நேற்றைய இட்லி வடை பொங்கல்! #58 பதிவில் கேரள இலக்கியத் திருவிழா 2020 நிகழ்வில் ராமசந்திர குகா ராகுல் காண்டி மாதிரி ஒரு ஐந்தாம் தலைமுறை வாரிசு இந்தியாவுக்குத் தேவையில்லை, கேரளா அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் ஒரு விபரீதத்துக்கு வித்திட்ட தவறைச் செய்துவிட்டது என்று உடைத்துப்பேசியதை, இதற்கு முன்னாலும் ராமசந்திர குகா இதே கருத்தைச் சொல்லியிருப்பதை இந்தப்பக்கங்களிலேயே சொல்லி இருந்ததற்குச் சுட்டி கொடுத்துச் சுருக்கமாக முடித்து இருந்தேன் இல்லையா!
ராமசந்திர குகா பேசியதன் முழுக் காணொளியும் மேலே 61 நிமிடம் இதில் அவர் தேசபக்தியும் மூர்க்கத் தனமான தேசியவாதமும் Patriotism vs Jingoism என்ற தலைப்பில் பேசியது ஒரு 48 நிமிடம் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் என்று இருந்த வீடியோவை சற்று முன்தான் பார்த்து முடித்தேன். யூட்யூப் தளத்தில் வெறும் 74 கமென்ட்டுகள்தான்! மல்லுதேசம் எப்படி ரியாக்ட் செய்தது என்பதைத் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை! காங்கிரஸ்காரன் மனம்போனபடி செகுலரிசத்துக்கு வியாக்கியானம் சொல்கிற மாதிரியே ஒரே பல்லவியைத்திரும்பத் திரும்பச் சொல்கிறமாதிரியே இருப்பது அவர் குற்றமா என் குற்றமா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது! போகட்டும்! நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் எழுப்பிய கேள்விக்கு பிஜேபி முன்பு மாதிரி பார்ப்பான் பனியா கட்சியாக இன்று இல்லை! ஹிந்துத்வா வெர்சஸ் மற்றவர்கள் என்ற கட்சியாக ஆகிவிட்டது என்கிறார்.
சசிதரூர் ஒரு காங்கிரஸ்காரராக தன்னுடைய விசனத்தை என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? ராகுல் காண்டி ஒருவர்தான் தான் பிஜேபிக்கு எதிரான லட்சக்கணக்கானவர்களின் மாற்று அரசியல் பிம்பம் என்று ட்வீட்டரில் சொல்லி ராஜவிசுவாசத்தைப் பதிவுசெய்து முடித்து விட்டார். யூட்யூபில் ஒரு கமென்ட் மைக்ரோபோனில் பேசும்போது இப்படித்தொண்டை வரளும் படி பேசுவானேன் என்று ஆச்சரியப்பட்டுக் கேட்கிறது.
"In view of the kerfuffle (to use a Tharoorian term) caused by the slanted and selective PTI report on my #KLF speech, a thread stating/restating my views on Rahul, Modi, Hindutva and India," என்று இதற்கே ராமசந்திர குகா ட்வீட்டரில் இன்னமும் நான் ஹிந்துத்வா மோடி எதிர்ப்பாளன் தானென்று தொடர்ந்து தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது செம காமெடி!
எது எப்படியோ, இங்கே இசுடாலின் முதற்கொண்டு ராமசந்திர குகா உள்ளிட்ட ஏகப்பட்ட புள்ளிகள் நானும் நரேந்திர மோடி எதிர்ப்பாளன்தான் என்று சொல்லிச் சொல்லித்தான் நாட்களையும் பிழைப்பையும் ஓட்ட வேண்டியிருக்கிறது என்பது இன்றைய அரசியல்கள நிலவரம் போல!
அரசியலையே பேசிக்கொண்டிருப்பது சுத்த போர் என்று யார் சொன்னது? !! மீண்டும் சந்திப்போம். .
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!