தமிழ் நாட்டில் இருந்தால் ஜெயில்! டில்லிக்குப் போனால்......?

ஆடிய ஆட்டம் என்ன? இன்றைக்கு ஓடுகிற ஓட்டம் என்ன?
இரண்டரை மாதங்கள் தான்! சூடு என்றால் என்ன என்பதைத் திமுகவின் "முன்னோடிகள்" நன்றாகவே அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொண்டு வருகின்றனர். 

ஒவ்வொரு மந்திரியும், மாவட்டமும் தங்கள் ஏரியாவில் கோட்டை கட்டி வாழ்ந்து வந்ததும், திமுக எஃகுக் கோட்டை, இதை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று திமுக தலைவர் பெருமிதப் பட்டுக் கொண்டதும் மாறிப்போன பழங்கதை. பழைய நினைப்பிலேயே திமுக தலைமை இன்னமும் இருப்பதாகத் தான் தெரிகிறது. 

தவறுகளில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ளத் தவறுகிறவர்கள், அனுபவித்தே தான் தீர்க்க வேண்டும்!

திமுக வெறும் மணல் கோட்டைதான், எஃகுக் கோட்டை அல்ல என்பதைக் காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறதோ?


ஒரு சீனியர் திமுக அமைச்சர் சொன்னாராம்! "இங்கே டில்லியில் நாங்கள் பிரெஷ்ஷாக சுதந்திரமாக இருக்கிறோம்! அங்கே தமிழ்நாட்டிலோ,ஜெயில் வாசம்தான்!"

 



திமுக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்துக் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று முறையிட்டதாகவும், தேசீய மனித உரிமைக் கழகத்தில் புகார் கொடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உப்புத்தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பார்கள்! அடாவடித்தனமாக சம்பாதித்ததை எல்லாம் கக்க வேண்டிய தருணமும் நெருங்கிக் கொண்டிருக்கிறதோ?


 



மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா டிவி மற்றும் ராயல் கேபிள் விஷன் அலுவலகங்களில் போலீசார் 
நேற்றைக்கு அதிரடி சோதனை நடத்தினார்கள். திருநெல்வேலியில் சன் டிவிக்கு சொந்தமான கரண் மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

அரசு கேபிள் நிறுவனம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனுமதியின்றி கேபிள் இணைப்புகளை அளித்து வரும் நிறுவனங்கள் மீது காவல் துறை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

திருநெல்வேலியில் சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விஷன் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். உள்ளூர் டிவி நடத்துவதற்கு முறையான அனுமதியின்றி ஒளிபரப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஒளிபரப்பு முடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா டிவி மற்றும் ராயல் கேபிள் விஷன் அலுவலகங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. அழகிரியின் ஆதரவாளர்கள் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது.  

தயா டிவி மட்டுமல்லாமல்,மதுரையில் குட்டி சுல்தான்கள் அல்லது பினாமிகள் பேரில் முறையான அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த தனியார் கேபிள் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பையும் இந்த நடவடிக்கை முடக்கி விட்டது.

பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த வழிகள் அடைபட்டுப் போய், ஏற்கெனெவே வில்லங்கமாக சம்பாதித்தவை இப்போது விவகாரமா
கித் தலைக்கே தீம்பைக் கொண்டுவருவதாய் மாறிக் கொண்டிருப்பதில் உளுத்தம்பருப்புக்களில் முன்னோடிகள் ரொம்பவுமே நொந்துபோய்க் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

தேர்தலுக்கு முன்னால், திமுக தலைவருக்கு, மகள் ஒரு நபரை மட்டுமே ஜாமீனில் எடுக்கும் சிந்தனை முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது. இப்போதோ, மாவட்டம், வட்டங்களையும் ஜாமீனில் எடுக்க ஏதாவது செய்ய வேண்டிய, பெயரளவுக்காவது முயற்சி செய்ய வேண்டிய நிலைமையும் சேர்ந்து கொண்டதில் ஸ்டாலின் ஒருவர் மட்டும் தான், கொஞ்சம் தளராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 


அஞ்சாநெஞ்சர், மதுரையில் இருந்தால் ஒத்துக் கொள்ளாது என்று மனைவியுடன் டில்லிக்குப் போய் விட்டார்.

மறுபடியும் ஆரம்ப வரிகளில் சொன்னபடி, 
ஆடிய ஆட்டம் என்ன? இன்றைக்கு ஓடுகிற ஓட்டம் என்ன?








 
பதிவு பிடித்திருக்கிறதா? அருகில் உள்ள ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்தித்தெரிவியுங்களேன்!

1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!