அரசு என்ன செய்தாலும் அதை எதிர்ப்பது எங்கள் உரிமை, போராட்டம், கலகங்களைத் தூண்டுவது மட்டும் தான் எங்கள் வேலை என்றிருக்கும் இடதுசாரி உதிரிகள் கூட இப்போதெல்லாம் அரசியல் சாசன முகவுரையை மேற்கோள் காட்ட ஆரம்பித்திருக்கிற வினோதத்தைக் கவனித்திருக்கிறீர்களா? கடமைகள், பொறுப்பு இப்படி எதுவுமே இல்லாமல் உரிமைக்குரல் மட்டும் எழுப்புகிற ஓசிச்சோறு ஆசாமிகளை இந்தியத் திருநாட்டில் தான் பார்க்க முடியும் என்பதை அறிந்து வைத்திருக்கிறீர்களா? எதையும் விளையாட்டாக, லீவு நாள் கொண்டாட்டமாக மட்டுமே போராட்டங்களை நடத்தத் தயாராக இருக்கிற மாணவர்களையும் கெடுத்து, தங்களுடைய அரசியல் அஜெண்டாவை, ஜனநாயக வழிகளில் நடத்தாத திராணியில்லாத காங்கிரசும், இடதுசாரிகளும் கேஜ்ரிவால் போன்ற உதிரிகளும் CAA / NRC / NPR இப்படி எல்லாவற்றையும் எதிர்த்துப் போராட்டங்களை, கலகங்களைத் தூண்டிக் கொண்டே இருப்பதன் பின்னணி என்னவென்றாவது யோசித்துப் பார்த்ததுண்டா?
CAA / NRC விவகாரங்களைக் குறித்து இந்த 29 நிமிட வீடியோவில் பானு கோம்ஸ் எளிமையாக விளக்குகிறார். கொஞ்சம் கேட்டுத் தான் பார்க்கலாமே! இதன் பின்னணியில் தேர்தல் அரசியல் கணக்குகள் மட்டும் தான் இருக்கிறது என்பதுகூடப் புரியாத அத்தனை அப்பாவியா நீங்கள்? !!
புதுடில்லியில் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் CAA / NRC / NPR எதிர்ப்புக் குரல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே! என்ன காரணம் என்பதை PGurus தளத்தில் அட்சய் சந்தர் படம் போட்டே சொல்கிறார்!
Shift Shaheen Bagh protesters to makeshift camps: Subramanian Swamy to PM Modi - goo.gl/alerts/voG68 #GoogleAlerts
கீச்சை மொழிபெயர்
இடைஞ்சல் செய்வதொன்றே இந்தப் போராட்டத்தின் நோக்கம்! என்ன செய்ய வேண்டுமென்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வழி சொல்கிறார்! பிஜேபியில் இருந்து கொண்டே டெல்லி தேர்தல்களில் washout ஆக வழிசொல்கிற துணிச்சல் அவருக்கே உண்டானது!
MNS என்று தனிக்கடை நடத்துகிற ராஜ் தாக்கரே U டர்ன் அடித்து பிஜேபி பக்கம் நெருங்குகிறாராம்! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு வேறு நல்ல யோசனை தெரிந்தால் ராஜ் தாக்கரேவிடம் சொல்லட்டுமே! யார் தடுத்தார்களாம்? !!
கார்டூனிஸ்ட்டுகளுக்கும் கூடக் கவிஞர்கள் மாதிரிப் பொய்யிலேயே படம் வரைய லைசன்ஸ் இருக்கிறதா என்ன? IMF, பணமதிப்பிழப்போடு முடிச்சுப்போட்டு, காங்கிரஸ்காரன் மாதிரியே சொன்னதா என்ன? !!
இந்தப்பக்கங்களில் திரைப்பட விமரிசனம் என்று மிகக் குறைவாகவே இருக்கும்! காரணம் பெரிதாக எதுவும் இல்லை. ஒரு மாறுதலுக்காக நம்ம வால்பையனோட சேக்காளி எழுதின திரை விமரிசனம்!
Evil Skeptic மாதிரியான கான்செப்ட்ட தொட விரும்பற ஒரு கதை கன்வின்சிங்கா சொல்லப்படாமப் போறது ஒரு துரதிர்ஷ்டம் தான்; ஒருகட்டத்துல அதோட நோக்கமே போலித்தனமானதோனு சந்தேகம் வர வெச்சுடுது.
ராட்சசன் அளவுக்கு சைக்கோ மாரலி கரப்ட் கிடையாது. ஆனா வெறும் பொழுதுபோக்கு நோக்கத்தோட எடுக்கப்பட்ட ராட்சசன்ல கூட வில்லனுடைய தோள் மேல ஆடியன்ஸ் பயணிக்கல; கதை நெடுக சுவாரசியத்துக்குத் தேவையான பதட்டத்தக் கடத்துச்சு. ஆனா இதுல உள்ள நமத்துப்போன லாஜிக்குகளும் & சோதாவான கேரக்டர்களும் சைக்கோவோட கொலைகளப் பாத்து ஆடியன்ஸ் கைதட்ற நிலைமைய உண்டாக்கிடுது.
சைக்கோ/ சோசியோபாத்களுக்கு கண்டிப்பா ஒரு மோசமான குழந்தைப் பருவம் இருக்கணும்ன்ற பலவீனமான ஐடியாவ மிஷ்கினும் தூக்கிட்டு வருவாப்டினு எதிர்பாக்கல. சைக்கோலருந்து இளையராஜாவ கழிச்சுட்டு பாத்தா நடுநிசி நாய்கள் தான் மீதி இருக்கும்.
விமரிசனத்தைப் படிப்பதற்கு முன்னாலேயே, இதைப் பார்ப்பதைத் தவிர்க்கத்தான் நினைத்திருந்தேன்! விமரிசனம் பார்த்தபிறகு....... எண்ணம் உறுதியானது.
இங்கே கேள்விமேல் கேள்வியாக இருப்பதற்கு, யாரேனும் வந்து பதில்சொல்வார்கள் என்ற நப்பாசை கூடத்தான் இல்லை! அதுக்கென்னவாம் இப்போ? !!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!