துக்ளக் பொன்விழா நிறைவு! சிறப்புக்கூட்டம்! நேரலை

தமிழக பத்திரிகைகளில் துக்ளக் மிகவித்தியாசமான சரித்திரத்தைப் படைத்திருக்கிறது. ஒரு முழு அரசியல் விமரிசனப் பத்திரிகையாக, நேர்மையான அரசியல் எப்படி இருக்கவேண்டும் என்கிற கனவை என்னைப் போன்ற ஏராளமான பேர்கள் மனதில் ஆழமாக விதைத்த பத்திரிக்கையாக 1970 ஜனவரியில் ஒரு பொங்கல் திருநாளன்று உதயமானது. இது எத்தனை நாளைக்கு என்று சோவை ஏளனமாகப்பார்த்தவர்கள் சிவாஜி கணேசன் முதற்கொண்டு நிறையப்பேர். அப்படி ஏளனமாக நினைத்தவர்கள் அத்தனைபேர் எண்ணத்தையும் பொய்யாக்கிவிட்டு, சோ ராமசாமி தன்னுடைய நேர்மையான விமரிசனங்களால் துக்ளக் இதழை வாசகர்கள் ஆதரவு பெற்ற இதழாக நடத்திக் காட்டினார். ஒவ்வொரு ஜனவரி 14 ஆம் தேதியன்றும் துக்ளக் இதழின் ஆசிரியர் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் எல்லோருடனும் சேர்ந்து வாசகர்களைச் சந்தித்து வருவதை இன்று வரை நடத்திக் கொண்டு இருக்கிறது. வாசகர்களுடன் இத்தனை நெருக்கத்தை துக்ளக் மாதிரி வேறெந்த பத்திரிகையாலும்  இதுவரை நடத்திக்காட்ட முடிந்ததில்லை. முயன்றதுமில்லை!
   

இன்று மாலை சரியாக ஆறுமணிக்கு ஆரம்பித்து சென்னையில் துக்ளக் இதழின் பொன்விழா நிறைவு நிகழ்ச்சி வாசகர் சந்திப்பு நேரலையில். ஆடிட்டர் குருமூர்த்தி வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். 

மேலே க்ளிக் செய்து நிகழ்ச்சியை பாருங்கள்.

இந்த வார துக்ளக் அட்டைப்பட நையாண்டி 

மீண்டும் சந்திப்போம்.         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!