இட்லி வடை பொங்கல்! #58 ராமசந்திர குகா! ராகுல் காண்டி! ஒரு சுயவிளக்கம்!

கோழிக்கோட்டில் நடந்து வரும் கேரள இலக்கியத் திருவிழா 2020 இல் நேற்று ராமசந்திர குகா மறுபடியும் ஒரு கருத்தைச் சொல்லி, பரபரப்பான பேசுபொருளாக ஆகியிருக்கிறார். இலக்கியத் திருவிழாக்களில் அரசியல் என்பது ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவில் இருந்தே பார்த்துவருவதுதான்! ஆனால் நேற்று கேரள இலக்கியத்திருவிழாவில் ராமசந்திர குகா கொளுத்திப் போட்டிருப்பது நிறையவே வித்தியாசமானது, இன்னும் பலகாலத்துக்கு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது நேரு இந்திரா பரம்பரைக்கு வாய்த்திருக்கும் புது சோகம்! என்னவென்று ஒரு சுருக்கமான வீடியோ செய்தியாகப் பார்த்துவிடலாம்.


ராமசந்திர குகா என்னவோ இப்போதுதான் ராகுல் காண்டிக்கு எதிராகப் பேசுகிறார் என்பதல்ல. முன்பே பலமுறை பேசி இருப்பது தான்! Makers of Modern India புத்தக வெளியீட்டின் போது ராகுல் காண்டிக்கு அரசியல் சரிப்பட்டு வராதென்றால் வேறு வேலையைப் பார்க்க போகட்டுமே என்று காட்டமாகச் சொன்னவர்தான்! இப்போது கேரளமக்கள் ராகுல் காண்டியைத் தேர்ந்தெடுத்ததன் விபரீதங்களை முகத்தில் அறைகிற மாதிரி சொல்லிவிட்டு  அதே தவறை 2024 தேர்தலில் செய்யக்கூடாதென்றும் சொல்லி இருப்பது கூடுதல் விசேஷம்! இபின் கால்தூன் என்கிற 14 ஆம் நூற்றாண்டு அரேபிய சிந்தனையாளர் சொன்னதை வைத்து வாரிசு அரசியல் குறித்து அவர் டெலிகிராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் முன்பு சொன்னது தான்! இப்போதும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்   இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே அதைப் பார்த்திருக்கிறோம்.

A “fifth-generation dynast” Rahul Gandhi has no chance in Indian politics against a “hard-working and self-made” PM Narendra Modi, and Kerala did a disastrous thing by electing the Congress leader to Parliament, historian Ramachandra Guha said in Kozhikode on Friday. Guha said the reduction of the Congress from a “great party” during the freedom movement to a “pathetic family firm” now is one of the reasons for the ascendency of Hindutva and jingoism in India.   அதோடு நிறுத்திக்கொண்டாரா?

 “Kerala, you have done many wonderful things for India, but one of the disastrous thing you did was to elect Rahul Gandhi to the parliament.”  

“Narendra Modi’s great advantage is that he is not Rahul Gandhi. He is self-made. He has run a state for 15 years, he has an administrative experience, he is incredibly hard-working and he never takes holidays in Europe. Believe me I am saying all this in all seriousness,”  "But, even if Rahul Gandhi was “much more intelligent, more hard-working, never took a holiday in Europe, as a fifth-generation dynast he still will be at a disadvantage against a self-made person

சோனியாவையும் விட்டு வைக்கவில்லை. மக்களுடனான தொடர்பு விட்டுப்போன முகலாயர்கள் சாம்ராஜ்யம் சுருங்கிக்கொண்டே வந்த போதும் கூடத் தங்களை பாதுஷாக்களாக நினைத்துக் கொண்டு மிதப்பில் திரிந்த பழைய டில்லி சரித்திரத்தோடு  ஒப்பிட்டு எச்சரித்திருக்கிறார். ராகுல் காண்டியே ஒழிந்துபோ என்று மட்டும்தான் சொல்லவில்லை! ராகுல் காண்டி அரசியலில் இருப்பதால் தான் எதற்கெடுத்தாலும் நேருவையே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருடைய பொருமல். 

இந்தப் பேச்சில் ராமசந்திர குகா, தான் ஒரு நேரு விசுவாசி, ஆதரவாளன். அதேநேரம் நேரு பரம்பரைக்கு பல்லக்குத் தூக்குகிறவனில்லை என்கிற சுயவிளக்கம் தந்திருப்பதாக மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. முழு உரையும் எழுத்துவடிவில் இங்கே.  

இடதுசாரிகளையும் ஒருபிடி பிடித்திருக்கிறார். 

“Hypocrisy of the Indian Left — the fact that they loved other nations more than India”, “rise of aggressive nationalism worldwide” and “the rise of Islamic fundamentalism in neighbouring countries” are some other reasons behind the evident leap of Hindutva in India in the recent times."  

இட்லி வடை பொங்கல் இந்த அளவுக்குப்போதும் இல்லையா?! எனக்கே மிளகுக்  காரம் கொஞ்சம் அதிகமாகத் தான் தெரிகிறது. 

மீண்டும் சந்திப்போம்.   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!