உள்ளூர் ஊடகப் பொய்களைப் பார்த்துப் பார்த்து ரொம்பவுமே அலுக்கிறதா? வெளிநாட்டு ஊடகங்கள் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக உண்மை பேசுகிறவை அல்ல! ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான அரசியல், உள்நோக்கங்கள், விஷமத்தனங்கள் என்று ஒரு மாதிரிக் கலப்படமான பின்னணி உண்டு. வருகிற திங்கட்கிழமை இந்தியா தனது சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ இருப்பதை ரொம்பவும் கரிசனத்துடன் பிரிட்டனின் பிபிசி, ஏழ்மையில் வாடுகின்ற ஒரு நாடு ஆயிரக்கணக்கான கோடிகளை விண்வெளிப் பயணத்தில் விரையமாக்குகிறதே என்று விமரிசித்திருக்கிறதாம்!
சந்திரனுக்கு அனுப்பப்படும் சந்திராயன் 2 இல் 1471 கிலோ எடையுள்ள விக்ரம், வருகிற செப்டம்பர் மாதம் நிலாவில் இறங்குமாம்! இந்தவிஷயம் BBC க்கு உறுத்துவானேன்? எப்படிக் கட்டுப்படி ஆகும் என்ற கேள்வி, கவலையெல்லாம் இவர்களுக்கு எதற்கு? இதைப்பற்றிய ஒரு சிறு விவாதம் 27 நிமிடங்கள்! தெரிந்துகொள்ள,பார்க்க வேண்டிய காணொளி.
டொனால்ட் ட்ரம்ப்புக்கு யாரையாவது வம்பிழுத்துக் கொண்டே இருக்கவேண்டும். பிரிட்டனுக்குப் போனாலும் அங்கேயும் CNN தொலைகாட்சி, நிருபரைக் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சிக்க வேண்டும். அடுத்தநாட்டுப் பிரதமரே ஆனாலும் முட்டாள் என்று அநாகரீகமாக ட்வீட்டரில் தித்தித்த தீர்க்க வேண்டும். பக்கத்திலுள்ள மெக்சிகோ முதல் எந்த ஒரு நாடு, விஷயத்தையும் இந்த அதிசயப்பிறவி சீண்டிப் பார்க்காமல் இருந்ததில்லை. இந்தியாவை மட்டும் விடுவாரா என்ன? America First என்கிற இவரது கோஷம் மிகவும் கேலிக் கூத்தாகிக் கொண்டு வருவது நிகழ்கால அரசியல்.
17 நிமிட விவாதம்தான்! விஷயம் இன்னதென்று புரிந்து கொள்ளக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!
சேகர் குப்தா! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியர். இப்போது The Print என்ற இணைய ஊடகத்தை நடத்தி வருகிறார். ஒரு ஊடகக்காரராக, காசுக்குக் கூவுவது ஒன்றை மட்டுமே பிரதானத் தொழிலாகக் கொண்டவர் என்பதை இங்கே பலமுறை சொல்லியிருக்கிறேன். கோவாவில் சமீபத்தில் நடந்த 10 காங்கிரஸ் MLAக்கள் பிஜேபிக்கு தாவியதை வைத்துக் கொண்டு இந்திய அரசியல் போகும் பாதை, பிஜேபி, காங்கிரஸ் என்று கலந்துகட்டி ஒரு அலசலாகச் சொல்கிறார். மாற்றுக்கருத்து என்ற வகையில் இவர் பேசுவதையும் காதுகொடுத்துக் கேட்கிறேன். நீங்களும் கேட்டுப்பார்த்துவிட்டு என்ன மாதிரி வேண்டுமானாலும் ஒரு முடிவுக்கு வாருங்களேன்! வீடியோ 16 நிமிடம்.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு யோசனை சொல்கிறார்:
இதற்கென்ன சொல்வீர்கள்? யோசித்துச் சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.
தமிழர்கள் தங்கீஷ்ஸ் ல் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆங்கில மொழி மற்றும் தமிழ் மொழியை இணையத்தில் கையாளத் தெரியவில்லை என்று அர்த்தம். இந்தப் பொம்பளைக்கு என்ன வாரிக்கிட்டு போகுது. இவரைப் போல பலரும் இப்படித்தான் எழுதுகிறார்கள். அதற்கு அப்படியே இந்தியில் எழுதினால் கூட கூகுள் ட்ராஸ்லேட்டர் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
ReplyDeleteஜோதிஜி! என் தாய்மொழி தமிழ் என்பதால் நான் தனித்தமிழ்த் தாண்டவராயனாக வேஷம் போடவேண்டும் என்பதில்லை! அதே மாதிரி மீராசிங் ஆங்கிலம் ஹிந்தி இரண்டையும் கலந்துகட்டி எழுதுவதில் தவறென்ன இருக்கிறது? பெண்மக்களைப் பெற்றவர் நீங்களே இந்தப் பொம்பளைக்கு என்ன வாரிக்கிட்டு போகுது.என்று எழுதலாமா? ஹிந்தியோ தமிழோ ஒரே மொழியில் எழுதுவதை எத்தனைபேர் google translate பயன்படுத்திப் பார்க்கிறோம்?
Delete