இட்லி வடை பொங்கல்! #59 தமிழருவி! ரவீந்திரன் துரைசாமி! அர்ஜுன் சம்பத்!

எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்காக முதலில் ஒரு ஸ்பெஷல் காணொளி! 30 நிமிடம்தான், பொறுமையாகப் பார்க்க முடிந்தால் நான் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்று எழுதிய பதிவில் சொன்னதைப் புரிந்துகொள்ள அதுவே உதவியாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்வேன்! நீங்களும் பாருங்களேன்!

  
இது நக்கீரனுக்குத் தமிழருவி மணியன் அளித்த பேட்டி. ரஜனிகாந்த் மீது கழகங்கள் சுமத்துகிற குற்றச்சாட்டு அத்தனைக்கும் பதில் சொல்கிறார். ரஜனி சங்கியோ பிஜேபியோ இல்லை என்றும் சொல்கிறார். அப்படி என்றால் ரஜனிகாந்த் யார்? அதைச் சொன்னாரா? 

தமிழக அரசியல்களம் கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமானால் திராவிடங்களின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டே ஆகவேண்டும். அதன் முதல் கட்டமாக விசிக, பாமக, இடதுசாரிகள் திருகல் முகன் காந்தி, வேல்முருகன், சுபவீ செட்டியார் போன்ற பலபத்து உதிரிகளைக் கழித்துக் கட்டியே ஆக வேண்டும் என்பதை நீண்டநாட்களாகவே இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன்.  


அரசியல் விமரிசகர் ரவீந்திரன் துரைசாமி  இந்த 21 நிமிட வீடியோவில் ரஜனிகாந்தை கிறிஸ்தவ, முஸ்லிம் வெறுப்பில்லாத இந்து என்று அடையாளப்படுத்துகிறார் (இங்கே பெரும்பாலான ஹிந்துக்கள் அப்படிப்பட்ட இயல்புள்ளவர்கள் தானே!) என்பதில் இசுடாலினை சிறுபான்மையினர் ஆதரவுக்காக இந்துவிரோதி என்று அடையாளப்படுத்துகிற அவசரம் தான் தெரிகிறது.

Mதமிழ் சேனலில், அந்தநாட்களில் பொதிகை தொலைக் காட்சியில் பார்த்த நிஜந்தன், பதில்களைக் கேட்டுப்பெறுகிற விதத்தில் அதிகம் குறுக்கிடாமல் கேள்விகளை மட்டும் முன்வைக்கிறார். ரவீந்திரன் துரைசாமி ரஜனியைப்பற்றி பேசுவதை விட  இசுடாலின் பற்றிய மதிப்பீட்டையே அதிகம் வைக்கிறார். திமுக அளவுக்கு அதிமுக, ரஜனியைப் பார்த்து பயப்படவில்லை என்றும் சொல்கிறார் என்பதில் ஏகப்பட்ட ஆனால், லாம் களுடன்!  


தமிழருவி மணியன் பேசியதில் இருந்ததை விட. ஏகப்பட்ட IFs and BUTs ரவீந்திரன் துரைசாமி பேச்சில் இருந்ததை கவனித்திருப்பீர்கள்! IFs and BUTs எதுவும் இல்லாமால் இது இப்படித்தான் என்று ஓங்கியடித்துப் பேசுகிறவர் ஒருவரும் வேண்டாமோ? அர்ஜுன் சம்பத் அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார். வீடியோ 21 mts.
கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொண்டு இடையிடையே குறுக்கிடாமல் பதிலுக்காகக் காத்திருக்கும் நிஜந்தன் உண்மையிலேயே பாராட்டப் படவேண்டிய ஊடகக்காரர் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்வோமா?

மீண்டும் சந்திப்போம்.       
               

4 comments:

  1. நக்கீரன் தளத்தில் ஃபெலிக்ஸ் என்ற பையனை முதல் பேட்டியில் இருந்து பார்த்து வருகிறேன். இவர் யார்? யாருக்குச் சொந்தம்? எப்படி உள்ளே வந்தார்? என்று பலமுறை யோசித்து உள்ளேன். காரணம் புத்தக வாசிப்பு இல்லை. நெறியாளும் திறமை இல்லை என்று ஏகப்பட்ட இல்லை இல்லை. ஆனால் பயிற்சிகளம் போல இதனை பயன்படுத்த வாய்ப்பு கொடுத்து இருப்பார்கள் போல. இப்போது தான் தேறி வந்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      லயோலா விஸ்காம் படித்தவர்களெல்லாம் நக்கீரனுக்குக் கட்டுபடியாகாது என்பதால் ஃபெலிக்ஸ் கோவாலு சொந்தத் தயாரிப்பாக இருக்கலாம்! நக்கீரன் செய்தி அல்லது வீடியோக்களை நான் பார்ப்பது மிக அரிது அதனால் ஃபெலிக்ஸ்.முன்னைக்கு இப்போது தெரிவிட்டாரா என்று எனக்குத்தெரியவில்லை. தேறிய மாதிரியும் தெரியவில்லை! இந்தப்பேட்டியிலேயே நெறியாளர் முடிப்பதற்கு முன்னால் தமிழருவி மணியன் பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என்று முடிக்கிறார்!

      ஒரு நேர்காணலை நடத்துகிறவருக்கு என்னென்ன தகுதி இருக்கவேண்டும்? விஸ்காம் படித்து விட்டால் போதுமா? இப்படி நிறையக் கேட்டுக்கொண்டே போகலாம்! யார் பதில் சொல்வது?

      Delete
  2. த ம காணொளி பார்த்தேன் / கேட்டேன்.    ரஜினி மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறார் தம 

    ReplyDelete
    Replies
    1. அதை நம்பிக்கை என்றா பார்க்கிறீர்கள் ஸ்ரீராம்? எனக்கென்னவோ மணியனுக்கு அது பிழைப்பு என்பதாக மட்டுமே தெரிகிறது. பெயரளவுக்கு மட்டும் காந்தியம் பேசுகிறவருக்கு ரஜனிகாந்த் மீதென்ன அப்படி ஒரு நம்பிக்கை?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!