சண்டேன்னா மூணு! #கூட்டணி உதிரிகளுக்கு என்னாச்சு?

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் திமுகவும் அதிமுகவும் நெருக்கியடித்து ஜெயித்திருப்பதில் அவைகளோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட உதிரிக்கட்சிகளுடைய கதி என்னவாயிற்று என்பது தான் தமிழக அரசியல் களத்தில் இப்போதைய சுவாரசியமான விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது. ஒரு காலத்தில் வலது கம்யூனிஸ்டுகளோடு ஒப்பீடு செய்து தாங்கள் எவ்வளவு பலசாலிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, அதற்கு திமுக கொடுத்த நன்கொடை பத்துக் கோடிக்குப் பெறுமானம் உள்ளதுதானா என்று எள்ளி நகையாடப்படுகிற அளவுக்குப் பரிதாபம்! ஒப்பீட்டளவில் வலதுகள் ஜெயித்தது கொஞ்சம் அதிகம்தான்! 

  
திமுகவும் அதிமுகவும் பேசி வைத்துக் கொள்ளாமலேயே  கூட்டணி உதிரிகளுடைய சோலியை முடிச்சுட்டாங்க என்று நக்கல்  அடிக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. 36 நிமிட உரையாடல். நிறைய சுவாரசியமான தகவல்களோடு! கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்!


ரவீந்திரன் துரைசாமியாவது பரவாயில்லை! நியூஸ் 7 சேனல் ஒருபடி மேலே போய் உள்ளாட்சித் தேர்தல் : கூட்டணி உதிரிகளில் எழுந்தது யார்? விழுந்தது யார்? என்றே கேள்விநேரத்துக்குத் தலைப்பு வைத்து 56 நிமிட விவாதமொன்றை ஒப்பேற்றி விட்டார்கள்! குப்புற விழுந்தபின்னாலும் மீசையில் மண் ஒட்டவில்லை! ஏன் என்றால் மீசையே இல்லை! ரீதியில் உதிரிகளின் சால்ஜாப்புக் காமெடியை ரசிக்க விருப்பமிருந்தால் பார்க்கத் தவற விடவேண்டாம்! 


வெற்றி பெருகிறாரோ இல்லையோ நாம் தமிழர் கட்சி சீமாறு தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதைக் கன்வின்சிங்காக சொல்கிற அழகே தனி!  வீடியோ 9 நிமிடம்தான்!

டிவிட்டரிலா முகநூலிலா என்று ஞாபகம் இல்லை! எல்லாத் தேர்தல்களிலும் போட்டிபோட்டுத் தோற்கிறது நாம் தமிழர் கட்சி. தோற்பதற்கு ரெடிமேடாக சால்ஜாப்பும் வைத்திருப்பார்கள் என்பதெல்லாம் சரி! ஆனால் ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பின்னாலும் சீமானுடைய சொத்துமதிப்பு மட்டும் கூடிக்கொண்டே போகிறதே அது எப்படி என்று ஒரு கேள்வியை எழுப்பிய பகிர்வொன்றைப் பார்த்தேன். எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.                    

2 comments:

  1. //ஆனால் ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பின்னாலும் சீமானுடைய சொத்துமதிப்பு மட்டும் கூடிக்கொண்டே போகிறதே அது எப்படி என்று ஒரு கேள்வியை எழுப்பிய பகிர்வொன்றைப் பார்த்தேன். எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?//

    யார், எங்கு,எப்படி கணக்கெடுக்கிறார்களோ...   ஆனால் சாத்தியம்.   நல்ல பிசினஸ்!

    ReplyDelete
    Replies
    1. யார் யாருக்கு எப்படியோ தெரியாது! ஆனால் சீமானுக்கு பிரபாகரனோடு ஆமைக்கறி சாப்பிட்ட கட்டுக்கதை நல்ல பிஸினஸாக் அமைந்துவிட்டது மட்டும் நிச்சயம் ஸ்ரீராம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!