Showing posts with label அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும். Show all posts
Showing posts with label அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும். Show all posts

உட்டாலக்கடி கிரி கிரி! சவால் விடும் அழகிரி!

ஹிட்லர் என்று சொல்லிக் கொள்வது கூடப் பெருமையாக....! அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்  
தேர்தலில் தோற்றபிறகு மே மாதம் முதல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த மதுரையின் முன்னாள் சுல்தான், பீவி இருவருமே எதிர் சவால் விடுகிற வாரமாக இந்த வாரம்ஆனது போல! 
மதுரையைக்  காலி செய்யும் அ'னா, மதுரை சுத்தமாகிறது!, அ'னாவின் அடிப்பொடிகள் வரிசையாகக் கைது, பொட்டும், ஒச்சும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஜூவியில் காந்தி அழகிரி வீராவேசப் பேட்டி, இன்றைக்கு அமைச்சருக்கு எச்சரிக்கை என்று மறுபடி பரபரப்புச் செய்திகளில் அ'னா அடிபட ஆரம்பித்திருக்கிறார்!  
சிக்கல்களில் இருந்துவிடுபடப் பேரம் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு வீராவேசம்!! செய்தி இங்கே! கிரானை‌ட் குவா‌ரிக‌ளி‌ல் கொ‌ள்ளையடி‌த்ததாக கூற‌ப்ப‌ட்ட புகாரு‌க்கான ஆதார‌த்‌தை அமை‌ச்ச‌ர் வேலும‌ணி 15 நா‌ட்களு‌க்கு‌ள் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆதார‌த்தை வெ‌ளி‌யிட தவ‌றினா‌ல் ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப் படு‌ம் எ‌ன்று‌ம் தி.மு.க. தெ‌ன்ம‌ண்டல அமை‌ப்பாளரு‌ம், ம‌த்‌திய அமை‌ச்சரு‌மான மு.க.அழ‌கி‌ரி எ‌ச்ச‌ரி‌க்கை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர். ச‌ட்‌ட‌ப்பேரவை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய பு‌திய த‌மிழக‌ம் உறு‌ப்‌பின‌ர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை வட்டாரத்தில் கடந்த ஆட்சியில் மு.க.அழகிரி மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் குவாரிகளில் கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அமைச்சர் வேலுமணி, மு.க.அழகிரி, அவரது கூட்டாளிகள் ஏராளமான குவாரிகளில் இப்படி கொள்ளையடித்தனர். அந்த குவாரிகளின் லைசென்சு தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் உரிய தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்றா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் வேலும‌ணி கூ‌றிய புகாரு‌க்கான ஆதார‌த்தை தர‌க்கோ‌ரி சபாநாயரு‌க்கு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி இ‌ன்று கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர். அ‌தி‌ல், கிரானை‌ட் தொ‌ழி‌லி‌ல் தா‌ம் ஈடுபட ‌வி‌ல்‌லை எ‌ன்று‌ம் தமது புகழு‌க்கு அமை‌ச்ச‌ர் வேலும‌ணி கள‌ங்க‌ம் ஏ‌ற்ப‌டு‌த்‌தி‌வி‌ட்டதாகவு‌ம் அழ‌கி‌ரி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். புகாரு‌க்கான ஆதார‌த்‌தை அமை‌ச்ச‌ர் வேலும‌ணி 15 நா‌ட்களு‌க்கு‌ள் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆதார‌த்தை வெ‌ளி‌யிட தவ‌றினா‌ல் ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். ஆடி ஆடித்தானே இந்த கதிக்கு வந்தது!! இன்னும் ஆட்டமா ? இப்படி அ'னா ஒருபக்கம் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும், தயா சைபர் பார்க் சார்பில், அதன் நிர்வாகி மணிகண்டன் நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களைக் கைது செய்யப்போவதாக, காவல்துறை வேண்டுமென்றே செய்திகளைப் பரவ விட்டுக் கொண்டிருக்கிறது, இடப்பிரச்சினை தொடர்பாக சிவில் வழக்கு நடைபெற்று வரும்  நிலையில், அதில்  தலையிடாமலிருக்கும்படிக்கு  காவல்துறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று  ஒரு மனுவைத்தாக்கல் செய்திருந்தார். இயக்குனர்கள் வேறு யாருமில்லை, அழகிரியின் மனைவியும் மகனும் தான்! அரசின் சார்பில் மனுதாரர் மீது (தயா சைபர் பார்க்) அப்படி ஒரு புகாரோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லை, போலீஸ் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுவதும் பொய்யானது  என்று சொல்லப்பட்டதை அடுத்து நீதிபதி திரு சுதாகர் வியாழனன்று அந்த மனுவை டிஸ்போஸ் செய்தார்.மனுதாரரின் வழக்கறிஞர் தொடர்ந்து, செய்தித்தாட்களில் அப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றே வாதம் செய்துகொண்டிருந்தார்.

மனுவை டிஸ்போஸ் செய்கையில் நீதிபதி சொன்ன ஒரு விஷயம் சுவாரசியமானது."பாதிக்கப்படுவதாக சொல்வது எவரோ அந்த நபர் தான் நீதிமன்றத்திற்கு வரவேண்டுமே தவிர, நிறுவனம் அல்ல! நிறுவனத்தின் இயக்குனர்கள் தாங்கள் தொந்தரவு செய்யப் படுவதாகக் கருதினால் காவல்துறை இயக்குனரை அணுகலாம்." நீதிமன்றத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தடையுத்தரவை வாங்க முயன்ற நிறுவனத்தின் முயற்சிக்கு, பலன் கிடைக்கவில்லை,
அவ்வளவு தான்! அஞ்சா நெஞ்சும் கோழிக்குஞ்சும்! வீராவேசமான பேட்டி, அறிக்கைக்குப் பின்னால் எந்த அளவுக்கு அச்சம் உதறல் இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலத்துக்கு வந்திருக்கிறது  என்பதைத் தவிர வேறென்ன சொல்ல!!
அவைக்கே வராமல், மந்திரிக்குண்டான கடமையை செய்யாமல் இருக்கும் அழகிரி மாதிரி ஆசாமிகளைக் கேள்வி கேட்கக் கூட இந்த டம்மிப் பீசுக்கு அதிகாரம் இல்லை! தைரியமும் இல்லை!
மன்மோகன் சிங்குக்கு மாஜிக் தெரியாது, ஆளவும் தெரியாது,சரி! 
இப்படிக் கேவலப்பட்டு, பிரதமர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பதை விட மானம் மரியாதையோடு ஓடிப் போவது உத்தமம் என்று கூடவா தெரியாது?   தெரியாது?

தி மு கழகத்தின் முன்னோடிகள்! ஒரு சோறு பதம்!


'' ஓ... மை காட்! கலைஞர் குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

பிரதமரை மிரளவைத்த ஃபெர்னாண்டஸ் பத்திரிகை!


கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!

'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

நன்றி : விகடன் செய்திகள்

தலைவர் எவ்வழி, முன்னோடிகளும் அவ்வழி!

பாத்ரூமில் பதுங்கிய ரங்கநாதன்!

அதிர்ச்சி தரும் 154 புகார்கள்..

 
உடன்பிறப்புகளின் கைதுகளுக்காக உச்சுக் கொட்டும் தி.மு.க-வினர்கூட, சென்னையில் வில்லிவாக்கம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது செய்யப்பட்ட விவகாரத் துக்கு 'சபாஷ்!’ போடுகிறார்கள். அந்த அளவுக்கு டார்ச்சர் பார்ட்டியாமே ரங்கநாதன்! 


ஆவடி அருகே நொளம்பூரில் 120 பேரின் நிலம் மற்றும் வீடுகளை அபகரித்தது தொடர்பாக, ரங்க நாதனையும் அவரது உதவியாளர் கவுரி சங்கரையும் கைது செய்து இருக்கிறது போலீஸ். வெளியே தடாலடி ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரங்கநாதன், போலீஸ் வருவதை அறிந்ததும் படுக்கை அறைக்குள் இருந்த பாத்ரூமில் பம்மிப் பதுங்கித் தப்பிக்க முயன்றதைச் சொல்லிச் சிரிக்கிறார்கள் ஏரியா ஆட்கள்.


ரங்கநாதன் மீது புகார்கள் ஒன்று, இரண்டு அல்ல... ஆவடி அருகில் மோரை கிராமத்தில் 37 ஏக்கர் பரப்பளவில் சுமார் 300 பேர் வீடு கட்டிக் குடியிருந்தார்கள். இந்த சொத்து, 'பண்டைய மன்னன் ராஜேந்திர ராஜா என்பவருக்குச் சொந்தமானது, அந்த சொத்துக்கான மூலப் பத்திரம் என்னிடம் உள்ளது!’ என்று ஏமாற்றினார் ரங்கநாதன். காலி செய்ய மறுத்தவர்களின் வீடுகளை ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர், பொக்லைன் கொண்டுவந்து இடித்தது பெரும் கொடுமை. இது குறித்து அப்போதே ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத் தார்கள், ஆனால் பலன் இல்லை.


தவிர, 2001-ம் ஆண்டு நில அபகரிப்புத் தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீஸாரைத் தாக்கியதாக கீழ்ப்பாக்கம் போலீஸார் ரங்கநாதன், கவுரிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 2002-ல் ரங்கநாதனின் உதவியாளர் கவுரிசங்கர் ஒரு தலைமறைவுக் குற்றவாளி. அப்போது மேடவாக்கத்தில் கவுரிசங்கர் இருப்பதாகத் தகவல் கிடைத்து, தலைமைச் செயலகக் குடியிருப்பு ஸ்டேஷனில் இருந்து மூன்று போலீஸார் அவரைப் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் மூன்று பேரையும் அரிவாளால் வெட்டி, துரத்தி அடித்ததாகச் சொல்கிறார்கள். இப்படி சென்னையில் இவர்கள் இருவர் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

கடந்த தி.மு.க. ஆட்சியில் ரங்கநாதன் மீது போலீஸாரால் வாங்கப்பட்ட புகார்கள் மொத்தம் 154 என்கிறார்கள். ஆனால், எதுவும் வழக்காகப் பதிவு ஆகவிவில்லை.


ரங்கநாதன் திருந்தவே மாட்டார் என்று, பழைய சம்பவம் ஒன்றைச் சொல் கிறார்கள். கடந்த 2003, செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம் ஒரு நூதனமான தீர்ப்பு கொடுத்தார். அதுவும் நில அபகரிப்பு வழக்குதான். நிலத்தை அபகரித்ததுடன் அந்த விவசாயியைக் கொலை செய்ய முயன்றதாகச் சொல்லப்பட்ட வழக்கு அது. அப்போது இவர் ப.சிதம்பரத்தின் கட்சியான காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் புரசைவாக்கம் எம்.எல்.ஏ-வாக இருந்தார். 

இவரது அதிரடிகளைக் கேட்டு அதிர்ந்துபோன நீதிபதி, 'மதுரை காந்தி மியூசியத்துக்குச் சென்று ஐந்து நாட்கள் காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தைப் படிக்க வேண்டும்; திரும்பி வந்ததும் சென்னை தக்கர் பாபா வித்யாலயா நூலகத்திலும் காந்தி புத்தகங்களைப் படிக்க வேண்டும்!’ என்று உத்தரவிட்டார். அப்படிப் படித்தும் திருந்தவில்லை ரங்கநாதன்.


ரங்கநாதன் வளர்ந்த விதமே அலாதியானது. பெற்றோர் ஆதரவு இல்லாத ரங்கநாதனை வளர்த்தது புரசையைச் சேர்ந்த அவரது அண்ணன். வாலிப வயசுச் சேட்டைகளால் அண்ணன் இவரை வீட்டை விட்டுத் துரத்திவிடவே, அங்கு இருக்கும் அரசு மருத்துவமனையின் காலிப் படுக்கைகளில் தஞ்சம் அடைந்தார் ரங்கநாதன். அப்போது காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் தொடர்பு கிடைக்க... அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.1970-களில் மத்திய அரசு வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு 5,000 கடன் உதவித் திட்டத்தை அறிவித்தது. அதில் கொஞ்சம் காசு பார்த்தாராம். அப்புறம் பரோட்டோ கடை நடத்தியது, ஏலச் சீட்டு எனப் பல தொழில்களில் இறங்கி, வழக்குகளும் குவிந்தன.



1989-ல் முதல் முறையாக ப.சிதம்பரம் மூலம் ஸீட் வாங்கி புரசைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். திரும்பவும் 1991-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ராஜீவ்காந்தி அனுதாப அலையில் வெற்றி பெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் த.மா.கா-விலும் சிதம்பரத்தின் தனிக் கட்சியிலும் தொடர்ந்து புரசை எம்.எல்.ஏ. ஆனார். 2005-ல் தி.மு.க-வுக்குத் தாவி, 2006-ல் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. ஆனார். இதற்குள்ளாக, ஆவடி, அம்பத்தூர் எனப் புறநகரில் ஏகப்பட்ட நிலங்களையும் பங்களாக்களையும் வளைத்துவிட்டாராம்.


மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் என்றாலும் கடந்த ஆட்சியில் இவரது அராஜகம் உச்சத்துக்குப் போனது என்று உடன்பிறப்புகளே வருந்துகிறார்கள்.  

குறிப்பாக, ஒரு நிதிப் புள்ளி மற்றும் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஸ்ட்ராங்கான நபருடன்  சேர்ந்துகொண்டு கூட்டாகச் செயல் பட்டதாகச் சொல்கிறார்கள். 

இத்தனை பிரச்னைகள் வரிசை கட்டி நின்றபோதும், கடந்த தேர்தலில் ரங்கநாதனுக்கு அம்பத்தூர் தொகுதியில் ஸீட் கொடுத்தார் கருணாநிதி.


வேலூர் சிறையில் இருக்கும் ரங்கநாதன் மற்றும் கவுரி சங்கரை விரைவில் குண்டாஸ் ஆக்ட்டில் போடுவதில் போலீஸ் தீவிரமாக இருக்கிறதாம்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்  நன்றி : ஜூனியர் விகடன்

சாதனை சாதனை என்று திமுகவினர் அடிக்கடி சொல்லிக் கொள்வார்களே, அது இதுதான் போல !

இதுவரை உள்ளே போனவர்களில் மிக அதிகமான புகார்களுக்குக் காரணமானவர் என்ற சாதனையாளரும் ரங்கநாதன் தான் போலிருக்கிறது!

இந்த மாதிரி சாதனையாளர்கள் தான் திமு கழகத்தின் "முன்னோடிகள்"!

இவர்களைத் தான், சமூகத்தில் மதிப்பு மிக்கவர்கள்,அஞ்சா நெஞ்சர்கள், ஜெயலலிதா அரசு (இவர்களது சாதனைகளுக்கு விருது வழங்காமல்) வழக்குப் போடுகிறது, சிறையில் தள்ளுகிறது என்று மனித உரிமை ஆணையத்திடம் மனுக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் கருணாநிதி! 

மத்திய மந்திரிகளிடம் காவடி, மனித உரிமை ஆணையத்திடம் மனு கொடுப்பது, பிரணாப்குமார் முகர்ஜி மாதிரி பிரதமர் பதவியின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்களிடம் பேரம், ஒருவேளை பலிக்காவிட்டால், அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்கிற கதையாக பிஜேபி உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சிகள், இடதுசாரிகளிடம் ஆதரவு கேட்கிற வேலை என்று திமுக என்னென்னவோ முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

மனு நீதிச் சோழன் பரம்பரை என்று சொல்லிக் கொள்வார்கள்! அதற்கு உண்மையான அர்த்தம் இப்படி மண்டியிட்டு மனுக் கொடுப்பதுதான் என்று இப்போது தான் புரிகிறது!!

 







 
பிடித்திருக்கிறதா? அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித் தெரிவியுங்களேன்!

தமிழ் நாட்டில் இருந்தால் ஜெயில்! டில்லிக்குப் போனால்......?

ஆடிய ஆட்டம் என்ன? இன்றைக்கு ஓடுகிற ஓட்டம் என்ன?
இரண்டரை மாதங்கள் தான்! சூடு என்றால் என்ன என்பதைத் திமுகவின் "முன்னோடிகள்" நன்றாகவே அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்டு வருகின்றனர். 

ஒவ்வொரு மந்திரியும், மாவட்டமும் தங்கள் ஏரியாவில் கோட்டை கட்டி வாழ்ந்து வந்ததும், திமுக எஃகுக் கோட்டை, இதை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று திமுக தலைவர் பெருமிதப் பட்டுக் கொண்டதும் மாறிப்போன பழங்கதை. பழைய நினைப்பிலேயே திமுக தலைமை இன்னமும் இருப்பதாகத் தான் தெரிகிறது. 

தவறுகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ளத் தவறுகிறவர்கள், அனுபவித்தே தான் தீர்க்க வேண்டும்!

திமுக வெறும் மணல் கோட்டைதான், எஃகுக் கோட்டை அல்ல என்பதைக் காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறதோ?


ஒரு சீனியர் திமுக அமைச்சர் சொன்னாராம்! "இங்கே டில்லியில் நாங்கள் பிரெஷ்ஷாக சுதந்திரமாக இருக்கிறோம்! அங்கே தமிழ்நாட்டிலோ,ஜெயில் வாசம்தான்!"

 



திமுக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்துக் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று முறையிட்டதாகவும், தேசீய மனித உரிமைக் கழகத்தில் புகார் கொடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உப்புத்தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பார்கள்! அடாவடித்தனமாக சம்பாதித்ததை எல்லாம் கக்க வேண்டிய தருணமும் நெருங்கிக் கொண்டிருக்கிறதோ?


 



மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா டிவி மற்றும் ராயல் கேபிள் விஷன் அலுவலகங்களில் போலீசார் 
நேற்றைக்கு அதிரடி சோதனை நடத்தினார்கள். திருநெல்வேலியில் சன் டிவிக்கு சொந்தமான கரண் மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

அரசு கேபிள் நிறுவனம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனுமதியின்றி கேபிள் இணைப்புகளை அளித்து வரும் நிறுவனங்கள் மீது காவல் துறை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

திருநெல்வேலியில் சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். உள்ளூர் டிவி நடத்துவதற்கு முறையான அனுமதியின்றி ஒளிபரப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஒளிபரப்பு முடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா டிவி மற்றும் ராயல் கேபிள் விஷன் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. அழகிரியின் ஆதரவாளர்கள் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது.  

தயா டிவி மட்டுமல்லாமல்,மதுரையில் குட்டி சுல்தான்கள் அல்லது பினாமிகள் பேரில் முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த தனியார் கேபிள் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பையும் இந்த நடவடிக்கை முடக்கி விட்டது.

பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த வழிகள் அடைபட்டுப் போய், ஏற்கெனெவே வில்லங்கமாக சம்பாதித்தவை இப்போது விவகாரமா
கித் தலைக்கே தீம்பைக் கொண்டுவருவதாய் மாறிக் கொண்டிருப்பதில் உளுத்தம்பருப்புக்களில் முன்னோடிகள் ரொம்பவுமே நொந்துபோய்க் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

தேர்தலுக்கு முன்னால், திமுக தலைவருக்கு, மகள் ஒரு நபரை மட்டுமே ஜாமீனில் எடுக்கும் சிந்தனை முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது. இப்போதோ, மாவட்டம், வட்டங்களையும் ஜாமீனில் எடுக்க ஏதாவது செய்ய வேண்டிய, பெயரளவுக்காவது முயற்சி செய்ய வேண்டிய நிலைமையும் சேர்ந்து கொண்டதில் ஸ்டாலின் ஒருவர் மட்டும் தான், கொஞ்சம் தளராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 


அஞ்சாநெஞ்சர், மதுரையில் இருந்தால் ஒத்துக் கொள்ளாது என்று மனைவியுடன் டில்லிக்குப் போய் விட்டார்.

மறுபடியும் ஆரம்ப வரிகளில் சொன்னபடி, 
ஆடிய ஆட்டம் என்ன? இன்றைக்கு ஓடுகிற ஓட்டம் என்ன?








 
பதிவு பிடித்திருக்கிறதா? அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

பெயரில் வீரம் இருந்தால் போதுமா? வீரபாண்டி மறுபடியும் உள்ளே! ரிலே ரேஸ்!!




இதைப்படித்துப் பார்த்துவிட்டு, இன்று ஜூனியர் விகடனில் வெளியாகி இருக்கும் சேலத்து சிங்கத்தின் ஆதரவாளர்கள் போட்ட ஆட்டத்தைப் பற்றிய ரன்னிங் கமெண்டரியைப்  படியுங்கள்! முதலில் இப்போதைய செய்தி!

தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தை சேல‌ம் காவ‌ல் துறை‌யின‌ர் ‌இ‌ன்று ‌திடீரென கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

‌நில அபக‌ரி‌ப்பு தொட‌ர்பாக ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் வீரபாண்டி ஆறுமுகம் ‌‌மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் 2 வழக்குகள் பதிவு செய்ததை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் முன்‌பிணை மனுக்கள் தாக்கல் செய்தா‌‌ர்.

இ‌ந்த மு‌ன்‌பிணை மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம், இர‌ண்டு நா‌ட்க‌ள் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்‌திட‌ம் ‌காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் 27ஆ‌ம் தே‌தி மு‌‌ன்‌பிணை பெ‌ற்று‌க் கொ‌ண்டு ‌தின‌மு‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கையெழு‌த்து போட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து 3 நா‌ள் காவ‌ல்துறை‌ ‌விசாரணை‌க்கு ‌பி‌ன்ன‌ர் சேல‌ம் ம‌த்‌திய கு‌ற்ற‌ப்‌பி‌ரிவு காவ‌ல் ‌நிலைய‌த்தில் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் ‌தினமு‌ம் கையெழு‌த்து போ‌ட்டு வ‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மு‌ன்‌பிணை ‌நிப‌ந்தனைபடி கையெழு‌த்து போட வ‌ந்த ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌த்தை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.உதவியாளர் நடேசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூற‌ப்ப‌ட்ட புகா‌ரி‌ல் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌க்கலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

 இனி ஜூனியர் விகடன் செய்தி!

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளே..'ஜெயலலிதா'வுக்கு நடந்த அவமானம் வெளியே..


சேலம் ரிலே! (ரிலே ரேஸ் நல்லாத்தான் நடக்குதுங்கோ!!)







'நில அபகரிப்பு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் சரண்டர் ஆக வேண்டும்!’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ போலீஸில் சரணடைந்தார் அவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை மூன்று நாட்களில் காவலில்வைத்து விசாரித்தது போலீஸ்! 


வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களில், சேலத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் முகம் சுளிக்கவைப்​பதாகவே இருந்தன. முதுகெலும்பு மறந்துபோய், காக்கிச் சட்டைகள் சிலர் கை கட்டி நின்று வேடிக்​கை பார்த்ததுதான் அதைவிடக் கொடுமை!


வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை, சேலத்திலேயே இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறுமுகம் பந்தாவாக உட்கார்ந்திருக்க.. அவருக்கு முன்னால் தயங்கிக்கொண்டு நின்றா​ராம் பிச்சை. 'எதுக்கு நிக்குறீங்க... உட்காருங்க!’ என வீரபாண்டியார் சொன்ன பிறகுதான் உட்கார்ந்தாராம் பிச்சை. வெள்ளரிப் பிஞ்சு, பப்பாளி ஜூஸ், ஆட்டுக்கால் சூப் என விதவி​தமான உணவுகளை சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைத்து உபசரித்தார்களாம். இரவு தூங்குவதற்கு கட்டில், வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பெட்ஷீட் எனக் காவல் நிலையத்தை ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு மாற்றிக் கொடுத்ததாம் போலீஸ்.


விசாரணையில் என்ன நடந்தது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''பிரீமியர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியது, அங்கம்மாள் காலனி விவகாரம் ஆகிய இரண்டும்தான் ஆறுமுகம் மீதுள்ள குற்றச்சாட்டுகள். மொத்தமாக 120 கேள்விகளை போலீஸ் தயார் செஞ்சு இருந்தாங்க. ஒவ்வொரு கேள்வியாக உதவி கமிஷனர் பிச்சை கேட்டார். அதுக்கு இவர் நிதானமாக பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'ம்... ம்... இல்லை!’ இப்படித்தான் பதில் வந்தது. 

சில கேள்விகளுக்கு கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். 'என் பேரைச் சொல்லி எவனோ ஏதோ பண்ணிட்டுப் போவான். அதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்றாராம். எல்லாவற்றையும் வீடியோவிலும் பதிவு செஞ்சாங்க.

சில நேரங்களில், 'கேமராவை ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார். 'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா ஆகிட்டேன்...’னு வருத்தப் பட்டார்!'' என்கிறார்கள்.
வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்துக்குள் இருக்க... வெளியில் தி.மு.க-வினர் செய்த காரியங்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டு இருந்தன. சேலம் பழைய பேருந்து நிலையம் ஏரியாவில் மூன்று நாட்களுமே கடைகள் அனைத்துமே மூடப்பட்டே இருந்தன. திறந்த கடைகளையும் மிரட்டி மூட​வைத்தார்கள்.


விசாரணையின் கடைசி நாளான 27-ம் தேதி, காவல் நிலையத்துக்கு எதிரே தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு ஜெயலலிதாபோல சேலை அணிவித்து, மாலை சூட்டி நிற்கவைத்தனர். பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவராகப் போய் அவரைக் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக அசிங்கப் படுத்தினார்கள். உச்சகட்டமாக அந்த நபரை ரோட்டிலேயே கிடத்தினார்கள். அதன் பிறகு நடந்தவற்றை, அச்சில் ஏற்ற முடியாது. பாதுகாப்புக்காக நின்று இருந்த நூற்றுக்கணக்கான போலீஸ் முன்னிலையிலேயே இவை எல்லாம் நடந்தும், யாரும் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை. 

சேலம் காவல் துறையினருக்கு அவ்வளவு வீரபாண்டியார் பாசமோ? அராஜகம்!


கோரிமேடு செல்வம் தலைமையில் வந்த இன்னொரு கும்பலோ, அந்த வழியில் வந்த ஆட்டோக்களை நிறுத்தி, ''ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு ஆட்டோ கேட்குதா?'' என ஆட்டோ டிரைவர்கள் முகத்தில் குத்துவிட, சில டிரைவர்களுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. அதையும் போலீஸ் கண்டு கொள்ளவில்லை. 

கண் முன் சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தும், 'அடி வாங்கியவன் வந்து புகார் கொடுக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று நக்கலாகச் சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி. 

மறு உத்தரவு வரும் வரை, தினமும் சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என உத்தரவிட்டு இருக்கிறது  நீதிமன்றம். இதற்கிடையில், 28-ம் தேதி காலை பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்த அழகிரி அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசினர். 

'இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சேன். என்னை போலீஸ் விசாரித்த போது, யாரும் வாயே திறக்கலை. வந்தும் பார்க்கலை. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!’ எனக் கலங்கினாராம் ஆறுமுகம். 'கவலைப்படாதீங்க. அவங்களைப்பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை... உங்ககூட எப்போதும் நான் இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று தைரியம் சொல்லி விட்டு வந்தாராம் அழகிரி!

- கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்--நன்றி : ஜூனியர் விகடன்

சொந்தக் கதையே எங்கே எப்போது என்னவாகுமோ என்று கோழிக் குஞ்சுக்குப் படபடவென்று இதயம் அடித்துக் கொண்டிருக்கிற கதையாக  இருக்கும் போது இவர்  போய் தைரியம் சொல்லிவிட்டு வந்தாராம்! தமாஷாக இல்லை?! 

ஆட்டம் போட்ட உளுத்தம்பருப்புக்களைக் காவல்துறை, வீடியோவில் படம் எடுத்து அள்ளிக் கொண்டு வந்துவிட்டார்கள் என்பது கொசுறு செய்தி!


சமச்சீர் கல்வி விவகாரத்தில் பள்ளிகளை  மூடச் சொல்லி, மாணவர்களைத் தூண்டி விட்டுத் திமுகவினர் நேற்று நடத்திய போராட்டம் பிசுபிசுத்தது. மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர் உள்ளிட்டு  நேற்று வரை ஒட்டிக் கொண்டு ஆதாயம் பார்த்தவர்கள் பலரையும் காணோம்!






 
பதிவின் உள்ளடக்கம் பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால், அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!