Showing posts with label தகர்க்கப் படும் பிம்பங்கள். Show all posts
Showing posts with label தகர்க்கப் படும் பிம்பங்கள். Show all posts

அரசியல் இன்று! தகர்க்கப்படும் பிம்பங்கள்! ஈவெரா!

பதிவர் கிரி சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதிய ஒரு கருத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ரஜனி காந்த் என்கிற ஒரு நடிகனை நான் ரசித்தது இல்லை என்பதை இந்தப் பக்கங்களில் மிகவெளிப்படையாகவே எழுதி வந்திருக்கிறேன். அதேபோல அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தான  ஊகங்களைப் பற்றி இன்னொரு ஊகமாகச்  சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதால் அதைப் பற்றி எதையுமே நான் எழுதியதில்லை.

ஆதாரம் வேண்டுமா? கி வீரமணியின் 
ஒப்புதல் வாக்குமூலம் இருக்கவே 
இருக்கிறது! இன்றைய துக்ளக் 
அட்டைப்பட நையாண்டி!  

ஆனால் எப்போதும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எதையாவது சொல்லிவிட்டுப் போய்விடுகிற ரஜனி ஒருவாரத்துக்கு முன்னால் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய ஒருவிஷயத்துக்காக, இங்கே திராவிடங்கள்   கதறுவது, பதறுவது, சமாளிப்பு, மறுப்பு, மன்னிப்புக் கேள் இல்லையேல் வீடு முற்றுகை என்றெல்லாம் கூவுவதற்கெல்லாம்  இன்று காலை ஒரு  தெளிவான பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விட்டார்.
ஒரு தீர்மானத்தோடுதான் இருக்கிறார்  என்பதைக் காட்டிய முதல் நிகழ்வு இதுதான் என்பது என் பார்வை.


ரஜினிகாந்தும் மற்றவர்களும் காட்டுகிற ஆதாரம், திராவிடங்களின் வெற்றுக்கூச்சல், மிரட்டல்கள் எல்லாமே ஒருபொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்வதாலேயே உண்மையாகிவிடாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.


யார் சொல்வது பொய் என்ற கேள்விக்கு சாணக்யா தளத்தின் இந்த 3 நிமிட வீடியோ விடை சொல்கிறது.


நேற்றே WIN News மக்களுக்காக நிகழ்ச்சியை உண்மை கண்டறியும் விவாதமாக ஒரு 59 நிமிடம் நடத்தி முடித்து விட்டார் மதன் ரவிச்சந்திரன். திராவிடப்புரட்டுகள் சாயம் வெளுத்துப்போனது எல்லாத்திக்கிலும் பரவுகிறதே!   உண்மை என்று பத்திரிகை நடத்தினால் மட்டும் திராவிடர் கழகம் செய்கிற புரட்டுகள் உண்மை ஆகிவிடுமா? 


1971 இல் நடந்தது என்ன? நேரடியாகப் பார்த்தவர், எதிர்த்து கண்டன கோஷம் போட்டவருமான  திரு K N லட்சுமணன், ஒரு வழக்குப் போட்டதையும் தானும் சோவும் சாட்சியம் சொன்னதையும் அது தள்ளுபடி செய்யப் பட்டதையும் சொல்கிறார். சுபவீக்கள் என்ன தான் மழுப்பலான சமாளிப்பு செய்தாலும் உண்மையை நீண்டகாலம் மறைக்க முடியாது.

ஆக தமிழக அரசியலில் ரஜனிகாந்த், ஈவெரா மீது கட்டமைக்கப்பட்ட மாயபிம்பத்தை பங்ச்சர் செய்து முடித்துவிட்டார் என்பதை மறுக்க முடியாது என்பது தான் செய்திகள் காட்டும் உண்மை. 

மீண்டும் சந்திப்போம்.