கர்நாடக அரசியலில் என்னவோ பிஜேபி தான் 1000 கோடி ரூபாய் செலவில் ஆபரேஷன் கமலா என்று குதிரை பேரம் நடத்தி MLAக்களை விலைக்கு வாங்கி ஜனநாயகப் படுகொலை செய்து கொண்டிருப்பதாக காங்கிரசும் கூட்டாளிகளும் கதறிக் கொண்டிருப்பதில் உண்மை ஏதாவது இருக்கிறதா? இது பிஜேபிக்கோ எடியூரப்பாவுக்கோ எந்த வகையிலும் வக்காலத்து வாங்குவதற்கான வாதமோ ஆரம்ப வரிகளோ இல்லை என்பதை முதலிலேயே சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்? ஆனால் 1956 இல் கர்நாடக மாநிலம் உருவான ஆரம்பநாட்களில் இருந்து இன்றைய தேதிவரை எத்தனை அரசுகள் முழுமையாக ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கின்றன என்பதையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா?
இது நேற்றைக்கு சதீஷ் ஆசார்யா வரைந்த கார்டூன், இன்று என்ன நடக்கப்போகிறது என்பதன் மீது கொஞ்சம் சுவாரசியமான ஊகம்! 1, 2, 3, அதற்குமேல் 4, 5,6, 7 என்று மெகா சீரியல் கணக்காய் வளருமா, ஆரம்பகட்ட செய்திகள் சொல்கிற மாதிரி குமாரசாமி 2நாள் அவகாசம் கேட்கிறார்: பிஜேபியின் முகத்திரையைக் கிழிக்க வேண்டுமாம்! ஆனால் சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று மாலை 6மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே ஆகவேண்டுமென்று விரும்புவதாக! இன்னொரு செய்தி DK சிவகுமார் சொன்னதாக: குமாரசாமி தியாகசிகரமாகி காங்கிரஸ் முதல் அமைச்சருக்கு வழிவிடத் தயாராக இருப்பதாக! இவை எல்லாம் drama in progress இன்னும் இறுதிவடிவத்துக்குத் தயாராகவில்லை! ஒருபக்கம் இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, நாம் கர்நாடக அரசியல் ஆரம்ப நாட்களில் இருந்தே இப்படி நிலையற்றதாகவே இருந்து வந்திருக்கிறது என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?
S.N.
|
Name
|
Party /Period
|
1
|
K. Chengalaraya Reddy
|
Congress, October 25, 1947 – March 30, 1952
|
2
|
Kengal Hanumanthaiah
|
Congress, March 30, 1952 – August 19, 1956
|
3
|
Kadidal Manjappa
|
Congress, August 19, 1956 – October 31, 1956
|
4
|
S. Nijalingappa
|
Congress, November 1, 1956 – April 10, 1957
|
5
|
S. Nijalingappa
|
Congress, April 10, 1957 – May 16, 1958
|
6
|
B.D. Jatti
|
Congress, May 16, 1958 – March 9, 1962
|
7
|
S.R. Kanthi
|
Congress, March 14, 1962 – June 20, 1962
|
8
|
S. Nijalingappa
|
Congress, June 21, 1962 – March 3, 1967
|
9
|
S. Nijalingappa
|
Congress, March 3, 1967 – May 29, 1968
|
10
|
Veerendra Patil
|
Congress, May 29, 1968 – March 18, 1971
|
Presidents Rule
|
March 19, 1971 – March 20, 1972
| |
11
|
D. Devaraj Urs
|
Congress, March 20, 1972 – December 31, 1977
|
Presidents Rule
|
December 31, 1977 – February 28, 1978
| |
12
|
D. Devaraj Urs
|
Congress, February 28, 1978 – January 7, 1980
|
13
|
R. Gundu Rao
|
Congress, January 12, 1980 – January 6, 1983
|
14
|
Ramakrishna Hegde
|
Janata Party, January 10, 1983 – December 29, 1984
|
15
|
Ramakrishna Hegde
|
Janata Party, March 8, 1985 – February 13, 1986
|
16
|
Ramakrishna Hegde
|
Janata Party, February 16, 1986 – August 10, 1988
|
17
|
S.R. Bommai
|
Janata Party, August 13, 1988 – April 21, 1989
|
Presidents Rule
|
April 21, 1989 – November 30, 1989
| |
18
|
Veerendra Patil
|
Congress, November 30, 1989 – October 10, 1990
|
Presidents Rule
|
October 10, 1990 – October 17, 1990
| |
19
|
S. Bangarappa
|
Congress, October 17, 1990 – November 19, 1992
|
20
|
M. Veerappa Moily
|
Congress, November 19, 1992 – December 11, 1994
|
21
|
H.D. Deve Gowda
|
Janata Dal, December 11, 1994 – May 31, 1996
|
22
|
J.H. Patel
|
Janata Dal, May 31, 1996 – October 07, 1999
|
23
|
S.M. Krishna
|
Congress, October 11, 1999 – May 28, 2004
|
24
|
Dharam Singh
|
Congress[Congress-JD(s) coalition], May 28, 2004 – Jan 27, 2006
|
25
|
H. D. Kumaraswamy
|
JD(s) [BJP-JD(s) coalition], Feb 3, 2006 – October 8, 2007
|
Presidents Rule
|
October 9, 2007 – November 8, 2007
| |
26
|
B S Yeddyurappa
|
BJP [BJP-JD(s) coalition], Nov.12, 2007 – Nov. 19, 2007
|
Presidents Rule
|
November 20, 2007 – May 29, 2008
| |
27
|
B S Yeddyurappa
|
BJP, May 30, 2008 – July 31, 2011
|
28
|
D.V Sadananda Gowda
|
BJP, August 4, 2011 – July 11, 2012
|
29
|
Jagadish Shivappa Shettar
|
BJP, July 12, 2012 – 8 May 2013
|
30
|
Siddaramaiah
|
Congress, May 13, 2013 – May 15, 2018
|
31
|
H. D. Kumaraswamy
|
Congress, May 23, 2018 – Present
|
இந்தப் பட்டியலைப் பார்த்தீர்களானால் இந்திரா கட்சியை உடைக்கிற வரை S நிஜலிங்கப்பா 4 முறை கர்நாடக முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஒரே ஒரு முறை மட்டுமே 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்.
அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாண்டுகளை முதலில் பூர்த்தி செய்த கர்நாடக முதலமைச்சர் என்று பார்த்தால் தேவராஜ் அர்ஸ் ஒருவர்தான்! 2வதுமுறையும் ஜெயித்து முதல்வரானாலும் தேவராஜ் அர்ஸ் இந்திராவோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அடுத்த இரண்டுவருடங்களை நெருங்குகிற சமயத்தில் ராஜினாமா செய்யவேண்டி வந்தது.
அடுத்துக் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஆனால் தொடர்ந்து மூன்று தவணைகளில் 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத ஜனதா தள முதல்வராகப் பதவி வகித்தவர் ராமகிருஷ்ண ஹெக்டே.
அதற்கு 25 வருடங்கள் கழித்து, JDS இலிருந்து காங்கிரசுக்குத் தாவி ஐந்தாண்டு முதல்வராகப் பூர்த்தி செய்தவர் சித்தராமையா தான்! அதுவும் எப்படி?
பழசுதான்! ரவீந்திரன் துரைசாமி இந்த நேர்காணலில் சமூகநீதி, சமநீதி என்கிற திராவிட மாய்மாலங்களை சித்தராமையா என்ன சாதித்தார் என்பதோடு ஒப்பிட்டுக் கேள்வி கேட்கிறார். அதற்காகவே பாருங்கள்! கூடவே சித்தராமையாவுடைய அரசியலைப் புரிந்துகொள்ளவும்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!