Showing posts with label ஈவெரா. Show all posts
Showing posts with label ஈவெரா. Show all posts

தம்பட்டம் :: அடிப்பதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா?

இந்தப்பக்கங்களில் Cambridge Analytica முதற்கொண்டு இங்கே பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் வரை வெகுஜன அபிப்பிராயங்களை மாற்ற எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பல பகிர்வுகளில் பார்த்து  இருக்கிறோம். அது நினைவில் இருக்குமானால், First Post தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கிற Massive tweet volumes, complex hierarchies, coordinated attacks: Hacker reveals how BJP, Congress IT cells wage war on social media  என்று நீரத் பந்தரிபாண்டே எழுதியிருக்கிற செய்திக் கட்டுரையை புரிந்து கொள்ளவும், அதிர்ச்சி இல்லாமல் கடந்துபோகவும் முடியும்! 

 
இப்படிப்படம் போட்டு இதுதான் காங்கிரசின் IT Cell இயங்குகிற விதம் என்று சொன்னால் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்? உதாரணமாக எனக்கு ட்வீட்டர் கணக்கு இருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி  புள்ளிகள் என்ன பகிர்கிறார்கள் என்பதை நான் அதிகம் பார்ப்பதும் இல்லை, அவைகளைப் பகிர்ந்து கொள்வதும் இல்லை என்றால் இவர்களுடைய பிரசார யுத்தம் என்ன மாதிரியான விளைவை என்னிடம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அபிப்பிராயங்களை நானாக யோசித்துத்தான் உருவாக்கிக் கொள்கிறேன் என்ற நிலையில், இவர்கள் என்னதான் தலைகீழாக நின்று முயற்சித்தாலும், என்ன ரிசல்ட்டை கொடுத்துவிடும்? முகநூல் கணக்கும் இருக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பரவலாக கவனிக்கிறேன், ஆனால் அங்கே எதையும் எழுதுவது இல்லை. ஆனாலும் முகநூல் என்னை வேவு பார்க்கிறது. பிரவுசரில் எதையெல்லாம் தேடினேன், இங்கே பதிவுகள் உட்பட என்னென்ன எழுதினேன் என்பதையெல்லாம் கண்காணித்து, நல்லபிள்ளை மாதிரி suggested pages, suggested friends என்று பல செய்திகளை  முன்னிறுத்தி ஆழம்பார்ப்பதைத் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதனாலென்ன? நான் பார்க்க வேண்டிய செய்தி எது என்பதை வேண்டுமானால் அவர்கள் முதன்மைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் என்னுடைய அபிப்பிராயத்தை உருவாக்கவிட நான் அனுமதித்ததே இல்லை என்றால் என்ன செய்வார்கள்?

ஆனால், இப்படி உறுதியாகச் சொல்வதுமே, எந்தச்செய்தியானாலும், அதை   க்ராஸ் செக் செய்யாமல், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல்,அப்படியே நம்புவதில்லை என்பது இன்று நேற்றல்ல, இளம் வயதிலேயே, கற்றுக்கொண்ட ஒரு விஷயம்! காரணம் நாங்கள் பலவிதமான ஜகஜாலப் புரட்டுகளில் திமுக ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்த விதத்தை நேராகப் பார்த்த தலைமுறை! ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர்களால் முன்னெடுக்கப் பட்டது, திமுகவின் மொழிப்போர் தியாகிகள் எல்லாம் அதில் பின்னல் வந்து சேர்ந்துகொண்டு, அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் என்பதை அந்தநாட்களிலேயே புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள். ஆக கடந்த 55 ஆண்டு கால அரசியலைப் பார்த்து வளர்ந்ததில் கிடைத்திருக்கிற அனுபவ பாடம் அது!


ஜனவரி 30 என்றால் உங்களுக்கு உடனடியாக என்ன ஞாபகத்துக்கு வரும்? என்னது? காந்தியை சுட்டுட்டாய்ங்களா? என்று பழைய கதையெல்லாம் சொல்ல வராதீர்கள்! ஜனவரி 30 என்றால் மதுரைக் காரர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள்! பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அழகிரி விசுவாசிகள் விதவிதமாய் வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் இந்த ஆண்டு கலக்கல் என்ன என்று வேடிக்கைபார்ப்பதே மதுரைவாசிகளுக்கு ஒரு  தனித்துவமான எண்டெர்டெயின்மென்ட் என்றால் நம்புவீர்களா? இந்த ஆண்டு கலக்கல், கொஞ்சம்  கலக்கத்துடன் வந்திருக்கிற மாதிரித்தான் தெரிகிறது!
கலக்கத்திலும் கூட ரைமிங் விட்டுப்போகவில்லை!
                      

ஜம்மு காஷ்மீரில் சொகுசாய் அதிகாரத்தை அனுபவித்த முன்னாள்  முதல்வர்கள் மூவரும் இப்போது வீட்டுச் சிறையிலும் கூட எந்தக் குறையுமில்லாமல் தான் இருக்கிறார்கள்! எப்போதும் மீசைதாடி எதுவும் இல்லாமல் பளபளவென்று ஷேவ் செய்த முகத்துடன் இருக்கிற ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா இருவரில் ஒமர் அப்துல்லா மட்டும் நூறுநாட்களைத் தாண்டி ஷேவ் செய்துகொள்ளாமல் சிரித்த முகமாக தாடி மீசையுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியானது. பார்த்துவிட்டு மம்தா பானெர்ஜி, இங்கே இசுடாலின் எல்லோரும் கலங்கினார்களாம்? !!


தமிழக பிஜேபி சார்பில் ஷேவிங் செட்டை ஒமர் அப்துல்லாவுக்கு அனுப்பி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி! சிகுலர் ஆசாமிகள் இதற்கு என்ன சொல்லிப் பொங்கினார்கள் என்பது தெரியவில்லை.  ஒமர் அப்துல்லா மீது தமிழக பிஜேபிக்கு திடீரென்று பாசம் வந்துவிட்டதா என்ன?!
ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ்காரர்கள், அரசியல் சாசனப்புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு  படித்துப்பாருங்கள் மோடி என்று அனுப்பியதாக செய்தி வந்ததே! நினைவு இருக்கிறதா?  அந்தச் செய்தி கொடுத்த உந்துதலில் தமிழக பிஜேபி இப்படிச் செய்ததோ என்னவோ!!

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறதே பதிவு என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் ஒன்றுடன் ஒன்றை சேர்த்துப் பாருங்கள்! தங்கள் ஆட்சியின் சாதனைகளை அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய பிஜேபியின் ஐடி செல், அதில் முழுகவனத்தை செலுத்தவிடாமல், காங்கிரஸ் உள்ளிட்ட உதிரிகள் கிளப்புகிற அக்கப்போர்களுக்கு பதில் சொல்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறது. காங்கிரசின் ஐடி செல்லுக்கு, அதன் தலைவர்களுடைய சாமர்த்தியம் என்னவென்று சொல்லமுடியாதே! அங்கே இங்கே என்று கிடைக்கிற இடங்களில் எல்லாம் கல்லெறிந்து விட்டு ஓடிவிடுவது எளிதல்லவா? அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்!

மு.க. அழகிரிக்கு ஐடி விங், செல் எல்லாம் கிடையாது! இப்படிப் போஸ்டர் அடித்து ஒட்டுகிற விசுவாசிகள் மட்டும்தான்! அவர்கள் போஸ்டர் அடித்துக் கலக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

நம்மூர் அரசியலின் தரம், வீச்சு இவ்வளவுதான்! The Great Hawk என்றெல்லாம் Netflx படமெடுக்கிற அளவுக்கு இன்னமும் போகவில்லை! நம்மூருக்கு பிரசாந்த் கிஷோர் மாதிரி தேர்தல் உத்தி வகுக்கிற உதார்களே கொஞ்சம் அதிகப்படி! காங்கிரசின் இமேஜை மீட்டு (முட்டுக்) கொடுக்க எண்பதுகளில் Rediffusion என்ற ப்ராண்ட் மேனேஜர்களையும் பார்த்த அனுபவம் வேறு இருக்கிறது. அதுவும் போக, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே  கட்டமைக்கப்பட்ட  ஈவெரா ப்ராண்ட், ரஜினிகாந்த் என்ற நடிகர் பேச்சிலேயே உடைந்து நொறுங்க ஆரம்பித்ததையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அப்புறமும் என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.
            

இட்லி வடை பொங்கல்! #59 தமிழருவி! ரவீந்திரன் துரைசாமி! அர்ஜுன் சம்பத்!

எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்காக முதலில் ஒரு ஸ்பெஷல் காணொளி! 30 நிமிடம்தான், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் நான் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்று எழுதிய பதிவில் சொன்னதைப் புரிந்துகொள்ள அதுவே உதவியாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்! நீங்களும் பாருங்களேன்!

  
இது நக்கீரனுக்குத் தமிழருவி மணியன் அளித்த பேட்டி. ரஜனிகாந்த் மீது கழகங்கள் சுமத்துகிற குற்றச்சாட்டு அத்தனைக்கும் பதில் சொல்கிறார். ரஜனி சங்கியோ பிஜேபியோ இல்லை என்றும் சொல்கிறார். அப்படி என்றால் ரஜனிகாந்த் யார்? அதைச் சொன்னாரா? 

தமிழக அரசியல்களம் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமானால் திராவிடங்களின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டே ஆகவேண்டும். அதன் முதல் கட்டமாக விசிக, பாமக, இடதுசாரிகள் திருகல் முகன் காந்தி, வேல்முருகன், சுபவீ செட்டியார் போன்ற பலபத்து உதிரிகளைக் கழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை நீண்டநாட்களாகவே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  


அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி  இந்த 21 நிமிட வீடியோவில் ரஜனிகாந்தை கிறிஸ்தவ, முஸ்லிம் வெறுப்பில்லாத இந்து என்று அடையாளப்படுத்துகிறார் (இங்கே பெரும்பாலான ஹிந்துக்கள் அப்படிப்பட்ட இயல்புள்ளவர்கள் தானே!) என்பதில் இசுடாலினை சிறுபான்மையினர் ஆதரவுக்காக இந்துவிரோதி என்று அடையாளப்படுத்துகிற அவசரம் தான் தெரிகிறது.

Mதமிழ் சேனலில், அந்தநாட்களில் பொதிகை தொலைக் காட்சியில் பார்த்த நிஜந்தன், பதில்களைக் கேட்டுப்பெறுகிற விதத்தில் அதிகம் குறுக்கிடாமல் கேள்விகளை மட்டும் முன்வைக்கிறார். ரவீந்திரன் துரைசாமி ரஜனியைப்பற்றி பேசுவதை விட  இசுடாலின் பற்றிய மதிப்பீட்டையே அதிகம் வைக்கிறார். திமுக அளவுக்கு அதிமுக, ரஜனியைப் பார்த்து பயப்படவில்லை என்றும் சொல்கிறார் என்பதில் ஏகப்பட்ட ஆனால், லாம் களுடன்!  


தமிழருவி மணியன் பேசியதில் இருந்ததை விட. ஏகப்பட்ட IFs and BUTs ரவீந்திரன் துரைசாமி பேச்சில் இருந்ததை கவனித்திருப்பீர்கள்! IFs and BUTs எதுவும் இல்லாமால் இது இப்படித்தான் என்று ஓங்கியடித்துப் பேசுகிறவர் ஒருவரும் வேண்டாமோ? அர்ஜுன் சம்பத் அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். வீடியோ 21 mts.
கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொண்டு இடையிடையே குறுக்கிடாமல் பதிலுக்காகக் காத்திருக்கும் நிஜந்தன் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய ஊடகக்காரர் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்வோமா?

மீண்டும் சந்திப்போம்.       
               

ஈவெரா! பகுத்தறிவு பரிசுத்த ஆவி இனிமேலும் வேகுமா?

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா? இப்படி கேள்வி எழுப்பிய திராவிடர்கழகத்தின் சேலம் வழக்கறிஞர் அருள்மொழியின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பதை இப்போது சொன்னால் அதுதானையா செகுலரிஸம் என்று ஈஸியாகக் கடந்துபோய்விடுகிற ஒரு வினோதமான சமூகம் நம்முடையது! துக்ளக் 50வது ஆண்டுவிழாவில் ரஜனிகாந்த் பேசியது என்னவோ 12 அல்லது 13 நிமிடம்தான்! என்ன context இல் பேசினார் என்பதை மறந்து மனம்போன போக்கில் இங்கே சில சேனல் விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் திரித்துப் பேசினார்கள்! ஆனால் அதை திராவிட jingoism என்று இனம் கண்டுகொள்ள முடியாதபடி வெறும் பரப்புரைகளிலேயே வளர்ந்த திராவிடப் பம்மாத்து தான் என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?


தந்தி டிவியின் ஆயுத நிகழ்ச்சிக்கு ரஜனியின் நிறம் காட்டுகிறதா பெரியார் பேச்சு என்று தலைப்பிட்டு அந்தப் பேச்சுக்கு சாயம் பூசமுற்படுவது போல இருந்தாலும், ஹரிஹரன் நிகழ்ச்சியை நடத்தியவிதம் தந்திடிவியின் பச்சோந்தித்தனத்தை, இப்போதிருக்கும் திமுக சார்புநிலை இனிவரும் நாட்களில் மாறினாலும் மாறலாம் என்பதைக் காட்டுவதாக இருந்தது என்றே எனக்குப் படுகிறது. வீடியோ 44 நிமிடம்  முதலில் பேசிய துக்ளக் ரமேஷ், ரஜனி துக்ளக் ஆண்டுவிழாவில் என்ன context இல் பேசினார் என்பதைச் சொல்கிறார். சேலம் பேரணியைக் குறிப்பிட்டதில் என்ன நடந்தது என்று தான் சொன்னாரே தவிர ஈவெரா பெயரைக் குறிப்பிடவே இல்லை, ரஜனி தன்னுடைய கட்சியை ஆரம்பித்து அதனுடைய கோட்பாடு என்ன என்று சொன்ன பிறகே அது என்ன சாயம் என்று பார்க்க வேண்டும் என்று மேற்கொண்டு விவாதிக்க விஷயமே இல்லை என்றாக்கி விட்டார். க்ளைமேக்சுக்குப் பிறகு நீட்டிக்கப் படுகிற விஷயத்தை anti climax என்று மட்டும் தான் சொல்ல முடியும். ஆனால் விவாதத்தில் பங்கு கொண்டவர்கள் அத்தனைபேரையும் தனியாகச் சமாளிக்க முடியாமல் திக சார்பில் பேசவந்த ஓவியா திணறியதை ஹரிஹரன் குறுக்குச்சால் ஓட்டிக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? தந்திடிவி ஆதித்தன்கள் நடுநிலை வகிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்றா? மதில்மேல் பூனை என்றா? ஆனால் நேற்றைய சேனல் விவாதக் கூச்சல்களில் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருந்தது இது தான் என்று தோன்றுகிறது. 

நியூஸ் 7 சேனலில் ஈவெராவைத் தொட்டுப் போரைத் தொடங்குகிறாரா ரஜனி என்று தலைப்பு மட்டும் பிரமாதமாக! ஆனால் 62 நிமிட விவாதத்தின் சாரம் மானாவாரியாக சேற்றை வாரிவீசுவது என்றே இருந்ததால் அதிகப் பொறுமை இருப்பவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாக! வரவர சேனல் விவாதங்களைப் பார்க்கவும் கூட எதையும் தாங்கும் இதயம் வேண்டி இருக்கிறதே! இதயத்தை இரவல் கொடுத்தவரும் வாங்கியவரும் போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்கிற நிலையில் அவர்கள் ஆரம்பித்துவைத்த தெருக்கூத்தின் தாக்கம் இன்றைக்கு அவர்கள் வழி வந்தவர்களைப்  பதம் பார்க்கக் கிளம்பியிருக்கிறதோ? News 18 தமிழ் சேனலின் குணசேகரன் எப்படித் துடித்திருப்பார், தவித்திருப்பார் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சுகமாக இருக்கிறது! லிங்க் வேண்டுமா? பின்னூட்டத்தில் கேளுங்கள் தருகிறேன்!😎😎😎     

இப்போதும் கூட ரஜனியை ஒரு மாற்றத்துக்கான தொடக்கம் என்றோ நம்பிக்கை நட்சத்திரம் என்றோ என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் செலெக்டிவாக இந்துமதத்தை இழிவுபடுத்துவதை ஒரு தொழிலாகவே வைத்திருக்கும் உதிரிகள், திக, விசிக, மார்க்சிஸ்டுகள் இப்படிப் பலவிதமான கும்பல்களைக் கதற விட்டிருக்கிறார் ரஜனி என்பதில் சந்தேகமே இல்லை! 


ரஜனியை ஏற்காத டாக்டர் சுப்ரமணியன் சுவாமியே கூட இந்தவிஷயத்தில் ரஜனி உறுதியாக நின்றால் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள உதவி செய்வேன் என்று சொல்லியிருக்கிறார்! அது மட்டுமா? சோனியா மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா நில ஊழல் விவகாரங்களில் சிக்கியிருப்பதில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதில் டாக்டர் சுவாமி என்ன சொல்லியிருக்கிறார் என்றும் பாருங்கள்! வீடியோ 10 நிமிடம்.    


மாப்பிள்ளை செல்லம் ராபர்ட் வாத்ரா நில ஊழல்களில் மாமியார் பெயரும் சிக்கியிருப்பது இந்திரா மெச்சிய இத்தாலிய மருமகளின் விதி! 

மீண்டும் சந்திப்போம்.
       

அரசியல் இன்று! தகர்க்கப்படும் பிம்பங்கள்! ஈவெரா!

பதிவர் கிரி சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதிய ஒரு கருத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ரஜனி காந்த் என்கிற ஒரு நடிகனை நான் ரசித்தது இல்லை என்பதை இந்தப் பக்கங்களில் மிகவெளிப்படையாகவே எழுதி வந்திருக்கிறேன். அதேபோல அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தான  ஊகங்களைப் பற்றி இன்னொரு ஊகமாகச்  சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதால் அதைப் பற்றி எதையுமே நான் எழுதியதில்லை.

ஆதாரம் வேண்டுமா? கி வீரமணியின் 
ஒப்புதல் வாக்குமூலம் இருக்கவே 
இருக்கிறது! இன்றைய துக்ளக் 
அட்டைப்பட நையாண்டி!  

ஆனால் எப்போதும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எதையாவது சொல்லிவிட்டுப் போய்விடுகிற ரஜனி ஒருவாரத்துக்கு முன்னால் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ஒருவிஷயத்துக்காக, இங்கே திராவிடங்கள்   கதறுவது, பதறுவது, சமாளிப்பு, மறுப்பு, மன்னிப்புக் கேள் இல்லையேல் வீடு முற்றுகை என்றெல்லாம் கூவுவதற்கெல்லாம்  இன்று காலை ஒரு  தெளிவான பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விட்டார்.
ஒரு தீர்மானத்தோடுதான் இருக்கிறார்  என்பதைக் காட்டிய முதல் நிகழ்வு இதுதான் என்பது என் பார்வை.


ரஜினிகாந்தும் மற்றவர்களும் காட்டுகிற ஆதாரம், திராவிடங்களின் வெற்றுக்கூச்சல், மிரட்டல்கள் எல்லாமே ஒருபொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்வதாலேயே உண்மையாகிவிடாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


யார் சொல்வது பொய் என்ற கேள்விக்கு சாணக்யா தளத்தின் இந்த 3 நிமிட வீடியோ விடை சொல்கிறது.


நேற்றே WIN News மக்களுக்காக நிகழ்ச்சியை உண்மை கண்டறியும் விவாதமாக ஒரு 59 நிமிடம் நடத்தி முடித்து விட்டார் மதன் ரவிச்சந்திரன். திராவிடப்புரட்டுகள் சாயம் வெளுத்துப்போனது எல்லாத்திக்கிலும் பரவுகிறதே!   உண்மை என்று பத்திரிகை நடத்தினால் மட்டும் திராவிடர் கழகம் செய்கிற புரட்டுகள் உண்மை ஆகிவிடுமா? 


1971 இல் நடந்தது என்ன? நேரடியாகப் பார்த்தவர், எதிர்த்து கண்டன கோஷம் போட்டவருமான  திரு K N லட்சுமணன், ஒரு வழக்குப் போட்டதையும் தானும் சோவும் சாட்சியம் சொன்னதையும் அது தள்ளுபடி செய்யப் பட்டதையும் சொல்கிறார். சுபவீக்கள் என்ன தான் மழுப்பலான சமாளிப்பு செய்தாலும் உண்மையை நீண்டகாலம் மறைக்க முடியாது.

ஆக தமிழக அரசியலில் ரஜனிகாந்த், ஈவெரா மீது கட்டமைக்கப்பட்ட மாயபிம்பத்தை பங்ச்சர் செய்து முடித்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது என்பது தான் செய்திகள் காட்டும் உண்மை. 

மீண்டும் சந்திப்போம்.       

மண்டேன்னா ஒண்ணு! #காஷ்மீர் அரசியல்!

புதுப்புது அர்த்தங்கள் என்று நிகழ்ச்சிக்குத் தலைப்பு வைத்து இருந்தாலும், புதிய தலைமுறைக்கு அதன் இன்றைய அரசியல் கூட்டுக்கு ஏற்றவிதத்திலேயே செயல்படுவது தெரிந்தது தான்! அப்படியானால்,இங்கே எதற்காக அவர்களை, அவர்கள் நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்துகிற மாதிரி எடுத்துப் போட வேண்டும் என்றொரு கேள்வி நண்பர்களுக்கு வரலாம்!


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் இரண்டாண்டு கால மாநிலங்களவை உரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்ட நிகழ்ச்சியில் ரஜனிகாந்த் பேசியது வழக்கம்போல சர்ச்சைக்குள்ளாக்கப் பட்டிருக்கிறது. 


எனக்கு  ரஜனியைபற்றியோ அவரது so called அரசியல் பிரவேசம் பற்றியும் நல்ல அபிப்பிராயம் எதுவுமில்லை என்றாலும், இந்த ஒரு நபரின் பேச்சை மட்டுமே வைத்து தமிழக அரசியல் களம் ரியாக்ட் செய்வது மிகவும் வினோதமாக இருக்கிறது. அதேபோல விஜய்சேதுபதி கூடத் தன மாறுபட்ட கருத்தை இங்கே உள்ளூரில் பேசாமல் வெளிநாட்டுக்குப் போய்ப் பேசி இருக்கிறார். ஆனால் ஒரு   குறுகிய கண்ணோட்டத்தைத் தாண்டி, ஒரு பரந்த கண்ணோட்டத்தில் எல்லாத்தரப்பையும் உள்ளடக்கியதாக ஒரு அரசியல்விவாதம் நடத்துவதற்கு என்ன தடை  இருக்க முடியும்? முதல் வீடியோ 22 நிமிடம்தான். 2வது 6 நிமிடம்.


இந்த 22 நிமிட வீடியோ 7 வருடப் பழசுதான்! இன்றைக்கும் கூட சுவாரசியமான நேர்காணலாக இருக்கிறதே! என்ன காரணம்  என்று பார்த்துவிட்டு ஊகிக்க முடிகிறதா சொல்லுங்களேன்!

இன்றைக்குப் பார்த்தது, படித்தது, அதில் பிடித்தது:
ஈவேரா இதையும் சொன்னார்:- "தமிழனின் 4 எதிரிகள்...
1)பார்ப்பனர்கள் 2)கிறிஸ்தவர்கள் 3)முஸ்லீம்கள்
4)நம்மில் கீழ்த்தரமானவர்கள்...
இதில் 'நம்மில்' கீழ்த்தரமானவர்கள் என்று அவர் எந்த சமூகப் பிரிவைக் குறிக்கிறார் என்பதை அவரே விளக்கியும் உள்ளார்.
குறிப்பிட்ட சாதிப்பெண்கள் ரவிக்கை போட ஆரம்பித்த பிறகுதான் துணி விலை ஏறிவிட்டது என்றும் ஈவேரா கூறி இருக்கிறார்!
பார்ப்பானுக்கு பயந்து கொண்டு முஸ்லீமை ஆதரிப்பது, சேற்றுக்கு பயந்து மலத்தில் கால் வைப்பது போல என்றும் ஈவேரா கூறி உள்ளார்!
'இந்தத் தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்'- 'தமிழ் காட்டுமிராண்டி மொழி'... என்றும் ஈவேரா கூறி உள்ளார்!
சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசும் போது 'கண்ணகி முலையைக் கிள்ளி எறிந்தாளாம் - மதுரை பத்தி எரிஞ்சுதாம்! இதோ இங்க இருக்கற பொம்பளைகளில் ஒருத்தி கூடவா பத்தினி இல்லை? இதோ இந்தப் பென்சில் துண்டை எரி பார்ப்போம்?'- என்றும் மேடையிலேயே சவால் விட்டார் ஈவேரா!
இதை எல்லாமும்....
வி ஜ ய் சே து ப தி....
ஆதரிக்கிறாரா?
விஜய் சேதுபதிக்கு ஒரு ஆலோசனை! குச்சி மிட்டாயை சப்பினால் முழுசா சப்பணும்!
ஈவேரா என்ற குச்சிமிட்டாயின் ஏதோ ஒரு முனையை மட்டும் காஷ்மீர் விஷயத்தில் சப்பி இருக்கிறீர்கள் விஜய் சேதுபதி!
குச்சிமிட்டாயின் உருண்டையான நுனியின் ஏதோ ஒரு ஓரத்தைச் சப்பி உள்ளீர்கள்!
அடுத்த முறை ஈவேரா என்ற குச்சிமிட்டாயை சப்பும்போது முழுவதுமாக வாயில் செலுத்தி சப்புங்கள் விஜய் சேதுபதி!   

ஈவெராவைப் பற்றி பேசப்புகுந்தால் ஏகப்பட்ட முன்னுக்குப்பின் முரணான விஷயங்களையும் சேர்த்தேதான் பேச வேண்டியிருக்கும்!

மீண்டும் சந்திப்போம்,