காங்கிரசின் பேராசை! ஒன்று சேராத மாநிலக்கட்சிகள்!

நேற்றைக்கு FirstPost தளத்தில் ஸ்ரீமாய் தாலுக்தார் எழுதியிருக்கிற அரசியல் கள நிலவர ஆராய்ச்சி, CAA. NRC க்கு எதிராக காங்கிரஸ் கட்டமுயன்ற  எதிர்க்கட்சி ஒற்றுமை நாடகம், ஏன் கேவலமாகத்தோற்றது என்பதற்கு சரியான காரணங்களைச் சொல்வதோடு. தேசியக்கட்சி வெர்சஸ் மாநிலக்கட்சிகளுக்கிடையில் ஆன எல்லைக்கோட்டைக் காங்கிரஸ்கட்சித்தலைமை கொஞ்சம் கூடப் புரிந்துகொள்ளவில்லை என்பதையும்  வெளிப்படுத்தியிருக்கிறது. மாநிலக்கட்சிகள் தங்களுடைய சொந்த நலன்களுக்காக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் புறக்கணிக்கின்றன என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மாநிலக்கட்சிகளோ, காங்கிரஸ் தேசிய முக்கியத்துவம் என்ற பெயரில், எல்லாப்புகழும், தேர்தல் வெற்றிகளும் தனக்கே வந்து சேரவேண்டுமென்று நினைப்பதாகப் பதிலுக்குக் குற்றம் சாட்டுகின்றன. என்னவோ தமிழில் சில ஊடகக்காரர்கள் காங்கிரஸ் மீதான நம்பிக்கைக் குறைவு என்று ஏற்கெனெவே சொல்லிவருகிறார்களே என்று ஆச்சரியப்பட்டுக் கொள்ள வேண்டாம்! பாவம், அவர்களும் ஸ்ரீமாய் தாலுக்தார் போன்றவர்கள் அனலைஸ் செய்து ஆங்கிலத்தில் எழுதுவதைத்தான் அப்படியே எழுத்த்துப்பிசகாமல் தங்களுடைய சொந்த சரக்காகக் காட்டிக் கொள்கிறார்கள் என்பது எத்தனைபேருக்கு இங்கே தெரிந்திருக்கப்போகிறது, கொஞ்சம் சொல்லுங்களேன்!

    ஸ்ரீமாய் தாலுக்தார்  

உதாரணத்துக்கு, மம்தா பானெர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் இருவருக்கும், வேறுவேறு காரணங்களுக்காக, காங்கிரசிடமிருந்து விலகியே இருப்பது நல்லது என்பதான சூழலை ஸ்ரீமாய் தாலுக்தார், மிக எளிமையாக விளக்குகிறார். மேற்கு வங்கத்தில் காங்கிரசின் அடித்தளமே காணாமல் போய் விட்டதில், காங்கிரசைப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் மம்தாவுக்கு இல்லை. அதைவிட, காங்கிரசை விட்டு விலகியிருப்பதில். திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகள், காங்கிரஸ், இடதுகள், பிஜேபி என்று சிதறுவது ஒரு ஆதாயமாகக் கூட இருக்கலாம்.

அதேநேரம் டில்லியில் ஆம் ஆத்மி கட்சி நிலைமை வேறுவிதமாக! டில்லியில் AAP, பிஜேபி, காங்கிரஸ் என்று மும்முனைப்போட்டி இருப்பதில், காங்கிரசோடு ஒட்டி உறவாடுவது அரவிந்த் கேஜ்ரிவாலுடைய ஆட்சிக் கனவுகளைக் குலைத்துவிடலாம் என்கிற நிலை! எப்படி அவர் காங்கிரசோடு சேர்ந்து நிற்பார்?


மம்தாவுக்கும், கேஜ்ரிவாலுக்கும் அடுத்து வரப்போகும் சட்டசபைத்தேர்தல்கள் தான் காங்கிரசோடு சேர்ந்து நிற்பதற்குத் தடையாக இருக்கிறதென்றால், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கும், மாயாவதிக்கும் அந்தக் காரணம் நிச்சயமாக இல்லை. சமாஜ்வாதிக் கட்சி அகிலேஷ் யாதவுக்கு 2017 சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசோடு கூட்டு வைத்தது பெரிய தவறு. கட்சிக்கு நிரந்தரமான சேதத்தை விளைவித்து விட்டது  என்று புரிந்ததில், இன்னொரு முறை சூடுபடத் தயாராக இல்லை என்பது கொஞ்சம் வித்தியாசமான களயதார்த்தம் என்றால் மாயாவதிக்கு வேறுவிதமான தயக்கம். ராஜஸ்தானில் BSP கட்சி MLAக்களைக் காங்கிரஸ் தன்வசம் இழுத்துக்கொண்டதில் கோபம்!

சிவசேனா மஹாராஷ்ட்ரா அளவோடு காங்கிரஸ் சங்காத்தத்தை வைத்துக் கொள்ள விரும்புவதில், தங்களுக்கு அழைப்பில்லை என்று கழன்று கொண்டது! இப்படி மாநிலக்கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் காங்கிரசின் முந்தைய துரோகங்களை ஞாபகம் வைத்துக் கொண்டும்  ஒதுங்கியதைக் குறை சொல்லவே முடியாது. ஸ்ரீமாய் தாலுக்தார் கட்டுரை சொல்லவரும் விஷயம் இதுவே.

இடதுசாரிகளுக்கு வேறு வழியே இல்லாததால் தான் காங்கிரசுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதான்! Mamta's   rhetoric, too, borders on overreaction. Vowing that she won't allow Left and Congress to make the strike successful in Bengal, Mamata reportedly said: "Those who don't have any political existence in the state are trying to ruin its economy by pursuing cheap politics such as strikes." என்கிறார் ஸ்ரீமாய். ஆனால் 2019 தேர்தல்களில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் யோசித்தே மம்தா பானெர்ஜி தான் தனித்தே நின்று CAA. NRCக்கு எதிராகப் போராடுவேன் என்று முழங்கி இருக்கிறார் என்றும் ஸ்ரீமாய் மேலும் மம்தாவின் நிலைபாட்டுக்கான காரணங்களை ஆராய்கிறார். 
   
காங்கிரஸ் போனால்  திமுகவுக்கு என்ன நஷ்டம் 
என்று சீண்டுகிறார் துரைமுருகன்  

ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணித்திருப்பது வேறுவிதமான கேம்! செகுலர் முகமூடிக்காக, சிறுபான்மையினர் வாக்குக்காக  காங்கிரஸ் நிச்சயம் தேவைதான்! ஆனால் திமுக தயவில்லாமல் காங்கிரஸ், தமிழகத்தில் ஒன்றிரண்டு அசெம்பிளி சீட் ஜெயிப்பதே கஷ்டம்தான்! மத்தியில் ஆட்சி அமைத்து அதில் பங்குகிடைக்கலாம் என்ற சூழல் இல்லாத நிலையில், காங்கிரசை மிரட்டிப் பணிய வைப்பதற்கான கேம் இது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் விசிகவை இனிமேலும் திமுக தூக்கிச்சுமக்குமா என்பது 9 ரூபாய் நோட்டு மாதிரியான ஒரு கேள்வி. ஆக 2020, 2021 இல் வரும் சட்டசபைத் தேர்தல்களில், கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகத் தென்படுவதில்  பலவீனப்பட்ட காங்கிரசும்  ஒரு முக்கியமான காரணியாக இருக்கும். 

ஒன்று மட்டும் தெளிவாக இப்போதே தெரிகிறது. வரும்  2024 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் மீண்டெழுவதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லவே இல்லை என்பதுதான் அது!

மீண்டும் சந்திப்போம்.               

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!