காங்கிரஸ் கொள்ளையனே! வெளியேறு!


ஆகஸ்ட் 9, 1942!
 
வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்துடன், மகாத்மா காந்தி, முழு சுதந்திரத்துக்காக அறைகூவல் விடுத்த நாள் இன்று.


கொஞ்சமாவது தெரிந்து கொள்ள

இந்த அறைகூவலின் எழுபதாவது ஆண்டுத் தொடக்கமும் இன்று தான்! ஆகஸ்ட் எட்டாம் தேதி, காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒன்பதாம் தேதி முதல், சுதந்திர இந்தியாவின் குடிமக்களாக வெள்ளையருக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று சூளுரைத்துப் போராட்டத்தில் ஈடு படுமாறு மகாத்மா காந்தி ஜனங்களை வேண்டிக் கொண்டதன் எழுச்சி நாடு முழுவதும் தீயாய்ப் பரவியது.காந்தி உட்பட, ஒரு லட்சம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டார்கள்.

காங்கிரசுக்குள்ளேயே இதற்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. ராஜாஜி, இந்தத்தீர்மானத்தை எதிர்த்துக் காங்கிரசை விட்டு வெளியேறினார். நேரு,மௌலானா ஆசாத் இருவருக்கும் இந்தத் தீர்மானத்தில் உடன் பாடு இல்லாதபோதும், காந்தியுடன் கூட இருந்தார்கள்.சர்தார் வல்ல பாய் படேல்,பாபு ராஜேந்திரா பிரசாத், அசோக் மேத்தா, ஜெயப்ரகாஷ் நாராயணன் முதலானோர் தீவீரமாக இந்தத் தீர்மானத்தை ஆதரித்தார்கள். 


முகமது அலி ஜின்னா, இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அறிக்கை விட்டார். மஷ்ரிகி என்ற இஸ்லாமியத் தலைவர், முதலில் காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கட்டும், அப்புறம் இந்த ஒத்துழையாமைக்கு ஆதரவு  தருவதைப் பற்றிப் பார்க்கலாம் என்றார்.

இப்படித் தலைவர்கள் ஆளுக்காள் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நின்றபோதிலும், காந்தியின் அறைகூவல் நாடெங்கிலும் எதிரொலித்தது. காந்தியின் உரையில் இருந்து ஒரு சிறு பகுதி
 

"...The Congress is unconcerned as to who will rule, when freedom is attained. The power, when it comes, will belong to the people of India, and it will be for them to decide to whom it placed in the entrusted. May be that the reins will be placed in the hands of the Parsis, for instance-as I would love to see happen-or they may be handed to some others whose names are not heard in the Congress today. It will not be for you then to object saying, “This community is microscopic. That party did not play its due part in the freedom’s struggle; why should it have all the power?” Ever since its inception the Congress has kept itself meticulously free of the communal taint. It has thought always in terms of the whole nation and has acted accordingly. . . 

I know how imperfect our Ahimsa is and how far away we are still from the ideal, but in Ahimsa there is no final failure or defeat. I have faith, therefore, that if, in spite of our shortcomings, the big thing does happen, it will be because God wanted to help us by crowning with success our silent, unremitting Sadhana1 for the last twenty-two years.

I believe that in the history of the world, there has not been a more genuinely democratic struggle for freedom than ours. I read Carlyle’s French Resolution while I was in prison, and Pandit Jawaharlal has told me something about the Russian revolution. But it is my conviction that inasmuch as these struggles were fought with the weapon of violence they failed to realize the democratic ideal."******
எமெர்ஜென்சி இருண்ட காலத்தை மறக்கலாகுமோ?
இந்திய ஜனநாயகத்தை சீரழித்ததில் இந்திரா காந்தி எட்டடி என்றால் வாரிசுகள் முப்பத்திரண்டடி!

ஆகஸ்ட் 9,2011!
எழுபது ஆண்டுகளுக்குப் பின்னால், "காங்கிரஸ் கொள்ளையனே! வெளியேறு!" என்ற இயக்கத்தைத் தொடங்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்! 

All roads lead to Rome! எல்லாப்பாதைகளும் ரோமுக்குத்தான் செல்கின்றன என்பார்கள். இங்கே எல்லா ஊழல்களும் சோனியாவிடம் தான் வந்து சேர்கின்றன என்று பிஜேபி குற்றம் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை!


கொள்ளையடிப்பதற்காகவே ஆட்சி, ஆட்சி செய்வது ஊழல் செய்யத் தான்! பதவியில் ஒட்டிக் கொண்டிருக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும்!

இதுதான் காங்கிரஸ் கட்சியின் இத்தனை நாள் சாதனை, யோக்கியதை! 

இந்த தேசத்தைப் பிடித்த ஏழரை, காங்கிரஸ் கட்சிதான் என்பதைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

தொடர்புடைய முந்தைய பதிவு இங்கே.


என்ன செய்யப் போகிறோம்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய நியாயமான கேள்வி இது! வெட்கம் கெட்ட காங்கிரஸ்காரர்களுக்கு, கழுத்தைப் பிடித்துத் தள்ளினாலும் உறைக்காது!

இந்த தேசத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?'

2 comments:

  1. சரியாய் சொன்னீங்க சார்!!!!! என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

    ReplyDelete
  2. அடிமைகளாக இருப்பதில்லை என்று ஜனங்கள் எப்போது முடிவு செய்கிறார்களோ, அப்போதே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!