Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

சண்டேன்னா மூணு! தந்தி டிவி! அரசியல்! ஊடகங்களின் அரசியல்!

இங்கே பானாசீனாக்களும் இசுடாலின்களும் பேசி முடித்த அதே உளறல்களை மீண்டும் நியாயப்படுத்த தந்திடிவிக்கு ஒரு விதமான உள் அரசியல் இருக்கிறது போல! கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே நடத்திய விதம் வேறு! முதலாளிகளுக்கு  அன்றைய நாட்களில் அதில் உடன்பாடும் இருந்தது. எப்போதிலிருந்து ஆதித்தன் குடும்பம் பழையபடி திமுக சார்பு நிலை எடுக்க ஆரம்பித்தது என்பதுகூட, இங்கே பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயம் தான்!


ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை நேற்று ஆரம்பித்த விதமே தமிழ்நாட்டையும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற திட்டம் இருக்கிறதா என்ற குத்தலான கேள்வியோடுதான்! இதே மாதிரி அப்பச்சி சொன்ன ஒரு அதிமேதாவித்தனமான ஸ்டேட்மென்ட் : கச்சத் தீவு இந்தியாவுடையது அல்ல, அதனால் இலங்கைக்குத் தாரை வார்த்ததில் தவறே இல்லை என்பதையும் இங்கே உள்ள ஊடகங்கள் பானாசீனாவிடம் துணிந்து கேட்பார்களா? H ராஜா என்றால் வருகிற இளப்பம், மற்றவர்களிடமும்  வருமா?ஊடக அறம் என்பதே காசுக்குக் கூவுவது மட்டும்தான் என்று சோனியாG UPA chairperson என்ற ஹோதாவில் நிழல் பிரதமராக ஆட்டிப்படைக்க ஆரம்பித்த நாட்களில் தான் என்பது இங்கே நண்பர்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமா? இங்கே பெரும்பாலான ஊடகங்கள்  திமுகவோடு அமைத்துக் கொண்ட கூட்டணி இன்னும் தொடர்கிறதே, எதனால் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்! 


அரசியலைப் பேசும்போது, தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக தொல்.திருமாவளவன் ஆகிவருகிறார் என்பதே இங்கு திராவிடங்களின் வீழ்ச்சிக்கான பல அடையாளங்களில் ஒன்று மட்டும்தான்! களத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவர் படுகிற பாடு இருக்கிறதே! அது தான் என்னை ஆச்சரியப்படுத்துகிற ஒரே விஷயம்! காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமியர்களுடைய ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அம்பேத்கரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருப்பதான விசித்திரம் இந்த 44 நிமிட நேர்காணலில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இசுடாலின் போல காஷ்மீர் விவகாரம் என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே பேசுவது ஒருவிதம்! திருமாவளவன் பேசுவது வெறுரகம்! ராஜா ஹரிசிங்குக்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே காஷ்மீர் இந்த தேசத்தின் ஒருபகுதியாக, கல்விகேள்விகளுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது என்பது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல! முஸ்லிம்  மெஜாரிட்டி எப்படி வந்தது என்பதைப்பற்றியும் அவருக்கு கவலை இல்லை. தான் பேசுவது தேசத்துக்கு எதிரான கருத்து இல்லை என்பதற்கு அவர் சொல்லுகிறவிளக்கம் இருக்கிறதே, அபாரம்!   

   குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான்

பாரதி கவிதைகளில் புதிய கோணங்கி என்ற பாடலில் இந்த நாட்டோருக்காகச் சொன்ன செய்தி இது. இங்கே ஊடகங்களுக்கும், தெரிந்தே தவறுகள் செய்கிற அரசியல்வியாதிகளுக்கும் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான் என்று இந்த ஞாயிற்றுக்கிழமை எனக்குப் படுகிறது 

மீண்டும் சந்திப்போம்.
 

மண்டேன்னா ஒண்ணு! #காஷ்மீர் அரசியல்!

புதுப்புது அர்த்தங்கள் என்று நிகழ்ச்சிக்குத் தலைப்பு வைத்து இருந்தாலும், புதிய தலைமுறைக்கு அதன் இன்றைய அரசியல் கூட்டுக்கு ஏற்றவிதத்திலேயே செயல்படுவது தெரிந்தது தான்! அப்படியானால்,இங்கே எதற்காக அவர்களை, அவர்கள் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துகிற மாதிரி எடுத்துப் போட வேண்டும் என்றொரு கேள்வி நண்பர்களுக்கு வரலாம்!


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு கால மாநிலங்களவை உரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்ட நிகழ்ச்சியில் ரஜனிகாந்த் பேசியது வழக்கம்போல சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது. 


எனக்கு  ரஜனியைபற்றியோ அவரது so called அரசியல் பிரவேசம் பற்றியும் நல்ல அபிப்பிராயம் எதுவுமில்லை என்றாலும், இந்த ஒரு நபரின் பேச்சை மட்டுமே வைத்து தமிழக அரசியல் களம் ரியாக்ட் செய்வது மிகவும் வினோதமாக இருக்கிறது. அதேபோல விஜய்சேதுபதி கூடத் தன மாறுபட்ட கருத்தை இங்கே உள்ளூரில் பேசாமல் வெளிநாட்டுக்குப் போய்ப் பேசி இருக்கிறார். ஆனால் ஒரு   குறுகிய கண்ணோட்டத்தைத் தாண்டி, ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எல்லாத்தரப்பையும் உள்ளடக்கியதாக ஒரு அரசியல்விவாதம் நடத்துவதற்கு என்ன தடை  இருக்க முடியும்? முதல் வீடியோ 22 நிமிடம்தான். 2வது 6 நிமிடம்.


இந்த 22 நிமிட வீடியோ 7 வருடப் பழசுதான்! இன்றைக்கும் கூட சுவாரசியமான நேர்காணலாக இருக்கிறதே! என்ன காரணம்  என்று பார்த்துவிட்டு ஊகிக்க முடிகிறதா சொல்லுங்களேன்!

இன்றைக்குப் பார்த்தது, படித்தது, அதில் பிடித்தது:
ஈவேரா இதையும் சொன்னார்:- "தமிழனின் 4 எதிரிகள்...
1)பார்ப்பனர்கள் 2)கிறிஸ்தவர்கள் 3)முஸ்லீம்கள்
4)நம்மில் கீழ்த்தரமானவர்கள்...
இதில் 'நம்மில்' கீழ்த்தரமானவர்கள் என்று அவர் எந்த சமூகப் பிரிவைக் குறிக்கிறார் என்பதை அவரே விளக்கியும் உள்ளார்.
குறிப்பிட்ட சாதிப்பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்த பிறகுதான் துணி விலை ஏறிவிட்டது என்றும் ஈவேரா கூறி இருக்கிறார்!
பார்ப்பானுக்கு பயந்து கொண்டு முஸ்லீமை ஆதரிப்பது, சேற்றுக்கு பயந்து மலத்தில் கால் வைப்பது போல என்றும் ஈவேரா கூறி உள்ளார்!
'இந்தத் தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்'- 'தமிழ் காட்டுமிராண்டி மொழி'... என்றும் ஈவேரா கூறி உள்ளார்!
சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசும் போது 'கண்ணகி முலையைக் கிள்ளி எறிந்தாளாம் - மதுரை பத்தி எரிஞ்சுதாம்! இதோ இங்க இருக்கற பொம்பளைகளில் ஒருத்தி கூடவா பத்தினி இல்லை? இதோ இந்தப் பென்சில் துண்டை எரி பார்ப்போம்?'- என்றும் மேடையிலேயே சவால் விட்டார் ஈவேரா!
இதை எல்லாமும்....
வி ஜ ய் சே து ப தி....
ஆதரிக்கிறாரா?
விஜய் சேதுபதிக்கு ஒரு ஆலோசனை! குச்சி மிட்டாயை சப்பினால் முழுசா சப்பணும்!
ஈவேரா என்ற குச்சிமிட்டாயின் ஏதோ ஒரு முனையை மட்டும் காஷ்மீர் விஷயத்தில் சப்பி இருக்கிறீர்கள் விஜய் சேதுபதி!
குச்சிமிட்டாயின் உருண்டையான நுனியின் ஏதோ ஒரு ஓரத்தைச் சப்பி உள்ளீர்கள்!
அடுத்த முறை ஈவேரா என்ற குச்சிமிட்டாயை சப்பும்போது முழுவதுமாக வாயில் செலுத்தி சப்புங்கள் விஜய் சேதுபதி!   

ஈவெராவைப் பற்றி பேசப்புகுந்தால் ஏகப்பட்ட முன்னுக்குப்பின் முரணான விஷயங்களையும் சேர்த்தேதான் பேச வேண்டியிருக்கும்!

மீண்டும் சந்திப்போம்,   
                

இம்ரான் கானுக்கும் சோனியாG காங்கிரசுக்கும் ஒற்றுமை! என்ன அது?

எதிர்பார்த்தபடியே பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தங்களால்  எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையை வெளிப்படுத்துகிற விதமாக சில முடிவுகளை அறிவித்திருப்பதில் பாக்கிகளுடைய ஏமாற்றமும் சேர்ந்தே வெளிப்பட்டிருக்கிறதோ?


இந்தியதூதரை வெளியேறும்படி உத்தரவிட்டிருக்கிறது. தனது தூதரையும் திருப்பியழைத்திருக்கிறது (பாகிஸ்தானின் தூதர் இதுவரை பொறுப்பேற்கவில்லை) ஹைகமிஷனர் லெவலில் இருந்து அந்தஸ்து கொஞ்சம் குறைவான கான்சலேட்  அளவுக்கு குறைக்கப்படலாம்என்பதற்கு மேல் இதில் பெரிதாக எதுவுமில்லை. இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப் படுகிறது என்பதிலும் பெரிதாக எதுவுமில்லை. வான் வழிப்பாதைகளில் சில மூடப்படுவதான அறிவிப்பிலும் சாரம் இல்லை. ஐநா பாதுகாப்புசபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பப்போவதாக அறிவித்திருப்பதிலும் ஒன்றும் பெரிதாக நடந்துவிடப்போவதில்லை. ஆக பாகிஸ்தானில் இரண்டு சபைகளும் கூடி காஷ்மீர் விவகாரத்தைக்க காரசாரமாக விவாதித்து ஆளும் இம்ரான்கான் தரப்பும் எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் நாயே என்று ஏசிக்கொண்டது மட்டும் தான் மிச்சம் போல! 

  
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இதுவரை ஹை டெசிபலில் துருக்கியும் கம்மி டெசிபலில் மலேசியாவும் மட்டுமே குரல் கொடுத்திருக்கின்றன. அமெரிக்கா இந்த விவகாரத்தில் இது வரை கருத்து எதையும் சொல்லவில்லை. சீனாவும் கூட லடாக் விஷயத்தில் பெயரளவுக்கான ஆட்சேபத்தை பதிவு செய்ததே தவிர, காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டியது என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டது. ஆக இதை ஒரு சர்வதேசப் பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதும் பலிக்காது என்ற ரீதியிலேயே செய்திகள் வருகின்றன.


பாகிஸ்தானின் பதிலடி அறிவிப்புக்கள் வெளிவருவதற்கு முன் பாகிஸ்தானியர்கள் மனநிலையிலிருந்து அவர்களால் என்ன என்ன செய்யமுடியும் என்பதைக் கொஞ்சம் சொல்கிறார் சேகர் குப்தா! கொஞ்சம் சுவாரசியமான 13 நிமிட வீடியோ.


அப்படியானால் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க யாருமே இல்லையா? மிக வினோதமாக  சோனியாG காங். கட்சி அந்தத் திருப்பணியை  வெட்கமே இல்லாமல் எடுத்துச் செய்வது தெரிகிறதா இல்லையா? அட்சய் சந்தர் கார்டூன் காங்கிரஸ் இம்ரான்கானைத் தூக்கிச் சுமப்பதை நன்றாகவே நக்கலடித்திருக்கிறார்!  புல்வாமா பாணியில் தாக்குதல் நடக்கலாம் என்று இம்ரான் கான் முழங்கியதில், இம்ரான்கானுக்கு முட்டுக் கொடுத்த காங்கிரஸ், திமு கழக  பிரசாரப் பறைகள் கிழிந்து தொங்கவிடப்பட்டிருக்கிற காமெடிப்பரிதாபத்தை யாராவது கவனித்தீர்களா?    


மஞ்சுள் லந்து கொடுப்பது வேற லெவல்! அவ்வளவுதான்! அங்கே பாக்கிகளும், இங்கே  சோனியாG காங்கிரசும் தங்களது கல்லறைகளைத் தாங்களே தோண்டிக் கொண்டிருக்கிற ஒற்றுமை, பரிதாபமாவது புரிகிறதா இல்லையா?

மீண்டும் சந்திப்போம் 


  
            

தடுமாறும் பாகிஸ்தான்! சேர்ந்து தடுமாறும் காங்கிரஸ்!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திரமோடி அரசு எடுத்திருக்கும் அதிரடி முடிவில் பாகிஸ்தான் அரசு தடுமாறுவது, தள்ளாடுவது எல்லாம் கடந்த இருநாட்களாக பாகிஸ்தானிலும் நடைபெற்றுவந்த பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் நடந்த காரசாரமான விவாதங்களில் மிகப் பரிதாபமாக வெளிப்பட்ட செய்தியைத் தமிழக சேனல்கள் ஒரு பொருட்டாக எடுத்துப்  பேசமாட்டார்கள் என்பது தெரிந்த செய்தி. கொஞ்சம் தொடர்ந்து பாருங்கள்! தடுமாறும் பாகிஸ்தான்! சேர்ந்து தடுமாறும் காங்கிரஸ்! என்று தலைப்பு வைத்த்தில் வேறு அர்த்தம் இருக்கிறதா என்பதும் புரியும்! 



இந்த 23 நிமிடச் செய்தித் தொகுப்பில், பாகிஸ்தானிகளிடம் என்னமாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பும் என்ன செய்வது என்கிற ஆப்ஷன்களே இல்லாமல் தூதரக உறவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்வது, ஆனால் எந்த அளவுக்கு என்பதை முடிவு செய்யக் கூட முடியாமல் அதிலும் தடுமாறுவதைச் சொல்கிறார்கள்!


காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம்  எல்லாம் முடிந்த பிறகு டில்லியில் அவசர அவசரமாகக் கூடி ஆர்டிகிள் 370 மீதான கட்சியின் நிலைபாட்டை முடிவுசெய்தார்களாம்! இதில் மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தலைவர் பதவியை உதறிவிட்டு ஓடிப்போன ராகுல் காண்டியே தலைமை தாங்கி நடத்தியது ஒன்று! காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கொள்கையை முடிவு செய்வதற்காக ஒரு குழு இருந்ததாக(?!!) , நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சொதப்பிய பிறகு கூட்டப்பட்ட கூட்டம் இது. பாலிசி பிளானிங் க்ரூப்பில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காஷ்மீர் விவகாரம் இன்னதென்ற விவரமும் தெரியாது , காங்கிரசின் வரலாறு என்னவென்றும் தெரியாது என்று நொந்துபோய்ப் பேசியது மற்றொன்று. முதல்முறையாக காகா கமிட்டிக் கூட்டத்தில் மூத்த தலைவர்களுக்கு ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியாது என்று அரசுக்கு ஆதரவாக, சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருப்பது சோனியாG நேரடி அரசியலுக்கு வந்த பிறகு முதல்முறையாக எழுந்திருப்பதுதான் கூடுதல் விசேஷம்!
        

காங்கிரஸ் கட்சி என்பதுஆதாயத்துக்காகக் கூடுகிற சுயநலக் கும்பல் ஒன்றால் நடத்தப்படுகிற கட்சி என்பது இங்கே வரும் நண்பர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றுதான்! ஆர்டிகிள் 370 விஷயத்தில் அவர்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்தில்லை என்பது மட்டுமே இங்கே விஷயமில்லை. நரேந்திர மோடி அரசை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுக்கக் கூடத் தயங்காத சோனியாG மற்றும் வாரிசுகளைப் பற்றி இந்தப் பக்கங்களிலும் அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்திலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலே இந்த 35 நிமிட விவாதமே காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் நிலையை அப்படியே பின்பற்றுகிறதா என்பதுதான்!

சோனியாG காங்கிரசை இன்னமும் சகித்துக் கொண்டிருக்க  வேண்டுமா? சோனியாG காங்கிரசைத் தலைமுழுக வேண்டியநேரமும் அவசர அவசியமும்   வந்துவிட்டதா இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.  
   

தடுமாறும் காங்கிரஸ்-திமுக! முகம் மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கிற அதிரடி முடிவினால் பிஜேபிக்கு நாடெங்கிலும் ஆதரவு கூடி வருவதைக் காங்கிரஸ்காரர்களே நொந்துபோய் ஒப்புக் கொள்கிற மாதிரியான சூழல்! ஆர்டிகிள் 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற J&K Reorganisation Bill 2019 மசோதாவை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம் என்று  காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருபகுதியினர் நினைத்ததையும் நேற்றைக்கு ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பிலேயே பார்க்க முடிந்தது. கூச்சல்  கோஷங்கள் பெயரளவுக்கான எதிர்ப்பு என்றே வாக்கெடுப்பு நடந்ததில் மசோதா அவையில் 2/3 பங்குக்கும் கூடுதலாகவே ஆதரவைப் பெற்று நிறைவேறியதையும் பார்த்தோம்!


வரலாறே தெரியாத, பாடம் எதையும் கற்றுக் கொள்ளத்  தயாராக இல்லாத கூமுட்டைகளால் நிரப்பப் பட்டதுதான் சோனியாG தலைமையில் இருக்கிற இன்றைய காங்கிரஸ் என்பதற்கு  மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி இன்று சபையில் பேசியதே ஒரு நல்ல உதாரணம்! இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்! அருகிலேயே இன்றைய காங்கிரஸ் கட்சியின் முதலாளியம்மா  உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்பதோ எதனால் சௌதுரி பேசியதற்கு அவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது என்பதோ அந்த தற்குறி முதலாளிக்குத் தெரியாது! தெரிந்ததெல்லாம் யாரோடு கூட்டுச் சேர்ந்தால் யாரைக் கவிழ்க்கலாம், யாரோடு கூட்டணி தர்மம் உடன்பாடு  வைத்தால் எத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் என்று மட்டுமே தெரிந்த ஒரு விசித்திரப்பிறவி! வாரிசோ அதற்கும் மேலே! எங்கேயோ பின்வரிசையில்  உட்கார்ந்து ஒரு ட்வீட் போட்டுவிட்டால் வயநாடு தொகுதி MP ஆனதற்குச் சரியாகப்போச்சு!  எம்பியாக்கினது சபைக்கு வந்தும்  பேசாமல்  ட்வீட்டரில் இப்படிப் புலம்புவதற்குத்தானா?  

National integration isn’t furthered by unilaterally tearing apart J&K, imprisoning elected representatives and violating our Constitution. This nation is made by its people, not plots of land. This abuse of executive power has grave implications for our national security.
12:37 PM · Aug 6, 2019Twitter for iPhone



இந்த வீடியோ திமுகவின்  TR பாலு முதுகெலும்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டவிதத்தைச் சொல்கிறது.  இன்றைய அரசியல் காமெடியாக இதைத்தான் சொல்லுவேன்!எதிர்க்க வேண்டும் என்பதற்காக எத்தையாவது வாய்க்கு வந்ததை உளறிவிட்டுப் போக வேண்டியது!  என்ன இருந்தாலும் #தமிழேண்டா இல்லையா? 

  
இந்த 51 நிமிட விவாதத்தில் பானு கோம்ஸ் கொஞ்சம் விஷயம் புரிந்து சில விஷயங்களை சொல்கிறார். புதிய தலைமுறை சேனலுக்கு விஷயம் வேண்டியதில்லை. நாய் எலும்புகடிக்கிற மாதிரி எந்த ஒரு செய்தியையும் கடித்துக் குதறி அரைகுறை விவாதமாக, அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருக்க வேண்டுமென்கிற சேனல் தர்மம் தெரிந்துதான் இவர்கள் நடத்தும் விவாதங்களுக்கு எவரும் பேச வருகிறார்களா?  

காங்கிரஸ் மிக வேகமாக தன்னை தானே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
காஷ்மீரை சரியாக கையாளத் தெரியாமல் விவகாரமாக்கி..அதை மேலும் மேலும் பயங்கரவாத களமாக மாற்றிய கட்சி காங்கிரஸ்.
உண்மை இவ்வாறிருக்க..
இன்று..பாராளுமன்றத்தில் ...சிம்லா ஒப்பந்தம், லாகூர் பயணம் என்றெல்லாம் சுட்டிக் காட்டி.. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உரிமை இல்லையா ? என்பதாக கேள்வி எழுப்பி..மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
முழுமையான அரசியல் தற்கொலை.


70 வருடங்களுக்கு முன்னாடியே ஆனந்தவிகடனில் காஷ்மீர் பற்றி சரியாகக்  கணித்துக் கருத்துப்படம் வரைந்து விட்டார்களாம்! விகடன் தளம் பீற்றிக் கொள்கிறது! அந்த 100 கோடி, அப்புறம் ஒரு 10 கோடி நட்டஈடு கேட்டு திமுக ஓனர் குடும்பத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்களாமே! ஆனந்தவிகடனில் எப்படிச் சமாளித்தார்களாம்? அதைப்பற்றி ஒருவார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!  

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் J&K Reorganisation Bill 2019 மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்! லோக்சபாவிலும் இந்த   மசோதா மூன்றில் இரண்டுபங்கு மெஜாரிடியுடன் நிறைவேறிவிடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்!    
   
மீண்டும் சந்திப்போம். 

உளறும் வைகோ! திணறும் காங்கிரஸ்! காஷ்மீர்!

காஷ்மீர் விஷயத்தில் நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு முக்கியமான முடிவை அரசு அறிவித்து, அதன்மீதான சட்டத் திருத்த மசோதா ராஜ்யசபாவில் மூன்றில் இரு பங்குக்கும் மேலான மெஜாரிட்டியில் நிறைவேற்றப் பட்டதையும் பார்த்தோம்.  தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டின கதையாக இங்கே தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட உதிரி அமைப்புக்கள். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை, SDPI, முஸ்லிம் முன்னேற்றக கழகம் ஆகிய  இஸ்லாமிய அமைப்புகள் , மே 17 திருகன் காந்தி, டைரக்கடக்கர் வ கௌதமன் சுபவீ செட்டியார்  உள்ளிட்டவர்கள் கூடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகை இடப்போவதாக அறிவித்து சென்னை வேளச்சேரி சின்னமலையில்  அவரவர் கொடிகளுடன் ஒரு கேலிக் கூத்து, தற்சமயம் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் வேறு இப்படி லந்தடிக்கிறார் .





சிறுபான்மைக்காவலர் வேஷம்போடுவதில் திமுகவுடன் இத்தனை அமைப்புக்கள் போட்டியா என்ற கேலியான கேள்வி ஒன்று எழுந்ததற்கு மேல் இந்தச் செய்தியில் முக்கியத்துவம் எழுவுமில்லை என்றாலும், இந்த மாதிரியான உதிரி அமைப்புகள் ரொம்பவுமே சிலுப்பிக் கொண்டிருப்பதை இங்கு உள்ள அரசும் நாமும் இன்னும் எத்தனைநாலைக்குச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற கேள்வி முக்கியமானது.
   
வைகோ. பாவம் தன்னை இன்னமும் ஒரு புலியாகவே  ஜனங்கள் நம்பிக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் போல! சாயம் வெளுத்துக் கேவலப்பட்டு நிற்பதை அவருக்கு எடுத்துச் சொல்ல யாருமே இல்லையா?


இவர் மாதிரி உளறுவாயர்களை விடுங்கள்!  ஐநா சபை தலையிடுமே  என்றெல்லாம் உதார் விடுகிறார். விஷயம் புரிந்து உளறுகிறாரா அல்லது புரிந்துகொள்ள முடியாமல் உளறுகிறாரா என்பதை இன்னமும் இவரை நம்புகிற மதிமுக தொண்டன் முடிவு செய்துகொள்ளட்டும். இவரை ராஜ்யசபா எம்பியாக அனுப்பி திமுக இன்னுமொரு தவறை வேண்டும் என்றே தெரிந்துதான் செய்திருக்கிறது. அதற்கான விலையையும் அவர்கள் கொடுக்கத்தான் வேண்டும். 

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் சட்டப்படியே செல்லுபடியாகுமா என்பதை ஒரு அரசியல் சாசன வல்லுநர் / வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே என்ன கருத்தை சொல்கிறார் என்று கொஞ்சம் பார்த்துவிடலாம். ஏனென்றால் இன்னும் கொஞ்சநாட்களுக்கு திடீர் எக்ஸ்பெர்ட் அவதாரம் எடுக்கும் பலர் சட்டத்தை அவரவர் இஷ்டம்போல வளைத்து வளைத்து வியாக்கியானமும் கருத்தும் சொல்வதை கேட்டே ஆகவேண்டிய தலைவிதி ஒன்றிருக்கிறதில்லையா?

காங்கிரஸ்காரர்களுடைய  நிலைமை இன்னும் பரிதாபம்! இன்று லோக்சபாவில் Kashmir Reorganisation Bill மீது விருப்பம்  இருக்கிறதோ இல்லையோ எதிர்த்துப் பேசியே ஆகவேண்டிய பரிதாபமான நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதைப் பார்க்கும் போது சோனியாG யின் பிடிமானமும் செல்வாக்கும் கட்சிக்கு உள்ளேயே குறைந்துபோய்க்  கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மனீஷ் திவாரி பேசும்போது  எல்லாப் புகழும் ஜவஹர்லால் நேருவுக்கே என்ற ரீதியில் பேசியது ஒரு நல்ல உதாரணம். இந்திரா காண்டி, ராஜீவ் காண்டி அப்புறம் மன்மோகன் சிங் மாதிரி ஒரு டம்மிப்பீஸை முன்னுக்கு நிறுத்தி சோனியாG backseat driving செய்த சாமர்த்தியம் இவை எதுவும் விவாதத்தில் பேச உதவியாக இல்லை என்கிற கள யதார்த்தம் காங்கிரசைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

                 
தீதும் நன்றும் பிறர்தர வாரா! முன்னால் செய்த தவறுகள் அத்தனைக்கும் பொறுப்பேற்கவும் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்கிற கர்மா தியரி காங்கிரஸ் கட்சி விஷயத்தில் வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. நேரு, இந்திரா பெயரைச் சொல்லியோ வாரிசு பரம்பரை என்றோ காங்கிரஸ்கட்சி  இனிமேலும் பிழைத்திருக்க எந்தவொரு வழியுமில்லாமல் மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருக்கிறது.  

லோக்சபா விவாதங்களை நேரலையில் கேட்டுக் கொண்டே இந்தப் பதிவை இந்த அளவுடன் முடித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.
  
     

மண்டேன்னா ஒண்ணு! #காஷ்மீர் பிரிவினைவாதிகளை விட தேசம் பெரிது!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370, 35A  இவைகளை நீக்கும் அரசாணைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இன்றைக்கு அரசாணையும் வெளியாகி விட்டது. அரசியல் சாசனத்தின் தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருந்த  இந்த சட்ட அந்தஸ்து நீக்கப்பட்டிருப்பதான அறிவிப்புக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலே தான் இருந்தாலும், கூச்சல், அமளிகளிலேயே உள்துறை அமைச்சரைப் பேசவிடாமல் தடுத்துவிடலாம் என்று கூவிக் கொண்டிருக்கிற காட்சியை நேரலையில் பார்த்துக் கொண்டே இதை எழுதுகிறேன். திமுகவின் திருச்சி சிவா ஒரு point of order கிளப்ப கலிங்கப்பட்டி வைகோ இது ஜனநாயகப் படுகொலை என்றெல்லாம் கூச்சலிட்டு      தங்களுடைய ஜனநாயகக் கடமையைச் செய்து முடித்துவிட்டார்கள்.


இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்த நடக்கப்போகிற விஷயங்களுக்கு முன்னோட்டமாக, என்ன இருந்தது என்பதை இந்த 12 நிமிட செய்தித் தொகுப்பில் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். எதுவும் புதிதல்ல என்றாலும் காஷ்மீர் விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலங்களில் ரெண்டும் கெட்டானாகவே இருந்து குழப்பிவந்ததற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆக, 2019 தேர்தல்களில் பிஜேபி வாக்களித்தபடியே காஷ்மீர் விவகாரங்களில் ஒரு தெளிவான முடிவை எடுத்து, செயலிலும் காட்டியிருக்கிறது. தற்காலிக நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ஆர்டிகிள் 370, அதற்கடுத்து, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே  அரசியல் சாசனத்தில் இடைச் செருகலாக செய்யப்பட்ட பிரிவு 35A .இரண்டும் ஜனாதிபதி ஒப்புதலுடன் ரத்துசெய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது.  அது தவிர லடாக் பிரதேச மக்கள் விருப்பப்படி லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருப்பதும்   ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருப்பதும் இன்றைக்கு நடந்திருக்கிற  நல்ல விஷயம். 

காங்கிரசும் அதன் ஊழல் கூட்டாளிகளும் குட்டையைக் குழப்ப என்னென்ன செய்யப் போகிறார்கள்,  முடியடிக்க பிஜேபி என்ன செய்யப்போகிறது என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மீண்டும் சந்திப்போம். 


ஒரு புதன் கிழமை! வழக்கம்போல அரசியல்!

எப்போதும் போல அரசியல் தான்! ஆனால் வழக்கமான அரசியல் தானா என்ற கேள்வியை, காங்கிரஸ் கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கிற ராகுல் ராஜினாமா நாடகம் எல்லை மீறிப்போய் ஆன்டி கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டே வருவதை சென்ற 29ஆம் தேதி ஒரு ட்வீட்டர் செய்தியில் தெளிவாகச் சொல்லியிருந்தார்! So Congress attempting Kamraj plan 2? But don’t forget, 2019 is not 1963, Rahul Gandhi is not Nehru/Indira, Modi is the opponent not a Morarji, and ‘new’ India is not an ancien regime.. will need more than mass resignations to revive grand old Party IMHO.


ஆக, காங்கிரஸ் ராஜினாமா தமாஷா எங்கே போய்க் கொண்டு இருக்கிறதாம்? செயல்படவே முடியாத வெறும் தலையாட்டிக் பொம்மைகளை காங்கிரஸ் காரிய கமிட்டியில் வைத்துக் கொண்டு யாரிடம் எப்படி என்னவிதமான பொறுப்பை எதிர்பார்ப்பதாம்? சோனியா வாரிசுகளுக்கு ஆமாம்சாமி போடுகிற காக்கைக் கூட்டம், கட்சியை எப்படி வளர்க்க முடியும்? ஆனாலும் கூட ஒரு காங்கிரஸ்கார கபில் சிபல் நடத்துகிற ஒரு சேனலில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதிகம் அனுபவித்த பர்க்கா தத் என்ன சொல்கிறார்? எப்படி விவாதிக்கிறார் என்று பார்க்கும்போதே ராஜ்தீப் சர்தேசாய் ட்வீட்டரில் சொன்ன இன்னொரு கமெண்ட் தான் உடனடி கவனத்துக்கு வருகிறது.

  • There is no one but to lead the Cong today , the Puducherry CM tells me.. So now Cong is Rahul, Rahul is Cong and he doesn’t want to lead: bahut confusion hai! என்று சொல்லி முகநூலில் இந்த 4 நிமிட வீடியோவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்!காங்கிரஸ்காரன் சொல்கிறானோ இல்லையோ, கூடிய சீக்கிரமே ஜனங்களே பொங்கியெழுந்து ராகுலிடம் எடத்தைக் காலிபண்ணு! காத்து வரட்டும் என்று சொல்வார்களா என்கிற சுகமான கற்பனை ஒன்று தொடர்ந்து வருகிறதே!


    அதே திரங்கா டிவியில் இன்னொரு சுவாரசியமான விவாதம்! அதே பர்க்கா தத்! கூட விவாதிப்பவர்கள் வேறு. இந்த முறை காஷ்மீர் விவகாரம் மீதானது. காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் ஆர்டிகிள் 370 தற்காலிகமானதுதான் என்று நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததில் இருந்து காஷ்மீர் பிரச்சினை மீதான ஊடகக் கவனம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. அரசியல் ஆர்வம் உள்ளவர்கள், காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். முழுப்பிரச்சினையையும் இந்த வீடியோவில் பார்த்துப் புரிந்து கொள்ளமுடியாது. என்றாலும், விவரங்களைத் தேடித்தெரிந்துகொள்ள து ஒரு தொடக்கமாக இருக்கும்.

    370 ஐ விட ஆர்டிகிள் 35A எவ்வளவு மோசடியானது,
    நீக்கப்பட வேண்டியது என்பதற்கான காரணங்களை கூகிளில் தேடினாலே, நிறைய
    தகவல்கள் கிடைக்கும்!


    காஷ்மீரில் இந்திய அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டியும் கூட அங்கே இருந்த அரசியல் சக்திகள் அந்தப்பணம் ஜனங்களுக்குப் போய்விடாமல், தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டது ஒருபுறம். இன்னொருபுறம் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானிய கைக் கூலிகளுடன் சேர்ந்து கொண்டு ஒரு தனித்தீவாகவே ஜம்மு காஷ்மீரை வைத்திருந்ததான பழைய காங்கிரஸ் ஆட்சிக் கால கையாலாகாத நிலைமை இனிமேலும் தொடரமுடியாது என்று அமித் ஷாவின் அறிவிப்பு தெளிவுப்படச் சொல்லியிருக்கிறது.

    இது ஒரு நல்ல தொடக்கம். ஆனாலும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. அதைச் செய்வதற்கான உறுதியும், மனோபலமும் பாரதீய ஜனதா கட்சிக்கு இருப்பதற்கு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஆதரவாக இருக்க வேண்டிய நேரம் இது. குறுகிய கட்சி அரசியல் செய்கிற விஷயமில்லை இது.

    இங்கே கொடுத்திருக்கிற காணொளிகள் மூன்றையும் பார்ப்பதற்கு சுமார் 2 மணிநேரம் தேவைப்படலாம். ஆனாலும் மிக முக்கியமான சப்ஜெக்ட் என்பதால் இது நேர விரையம் இல்லை, விஷயத்தை இரு வேறு கோணத்தில் பார்த்துப் புரிந்துகொள்ள மிக நல்லதொரு தொடக்கம்.

    மீண்டும் சந்திப்போம்
    uote Tweet