இன்றைய அதிசயமாக பிரதமர் நரேந்திரமோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி சந்திப்பாரா மாட்டாரா என்ற சந்தேகங்களை ஊடகங்கள் கிளப்பிக் கொண்டிருந்ததற்கு, முற்றுப்புள்ளி வைக்கிறமாதிரி மம்தா பானெர்ஜி ராஜ் பவனில் பிரதமரைச் சந்தித்த காட்சிகளை சேனல்களில் பார்த்தேன். மரியாதை நிமித்தம் சந்திப்பு என்று சொல்லப்பட்டதில் மம்தா பானெர்ஜி வெளியே நிருபர்களிடம் CAA, NRC இரண்டையும் மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் சொன்னதாக பேட்டி அளித்தது பரிதாபகரமான காமெடி!
பிரதமர் நரேந்திரமோடி இருநாள் நிகழ்ச்சிகளுக்காக இன்று கொல்கத்தா வந்திருக்கிறார். கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சி, புனருத்தாரணம் செய்யப்பட்ட 4 பழைய கட்டடங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்றிரவு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் தங்குவார். நாளை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் சுவாமி விவேகானந்தருடைய அவதார தின நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்ற தகவல்கள் சொல்வதில் கொல்கத்தா துறைமுக நிகழ்ச்சியில் பிரதமருடன் ஒரேமேடையில் மம்தா பங்கேற்பாரா என்பது நிகழ்ச்சி நடந்து முடிகிற வரை சஸ்பென்ஸ்தான்!
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொல்வதைத் தவிர்த்துவிட்டு, பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் குறித்து காங்கிரஸ் செம கடுப்பில் காய்காயென்று காய்ந்து புலம்பியிருக்கிறது. சமீப நாட்களாக மம்தா பானெர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டம் எதிலும் கலந்து கொள்ளாததை சந்தேகத்துடன் பார்க்கிறார்களாம்! சொந்தக்காலில் நிற்கமுடியாது ஒருகட்சி சந்தேகப்படுவதற்கெல்லாம் என்ன மரியாதை கிடைக்கும்? சொல்லுங்களேன்!
ஜாமீனில் வெளிவந்த இஸ்லாமியத் தீவீரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு அனுதாபம் தெரிவிக்க திராவிடர்கள் இடதுசாரிகள் காங்கிரஸ் கட்சிகள் இன்னமும் வாய்பொத்திக் கொண்டிருக்கையில், பிஜேபி ஒன்றுதான் உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் இறந்த காவலர் குடும்பத்துக்கு ஒருகோடி நிவாரணம் அறிவித்துவிட்டு அத்துடன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார் போல. இந்தப்பயங்கரத்தின் பின்னணி தகவல்கள் முழுமையாக விசாரிக்கப்படுகிறதா? இந்த பின்னணியில் மக்களுக்காக என்ற நிகழ்ச்சியில் மதன் ரவிச்சந்திரன் ஒரு விவாதத்தை நேற்றிரவு நடத்தி இருக்கிறார். வீடியோ 58 நிமிடம். கொல்லப்பட்டவர் கிறித்தவர் என்பதால் இதற்குமேலும் சும்மா இருந்தால் மரியாதை இருக்காதோ என எஸ்ரா சற்குணமும் ஜெகத் காஸ்பரும் ஒரு அனுதாபப் பேரணி,கூட்டம் எதையாவது நடத்தவிருப்பதாக சிலதகவல்கள் சொல்கின்றன. ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவு தான் என்று வெறுமனே இருந்துவிடுவது நமக்குப் புதிதா என்ன?
மீண்டும் சந்திப்போம்.
சொல்லக்கூடிய வகையில் இந்தியாவில் பெண்கள் அரசியலில் பெயர் சொல்லும் அளவிற்கு வந்து விடுவார்கள். ஆணாதிக்க அரசியல்வாதிகளை பின்னுக்குத் தள்ளுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். மம்தா நடவடிக்கைப் பார்த்து மொத்த நம்பிக்கையையும் இழந்து விட்டேன்.
ReplyDeleteஅரசியலில் குதித்தபிறகு ஆணென்ன பெண்ணென்ன ஜோதிஜி? பெண் அரசியல் வாதிகள் என்று பார்த்தால் சீரழிவு கவிக்குயில் சரோஜினி நாயுடு விஜயலட்சுமி பண்டிட் இவர்களிடமிருந்தே தொடங்கிய பழைய கதைகள் தெரியாதா? அடுத்துப்பார்த்தால் ஜெ முதற்கொண்டு நிறையப்பெண்மணிகள் நம்பிக்கை இழக்கச் செய்தவர்கள் பட்டியலில் வருவார்கள்/ அந்தவரிசையில் மம்தா பானெர்ஜியும்! அவ்வளவுதான்.
Deleteகாரணம் நிச்சயமாக அவர்கள் எல்லோரும் பெண்களாய் இருந்தது அல்ல. அரசியல் இன்றளவும் ஆணாதிக்கத்தில் இருப்பதுதான் என்று எனக்கு அவ்வப்போது தோன்றும்