வெள்ளிக்கிழமை சந்தேகங்கள்! முதலில் KDbrothers விவகாரம்!
==
இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த #KDbrothers விவகாரம் செல்ஃப் எடுக்க ஆரம்பித்திருப்பதில் நேற்றுமுன்தினம் தயாநிதிமாறனின் முன்னாள் அந்தரங்கச் செயலாளர் மற்றும் இரண்டு சன் டிவி ஊழியர்களை சிபிஐ கைது செய்திருக்கிறது.
இன்று போலீஸ் காவலை எதிர்த்து, அவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 27 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.
ஏற்கெனெவே 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திமுகவை விடுவேனா என்று துரத்திக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாகவே தயாநிதி மாறன் சுற்றி வளைக்கப்படும் விவகாரமும் இருக்கிறது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நேற்றைக்கு தயாநிதிமாறன் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டியிருப்பதோடு ஸ்டாலின்,ஜிகே வாசன், தொல்.திருமா, என்று வரிசையாக ஆதரவுக்குரல்களைத் திரட்டி வருவதில் இன்றைய சேர்க்கை காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சிலபல தொலைக்காட்சி ஊடகங்கள் சொந்தமாக இருக்கிற தெம்பில் தயாநிதி நேற்று முழுதும் அவரை சிக்க வைக்க ஒரு ஆர்எஸ்எஸ் அறிவுஜீவி தொடர்ந்து முயற்ச்சித்து வருவதாகவும் அவரை திருப்தி செய்யவே சிபிஐ ஒன்றுமறியாத, தனக்குச்சம்பந்தமில்லாத சன்டிவி ஊழியர்களைக் கைது செய்து அடித்து உதைத்து எதிரான வாக்குமூலம் வாங்க முயல்வதாகவும் சவுண்டு விட்டுக் கொண்டே இருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பில்லை என்று தயாநிதி மாறனுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி பதில் சொல்லியிருப்பது இங்கே அவருடைய இந்த வீடியோ பேட்டியில் மாறன் எப்படித் திரித்துச் சொல்கிறார் என்பது சுத்தமாகப் பல்லிளித்து வெளிச்சம் போட்டுத்தெரிகிறது.
எதற்கெடுத்தாலும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மானநஷ்ட வழக்குப் போடுவேனென்று மிரட்டிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களைப் பார்த்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கடைசியாக ஒரு கேள்வி கேட்கிறார் பாருங்கள் !
மானமிருந்தால்தானே மானநஷ்ட ஈடு கேட்க முடியும் என்று! வெளியில் தான் இப்படி என்றால் திமுகவுக்குள் எப்படியாம்? ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தும் கூட ஒரு பிரயோசனமுமில்லை போல!
குமுதம் ரிப்போர்டர் அட்டைப்படம் இப்படி நக்கலாக!
புயலுக்கு முன்னே அமைதி என்ற பாடல் வரிகளைப் போல திஹாருக்கு முன் புழல் தானா?
******
நிலக்கரி சுரங்க ஊழலில் விசாரிக்கப்பட்ட மௌன்சிங் என்ன சொல்லி இருப்பார் விசாரணை அதிகாரிகள் எப்படி வேர்த்து விறுவிறுத்துப் போயிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது கற்பனை அல்லது பயம் வருகிறதா?
******
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.என்று இந்தச்செய்தி சொல்கிறது
குஷ்பூகட்சியில் சேர்ந்த பிறகு காங்கிரஸகாரனுக்குக் கூட தைரியம் வந்துவிட்டது என்று சொல்வதா? சால்வை அழகர் பானாசீனாவுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வதா?
மறுபடியும் எழுத ஆரம்பித்தது குறித்து மகிழ்ச்சி. விரைவில் தமிழ் ப்ளாகர்ஸ் அனைவரும் மீண்டும் இங்கயும் திரும்ப விழைகிறோம்.
ReplyDeleteவாருங்கள் மாணிக்கம்! சென்ற நவம்பரில் சின்னதாக முயற்சிக்க ஆரம்பித்து ஒரு பதிவு, டிசம்பரில் 3 இந்த ஜனவரியில் இதுவரை 13 என்று மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டேனே!
Delete