இட்லி வடை பொங்கல்! #56 மோடி எதிர்ப்பு! இனிமேலும் கூட போணி ஆகுமா?

தமிழக அரசியல்கள நிலவரம், கூட்டணிகள் பற்றி இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை போல! அதனால் தமிழக மக்களின் நாடித்துடிப்பான, அல்லது பிரதான பொழுதுபோக்கான  மோடி எதிர்ப்பு எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது, 2019 தேர்தல்களில் போணியான மாதிரியே இனிமேலும் கூடப் போணியாகுமா  என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?


சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும்  ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன  என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ்  ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை.


1975 இல் வெளியான தீவார் (சுவர் The Wall) படத்தில் அமிதாப் பச்சன், சசிகபூர் பேசும் இந்தப்பகுதி, வசனத்தோடு இந்திய அரசியலை ஒப்பிட்டு ஆரம்பிக்கிற விதம் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. காரணம் இந்தப்படக்காட்சியில் மேஃபியா டான் ஆன அண்ணன் அமிதாப், போலீஸ் அதிகாரியான தம்பி சசியிடம் பேசுகிற வசனத்தின் இறுதிப்பகுதி. அண்ணன் தம்பியிடம் போலீஸ் வேளையில் என்ன இருக்கிறது 500 ரூபாய் சம்பளம் ஒரு குவார்ட்டர்ஸ், ஒரு ஜீப் இவ்வளவுதானே! என்னிடம் பங்களாக்கள் கார்கள் பேங்க் பாலன்ஸ் எல்லாம் இருக்கின்றன என்று சொல்வதற்கு பதிலாக, தம்பி என்னோடு அம்மா இருக்கிறாள் என்று சொல்கிற கட்டம். அம்மா என்கிற இடத்தில்  ஜனநாயகம் என்று வைத்துக் கொள்ள வேண்டுமாம்! அப்படியானால் சீனாவை மேஃபியா கூட்டமாகச் சொல்கிற மாதிரி அல்லவா ஆகிறது? (இப்படி யார் கேட்கப்போகிறார்கள் என்ற தெனாவட்டுடன் கட்டுரை தொடர்கிறது)  குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அங்கங்கே கிளப்பி விடப்படும் போராட்டங்களை வைத்தே மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொள்ளலாம், ஆனால் உண்மை அப்படியல்ல என்று பலவிஷயங்களைத் தொட்டு தலையைச் சுற்றி சுற்றி மூக்கைத் தொடாமலே முடிகிற சுற்றல் கட்டுரை. Deputy Editor  Debasish is a Jefferson Fellow and winner of multiple Hong Kong News and SOPA awards. He has worked and lived in Calcutta, São Paulo, Hua Hin, Bangkok, Beijing, and Hong Kong. என்ற அறிமுகத்தோடு தற்சமயம் சிட்னி பல்கலைக்கழகத்தின் Sydney Democracy Network இல்    Sr. Research Fellow ஆக இருக்கிறார் என்பதே வேறு பல விஷயங்களையும் சொல்லிவிடுகிறது.  


வீடியோ 10 நிமிடம் 

அன்னிய மண்ணில் ஒரு படுகொலையைச் செய்து விட்டு, தெனாவட்டாகவும் பேசுவது அமெரிக்க அதிபர்களில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டுமே கைவந்த கலை. இதற்கு முன்னால்  பில் கிளிண்டன் தகுதி நீக்கம் (impeachment)  செய்யப்படுகிற நிலையில் இருந்த போது இதேமாதிரி ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தினார் என்பது ட்ரம்புக்கும் கூட  ஒரு முன்னோடி இருந்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதே ஒரு வரலாற்று சோகம். இந்தப்படுகொலையைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே பார்க்கவும்      

அமெரிக்க ஊடகங்கள் மிகவும் விசித்திரமானவை. தங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு வேறொரு நியாயம் என்று வெட்கமே இல்லாமல் இரட்டை நிலை எடுப்பது வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் முதலான ஊடகங்களின் பொதுவான குணம். இவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான செய்திகளை பிரசுரிப்பதில் ஒருவித உள்நோக்கத்துடனேயே செயல்படுவதை எத்தனைபேர் இங்கே அறிந்திருக்கிறீர்கள்? வெட்கமே இல்லாமல், இந்தச் செய்திகளை மிகப்பெரிய விஷயமாக இங்கே பரப்புகிறவர்களை என்னவென்று சொல்வது?

      விவாதம் 48 நிமிடம் 

TimesNow TV NewsHour  விவாதங்களைப் பார்ப்பதே சமீப நாட்களில் வெகுவாகக் குறைந்து விட்டது என்பதை இங்கே ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன். காரணம் நேரப்பற்றாக்குறை என்பது மட்டுமே அல்ல. ஆனாலும் நாவிகா குமார் நடத்திய நேற்றைய NewsHour விவாதத்தைப் பார்த்தபோது, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அப்பட்டமாகத் திரித்து, அதென்னவோ இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டே எதிர்க்கிறமாதிரி ஒரு இல்லாதபூச்சாண்டி, அச்சத்தைக் கிளப்பிவிட்டு, கலகம், வன்முறை, போராட்டங்கள் என்று ஆரம்பித்தது நெல்லை கண்ணன்கள் மாதிரிப் பிள்ளைப்பூச்சிகளுக்குக் கூடக் கொடுக்கு முளைத்துக் கொட்டுகிற மாதிரி ஆகிவிட்டதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்? கோலம்போட்டுப் போராடின காயத்ரியின் முகநூல்பக்கத்தில் பாகிஸ்தான் சார்புள்ள அமைப்பின் தொடர்பு இருந்ததைப் போலீஸ் கமிஷனர் ஆதாரங்களுடன் வெளியிட்டதையும் தானே பார்த்தோம்! இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கே இருக்கிற திராவிட கழகம் இன்னபிற உதிரி அமைப்புக்களின் போர்வையில் திமுகழகம் மோடி எதிர்ப்பு ஒன்றை மட்டுமே விதைத்து, தேர்தல் அறுவடையை செய்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம்?

      
இந்த உள்ளூர்க் கேள்விக்கு நெல்லை கண்ணனை ஏன் திமுக கைவிட்டது என்ற விவாதத்தை  மதன் ரவிச்சந்திரன் நடத்தி விடைதேட முயற்சித்திருக்கிறார். விவாதம் 59 நிமிடம். நாடாளுமன்றத் தேர்தல்களில் வீரியத்தோடு எழுப்பிய நரேந்திர மோடி எதிர்ப்பு உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் கோலம் போடுகிற போராட்டமாகக் குறுகிவிட்டது. இன்னும் இந்தவொரு விஷயத்தை மட்டுமே வைத்து திமுக தொடர்ந்து அரசியல் செய்யமுடியும் என்றா நினைக்கிறீர்கள்?

விடை திமுகவிடமோ காசுக்குக் கூவுகிற ஊடகங்களிடமோ இல்லை! அது   உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. அதுவாவது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.           
       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!