ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு எனக்கு எந்தவிதமான தேவையோ காரணங்களோ இருந்ததே இல்லை. ஆனாலும் சமூகத்திலும் பணிச் சூழலிலும் சம்பந்தமே இல்லாத ஒன்றை, வாயளவில் வாழ்த்தைப் பரிமாறிக் கொள்கிற அர்த்தமற்ற சாங்கியத்தைக் கூட, ஒரு ஆன்மீக அனுபவமாக, உள்ளார்ந்து அனுபவிக்கிற ஒன்றாக ஸ்ரீ அரவிந்த அன்னை ஏற்படுத்தித் தந்திருக்கிறாள். புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசனநாளாக ஜனவரி 1 இருக்கிறது.
இது இன்றைய தரிசன நாள் செய்தி. ஆரம்ப நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் அன்னையைத் தேடி வருகிற சாதகர்கள் ஒவ்வொருவருக்கும், அவரவர் பக்குவத்துக்கு ஏற்றபடி சாதனையில் முன்னேறுவதற்கு உதவியாக சில வாக்கியங்களை ஸ்ரீ அரவிந்த அன்னை தன் கைப்பட எழுதிய கார்டுடன், மலர்களையும் பிரசாதமாக அளித்து வந்தார். பின்னால் அது அச்சிடப்பட்ட செய்தியாக எல்லோருக்கும் மலர் ப்ரசாதங்களோடு வழங்கப்பட்டது. இன்றும், முன்னாட்களில் அப்படி சாதகர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியே தரிசன நாள் செய்தியாக random ஆகத்தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
இன்றைய தரிசனநாள் செய்தியின் முகப்பு
ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் முழுப்பொறுப்பையும் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனிமையில் மோனத் தவம் செய்ய ஆரம்பித்தது, 1950 டிசம்பரில் அவர் தன்னுடைய உடலை அதிமானச ஒளி இந்தப்பூமியில் நிலையாகத் தங்குவதன்பொருட்டு தியாகம் செய்தது வரை தொடர்ந்தது. ஆசிரமத்தில் சாதகர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கேயே தங்கியிருந்தவர்களாக ஆனாலும், நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் ஸ்ரீ அரவிந்தரை சேவிக்க வந்த அன்பர்களானாலும், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்க முடிந்தது. ஆரம்பத்தில் மூன்று நாட்களாக இருந்த தரிசன நாட்கள் (Feb 21 ஸ்ரீ அன்னையின் பிறந்த தினம், Aug 15 ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம், Nov 24 சித்தி தினம்) பின்னால் நான்கு நாட்களாக, ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளும் சேர்க்கப்பட்டது. இந்தப்பட்டியலில் ஜனவரி 1 காணோமே என்று தேடவேண்டாம். ஜனவரி 1 ஆசிரமத்தின் தரிசன நாளாகவும் ஆனது பிற்பாடு.
இது இன்றைய தரிசன நாள் செய்தி. ஆரம்ப நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் அன்னையைத் தேடி வருகிற சாதகர்கள் ஒவ்வொருவருக்கும், அவரவர் பக்குவத்துக்கு ஏற்றபடி சாதனையில் முன்னேறுவதற்கு உதவியாக சில வாக்கியங்களை ஸ்ரீ அரவிந்த அன்னை தன் கைப்பட எழுதிய கார்டுடன், மலர்களையும் பிரசாதமாக அளித்து வந்தார். பின்னால் அது அச்சிடப்பட்ட செய்தியாக எல்லோருக்கும் மலர் ப்ரசாதங்களோடு வழங்கப்பட்டது. இன்றும், முன்னாட்களில் அப்படி சாதகர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியே தரிசன நாள் செய்தியாக random ஆகத்தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
OM Sri Aurobindo Mira
Open my mind, my heart, my life
to your Light, your Love, your Power. In all
things may I see the Divine.
1938 இல் தியானிப்பதற்கு ஒரு மந்திரம் வேண்டும் என்று வேண்டிய அன்பர் ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் தன் கைப்பட எழுதி அருளிய மந்திரம் இது!
மா மிரா சரணம் மம ஸ்ரீ அரவிந்த சரணம் மம
இவையே இன்றைய நாள் முழுதும் பிரார்த்தனைக்கான மந்திரங்கள்! வாழி நலம் சூழ!
பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete