கொஞ்சம் கொறிக்க! சின்னச் சின்னதாய் #அரசியல்

சீரியசாக அரசியல் எழுதினால் படிக்க அலுப்பாக இருக்கிறதோ?அதற்காக காமெடி, சினிமா, இலக்கியம், புத்தகம் என்று எழுதினால் மட்டும் பதிவை வாசிக்கக் கூட்டம் அள்ளுதோ என்று மனசுக்குள் நான் மட்டுமே முனகிக் கொள்ள வேண்டியதுதானா? தமிழில் வலைப்பதிவுகள்  திரட்டி எதுவும்  தற்சமயம் இயங்காமல் இருப்பதில் ஏகப்பட்ட முகநூல், அமேசான் எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட விபரீதத்தை யாரும் இங்கே கவனிக்கவில்லை போல! இன்றைக்கு கொறிக்கிற மாதிரி சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் அரசியல் செய்திகள்!


முதலில் ஒரு காமெடி! உ.நிதி உபயம்   

வரலாறு என்றால் முரசொலியில் வருகிற செய்திகள் மாதிரித்தான் என்று நினைத்துவிட்டார் போல! படமாக எடுத்தால் எக்கச்சக்கமான பலான விஷயங்களையும் சொல்ல வேண்டிவருமே! அவை இல்லாமல் வரலாறு முழுமை பெறாதே! ஆனால் சென்சாருக்குத் தப்புமா?

   
இப்படி நிஜமாகவே உளறிக்கொட்டி விடுவோமென்று பயந்துதான் கமல் காசர் இப்போது வரை ஈவெரா சர்ச்சையில் கருத்து எதுவும் சொல்லாமல் வாய்மூடி இருக்கிறாரோ?

  
மக்கள் நீதி மய்யம் /கமல் காசர் ஜனவரி 9 அன்று ரஜனி தமிழ்நாட்டுக்கு உதவவேண்டும் என்று சொன்னதற்கு ரஜனிகாந்த் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசியது, அதை மறுபடியும் நான் ஆதாரத்தோடுதான் பேசினேன். வருத்தமோ மன்னிப்போ கேட்கமாட்டேன் என்று உறுதி செய்து பேசியது என அடுத்தடுத்து 12 நாள் இடைவெளியில் தமிழ்நாட்டுக்கு மிகவும் உதவுகிற மாதிரி ஒரு விஷயத்தைப் பேசுபொருளாக்கி விட்டார்!

   
துக்ளக் 50 வருடங்களுக்கு முன்னால் கருணாநிதிக்கு எப்படி நன்றி சொன்னதோ, அதேபோல இப்போது யாருக்கு நன்றி சொல்வது? !. ஓசிச்சோறு வீரமணி 2. சுபவீ  செட்டியார் 3. திருமாவளவன் 4. அமைச்சர் ஜெயகுமார்  இப்படி பட்டியலில் உதிரிகள் எண்ணிக்கை நீளுகிறது. உங்கள் சாய்ஸ் யார்?


தந்திடிவி மிகவும் எச்சரிக்கையோடு ரஜனிகாந்த் பேச்சு அதற்கான எதிர்வினைகள் குறித்த விவாதங்களை நடத்திவருவது காலத்தின் கோலம்! தலைப்பே ரஜனியைச் சுற்றும் பெரியார் அரசியல்: அடுத்து என்ன ... இப்படிக் கேள்விக்குறி கூட இல்லாமல்! அசோகவர்ஷினி இந்த 50 நிமிட விவாதத்தை நடத்தியது கொஞ்சம் பரவாயில்லையே ரகம்!

தந்தி டிவி கொளத்தூர் மணி :அன்று கோர்ட்டில் ஜட்ஜ் , சுதந்திரத்துக்கு போராடிய ஈவேராவை கொச்சை படுத்தாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார் KT ராகவன்:சுதந்திரமே வேண்டாம்னு சொன்னவர் தான் உங்க ஈவேரா சுதந்திர தினத்தை கருப்பு தினம்னு சொல்லிருக்காரு கொஞ்சமாவது வரலாறு தெரிஞ்சிட்டு பேச வாங்க
😆

மீண்டும் சந்திப்போம்.      

4 comments:

  1. Replies
    1. எதற்குச் சிரிப்பு என்று சொல்லாமலேயே சிரித்தால் எப்படி ஸ்ரீராம்? என்னவென்று நான் புரிந்து கொள்வது?

      Delete
  2. // கொளத்தூர் மணி :அன்று கோர்ட்டில் ஜட்ஜ் , சுதந்திரத்துக்கு போராடிய ஈவேராவை கொச்சை படுத்தாதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்
    KT ராகவன்:சுதந்திரமே வேண்டாம்னு சொன்னவர் தான் உங்க ஈவேரா//
    அதுதான் சூப்பர் கட்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கௌதமன் சார்!

      ட்வீட்டர் செய்திக்கு மேலேயே முழு வீடியோவாக கொடுத்திருக்கிறேனே ! நீங்களும் ஸ்ரீராம் மாதிரி வீடியோ பார்ப்பதில்லையா என்ன? ! வீடியோவில் சூப்பர் கட் இன்னும் வேறு சில விஷயங்களிலும் இருக்கிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!