கிறார்!  

முந்தைய பதிவில் நண்பர் நெல்லைத்தமிழன் கட்சித்தாவல் தடைச் சட்டம் மிகவும் சிலாக்கியமானதுதானே என்ற ரீதியில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அதன் மீது அவருக்குச் சில பழைய விஷயங்களை நினைவு படுத்துவதற்காக, கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்ததில் நிறைய விஷயங்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன என்பதை இளைய தலைமுறை தெரிந்துகொள்வதற்காக இங்கே பதிவு செய்கிறேன். தெரிந்துகொள்ளக் கொஞ்சம் முயற்சி செய்வது  ஒரு ஆரோக்கியமான அரசியலுக்குத் தடையாக இருப்பவை என்னென்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்தியா டுடே, 1973 இல் இந்திரா காண்டி கொண்டுவர முயன்று தோற்கடிக்கப்பட்ட இந்தச் சட்டம் 1985 இல் எப்படி, எதற்காக ராஜீவ் கரண்டியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதைக் கோடி காட்டுகிறது.   

'At one stroke, therefore, Rajiv had nipped in the bud the possibility of an opposition consolidation in the near future and the danger of dissidence within his party - probably over distribution of tickets for the impending assembly elections. "This is the new government's first step towards totalitarianism," Madhu Dandavate, Lok Sabha member of the Janata Party, dramatically put it. However, the amendment, which involves Articles 102(2) and 191(2) of the Constitution, involving disqualification of members of Parliament and the state legislatures respectively, also adds an altogether new dimension to the concept of party splits.
Earlier, splits had occurred in virtually all parties; even the exit of Mrs Gandhi from the Congress in 1969 and 1978 falls within the purview of splits. Last year, the Congress(I) unabashedly lent its support to three breakaway minority governments in Jammu & Kashmir, Andhra Pradesh and Sikkim".
ராஜீவ் காண்டியின் அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சி செயல்களின் உள்நோக்கம் எல்லாக்காலங்களிலும் நாட்டின் நலனுக்காகவோ, ஆரோக்கியமான அரசியலுக்காகவோ இருந்ததில்லை, அவர்கள் முதுகைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமே, என்பது இப்போது மட்டும் மாறி விடுமா என்ன?


சித்தராமையா சுற்றிவளைத்து, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இன்றைக்கு சபைக்கு வராமல் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி அவர்களை எவருமே கட்டாயப் படுத்த முடியாது என்று point of order எழுப்புகிறார். உச்சநீதி மன்றம் சபாநாயகருடைய முடிவுகளுக்கு குறுக்கே நிற்காவிட்டாலும், அதிருப்தி MLAக்களை எவரும் கட்டாயப் படுத்தி சபைக்கு வரச்சொல்ல முடியாது என்ற இக்கட்டையும்  ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நேற்றே   சதீஷ் ஆசார்யா கார்டூனை இங்கே பகிர்ந்து சொல்லியிருந்தேன். உச்சநீதிமன்றம் கட்சித்தாவல் தடைச் சட்டத்தை ஒரு இடைக்கால உத்தரவில், ஒன்றுமில்லாததாக செய்துவிட்டது. ஆனாலும்  இறுதி உத்தரவு கர்நாடக சட்டசபை, சபாநாயகர் இவர்கள் எப்படி நடந்துகொள்ளப் போகிறார்கள் என்பதன் மீது மட்டுமே இருக்கும்.      

கர்நாடக சட்டசபை உறுப்பினர்கள், சபாநாயகர், எல்லோருமாகப்   புதிய இலக்கணம் வரலாற்றை எப்படிப் படைக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.
   
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!