கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! சுவாமி விவேகானந்தர்!

இன்றைக்குத்  திருப்பாவை 27வது பாசுரம் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா மிக நுட்பமான பொருளைச் சொல்வதை அனுபவித்துக்கொண்டு காலைப்பொழுது இனிதே விடிந்தது. இந்தப்பாசுரத்தைப் பற்றி முன்னர் இந்தப் பக்கங்களில் எழுதியதை இங்கே படிக்கலாம்.


இன்றைக்கு சுவாமி விவேகானந்தர் அவதார தினம். அந்நியர்களிடம் அடிமைப்பட்டு  தங்களுடைய மதத்தைப் பற்றியும், கலாசாரத்தைப்பற்றியும்  ஏதுமறியாமல் குறுகிக்கிடந்த இந்தியர்களுக்குப் புதியதோர்  விழிப்பைத்தந்த ஞானசிம்மம் சுவாமி விவேகானந்தர். அவருடைய சீடரான சகோதரி நிவேதிதை இன்னும் தெளிவாக சுதந்திர உணர்வையும் பெண் விடுதலை பற்றியும் பேசியவர். சுவாமி விவேகானந்தருடைய மலர்ப்பதங்களை வணங்குகிறேன். அவர் கனவின் படியே உருவான ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சன்யாசிகளை வணங்குகிறேன்.


கொல்கத்தாவில் பேலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பிரதமர் நரேந்திரமோடி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு பேசியதன் காணொளி இங்கே. வீடியோ 32 நிமிடம்.  

இன்றைய நாள்  நல்லசிந்தனைகளுடன் விடிந்ததில் மனம் இன்னும் லயித்திருப்பதால் வேறுவிஷயங்கள் தொட்டு இந்தப்பதிவில் எழுதப்போவதில்லை.

மீண்டும் சந்திப்போம்.       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!