இம்ரான் கானுக்கும் சோனியாG காங்கிரசுக்கும் ஒற்றுமை! என்ன அது?

எதிர்பார்த்தபடியே பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தங்களால்  எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையை வெளிப்படுத்துகிற விதமாக சில முடிவுகளை அறிவித்திருப்பதில் பாக்கிகளுடைய ஏமாற்றமும் சேர்ந்தே வெளிப்பட்டிருக்கிறதோ?


இந்தியதூதரை வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறது. தனது தூதரையும் திருப்பியழைத்திருக்கிறது (பாகிஸ்தானின் தூதர் இதுவரை பொறுப்பேற்கவில்லை) ஹைகமிஷனர் லெவலில் இருந்து அந்தஸ்து கொஞ்சம் குறைவான கான்சலேட்  அளவுக்கு குறைக்கப்படலாம்என்பதற்கு மேல் இதில் பெரிதாக எதுவுமில்லை. இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப் படுகிறது என்பதிலும் பெரிதாக எதுவுமில்லை. வான் வழிப்பாதைகளில் சில மூடப்படுவதான அறிவிப்பிலும் சாரம் இல்லை. ஐநா பாதுகாப்புசபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பப்போவதாக அறிவித்திருப்பதிலும் ஒன்றும் பெரிதாக நடந்துவிடப்போவதில்லை. ஆக பாகிஸ்தானில் இரண்டு சபைகளும் கூடி காஷ்மீர் விவகாரத்தைக்க காரசாரமாக விவாதித்து ஆளும் இம்ரான்கான் தரப்பும் எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் நாயே என்று ஏசிக்கொண்டது மட்டும் தான் மிச்சம் போல! 

  
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இதுவரை ஹை டெசிபலில் துருக்கியும் கம்மி டெசிபலில் மலேசியாவும் மட்டுமே குரல் கொடுத்திருக்கின்றன. அமெரிக்கா இந்த விவகாரத்தில் இது வரை கருத்து எதையும் சொல்லவில்லை. சீனாவும் கூட லடாக் விஷயத்தில் பெயரளவுக்கான ஆட்சேபத்தை பதிவு செய்ததே தவிர, காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டியது என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டது. ஆக இதை ஒரு சர்வதேசப் பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதும் பலிக்காது என்ற ரீதியிலேயே செய்திகள் வருகின்றன.


பாகிஸ்தானின் பதிலடி அறிவிப்புக்கள் வெளிவருவதற்கு முன் பாகிஸ்தானியர்கள் மனநிலையிலிருந்து அவர்களால் என்ன என்ன செய்யமுடியும் என்பதைக் கொஞ்சம் சொல்கிறார் சேகர் குப்தா! கொஞ்சம் சுவாரசியமான 13 நிமிட வீடியோ.


அப்படியானால் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க யாருமே இல்லையா? மிக வினோதமாக  சோனியாG காங். கட்சி அந்தத் திருப்பணியை  வெட்கமே இல்லாமல் எடுத்துச் செய்வது தெரிகிறதா இல்லையா? அட்சய் சந்தர் கார்டூன் காங்கிரஸ் இம்ரான்கானைத் தூக்கிச் சுமப்பதை நன்றாகவே நக்கலடித்திருக்கிறார்!  புல்வாமா பாணியில் தாக்குதல் நடக்கலாம் என்று இம்ரான் கான் முழங்கியதில், இம்ரான்கானுக்கு முட்டுக் கொடுத்த காங்கிரஸ், திமு கழக  பிரசாரப் பறைகள் கிழிந்து தொங்கவிடப்பட்டிருக்கிற காமெடிப்பரிதாபத்தை யாராவது கவனித்தீர்களா?    


மஞ்சுள் லந்து கொடுப்பது வேற லெவல்! அவ்வளவுதான்! அங்கே பாக்கிகளும், இங்கே  சோனியாG காங்கிரசும் தங்களது கல்லறைகளைத் தாங்களே தோண்டிக் கொண்டிருக்கிற ஒற்றுமை, பரிதாபமாவது புரிகிறதா இல்லையா?

மீண்டும் சந்திப்போம் 


  
            

1 comment:

  1. அங்கே பாக்கிகளும், இங்கே சோனியாG காங்கிரசும் தங்களது கல்லறைகளைத் தாங்களே தோண்டிக் கொண்டிருக்கிற ஒற்றுமை..

    இதற்கு மேல் அழகாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது..

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!