அது காந்தி காலம்! இப்போ சோனி(யா) காண்டி காலம்!

.. ..
என்னாது? ஊழல் செஞ்சவங்கள எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சதுல உள்ளே இடமில்லையா?

ஊழல் பேர்வழிகளுக்கு மாலை மரியாதை செய்து வெளியே அனுப்பி விட்டு, ஊழலை
எதிர்த்தவர்களைப் பிடிச்சு உள்ளே போடு!
 அதுவேற காலம் ஐயா! அது மகாத்மா காந்தி காலம்!

இப்போ வேற காலம்! சோனியா காண்டி காலம்!
 
அஹிம்சை, சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை எல்லாம் இப்போது காண்டி தேசத்தில் மிகப் பெரிய குற்றம்!

லட்ச லட்சமாக் கோடிகளில் புழங்குவதை எதிர்ப்பதாவது!
இது எவ்வளவு பெரிய குற்றம்?  தெரியுமா ஹசாரே! 

டெக்கான் கிரானிகிள் நாளிதழில் இன்றைக்கு வெளியான கார்டூன்கள் இவை! 

அதிகார மமதை என்று அருண் ஜெட்லி சாட, ஊமைக் குசும்பனாய் மன்மோஹன்சிங் வாயடைத்து நிற்க--சுஷ்மா ஸ்வராஜ் பிரதமரைச் சாட, ஓட்டை வாய் கபில் சிபல் எழுந்திருந்து சப்பைக் கட்டுக் கட்ட....

நாடாளுமன்றத்தில் இன்றைக்கு நடந்த கூத்துக்களைப் பார்த்த பிறகு......
 
இன்றைக்கு இந்த இரண்டு கார்டூன்கள் போதுமே!

டெக்கான் கிரானிகிள் நாளிதழுக்கு நன்றியுடன்.

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!