குடியுரிமைச் சட்டத்திருத்தம் சொல்வதென்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே அர்த்தமற்ற போராட்டங்கள், கலகங்கள், வன்முறை என்று இந்திய அரசியலைத் திசை திருப்ப இடதுசாரிகள், திமுக, காங்கிரஸ் இன்னும் பல உதிரிகள் தொடர்ந்து முயற்சிப்பதன் 2வது பகுதி நேற்றைக்கு JNU பல்கலைக் கழகத்தில் ஆரம்பம் ஆகியிருக்கிறது
,
H ராஜாவை வெறுப்பவர்கள், அவர் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாதவர்களே! இந்த 17 நிமிட வீடியோவில் ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் தெளிவான பதில் சொல்வதை, சில விஷயங்கள் ஏற்கெனெவே கேட்டிருந்தாலும், இன்னொரு முறை தெளிவாக உள்வாங்கிக் கொள்வதற்காக கேட்பதால் தவறேதுமில்லையே! CAA பற்றி மட்டுமல்ல, வங்கிகளின் வராக்கடன் சுமை, அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபி அதிமுக கூட்டணி இருந்ததா என்று பலவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். முன்பே சொன்னதுபோல H ராஜா எழுப்புகிற கேள்விகளும் சரி, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சொல்கிற பதில்களும் சரி, இங்கே காங்கிரஸ் மற்றும் திராவிடங்களுக்கு அசௌகரியமாக இருப்பது, அவர்கள் பதிலுக்கு வாரியிறைக்கும் வன்மம் கலந்த பேச்சுக்களே சாட்சி.
Queen! இது ஜெ.வுடைய கதை என்று சொல்லாமல் ஆனால் பூடகமாக இது அவருடைய கதைதான் என்று கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வெளிவந்திருக்கிற வெப் சீரீஸ் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. நம்மூரில் அரசியல் தலைவர்களுடைய கதையைப் படமாக்குவது மிகவும் risky என்பதை மணிரத்னம் அந்த நாட்களில் இருவர் படம் எடுத்துச் சுட்டுக்கொண்டார். அன்றிலிருந்து தமிழ்நாட்டில் அரசியல்படம் பண்ணுவது ஒருபக்கச் சார்பாகவே போய்க்கொண்டிருக்கிற சங்கதி தெரியும் தானே!? கௌதம் மேனன் எடுத்த வெப் சீரிசில் ஜெயலலிதா என்கிற அரசியல் தலைவர் உருவான விதம் சரியாகச் சொல்லப்படவில்லை. நிறைய இடங்களில் சொதப்பியிருக்கிறார். 11 எபிசோடுகளில் முதல் 8 எபிசோடுகள் நத்தைவேகத்தில், அரை குறைத்தனமாக நகர்ந்து, கட்சித்தலைமை அவர் கைகளுக்கு வந்துசேர்ந்ததைக் கூட சரியாகச் சொல்லாமல் . முடித்திருப்பது என்னமாதிரி biopic என்பதை கௌதம் மேனன் தான் சொல்லவேண்டும்! ஆனால் அவரைத்தவிர மற்றவர்கள் மட்டும்தான் என்னென்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்! இதில் கிட்டத்தட்ட ஐந்தரை மணி நேரத்தை வீணாக்கிவிட்டேனே என்பதுதான் என்னுடைய கருத்து! மேலே சௌகார்ஜானகி சீரிசைப் பார்க்காமலேயே தன்னுடைய அபிப்பிராயத்தை அல்லது ஜெ மீதிருந்த பழைய கோபங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். வீடியோ 17 நிமிடம்.
The Trial of Christine Keeler
BBC One சீரிசிலிருந்து ஒரு ஸ்டில்
56 வருடங்கள் ஆனபின்னாலும் கூட Profumo Affair என்கிற பெண்பிள்ளை சங்காத்தத்தால் வீழ்ந்த மந்திரி ஒருவருடைய விவகாரம், ஆறுபகுதிகள் கொண்ட web seriees ஆக BBC One இல் சென்ற ஞாயிறு, திங்கள் என்று முதலிருபகுதிகளும் தொடங்கி நேற்றோடு மூன்றுபகுதிகள் ஒளிபரப்பாகி விட்டன. பிரிட்டனுடைய துரதிர்ஷ்டம், நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் தான் இல்லையென்றால், ஆட்சியே கவிழ்கிற அளவுக்குப் போன Profumo விவகாரம் ஒன்றுதான் தம்பட்டம் அடித்துக் கொள்கிற அளவுக்கு இன்று வரை இருக்கிறது என்று தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்! இங்கே மணிரத்னங்களும் கௌதம் மேனன்களும் தடுமாறுகிற மாதிரி எல்லாம் இல்லாமல், ஓரளவுக்குப் பிரச்சினையை நியாயமாகவே படமாக்கி இருக்கிறார்கள். பாதிவரைதான் ஒளிபரப்பாகி இருக்கிறது, இன்னும் 3 எபிசோடுகள் பாக்கி இருக்கின்றன. DH Lawrence எழுதிய Lady Chatterley’s Lover நாவலில் கொஞ்சம் செக்ஸ் பேசப்பட்டிருந்தது என்பதற்காக 1960 வரை தடை விதிக்கப்பட்டிருந்த ஒரு நாடு பிரிட்டன் என்பது பிரிட்டிஷ் சமூகத்தின் போலிக் தனத்துக்கு ஒரு நல்ல உதாரணம் என்பது கொசுறு தகவல். இப்படியாகப்பட்ட கண்ணியவான்கள் நாட்டில் ஒரு செல்வாக்குள்ள மந்திரி John Profumo கிறிஸ்டின் கீலர் என்ற ஒரு விபச்சாரியுடன் 1961 முதலே காமவசப் பட்டிருந்தார் என்கிற விவகாரமே 1963 இல் தான் பூதாகாரமாய் வெடித்துக் கிளம்பியது. பிரிட்டிஷ் பார்லிமென்டில் காரசாரமான விவாதம், மந்திரி முதலில் மறுத்துப் பார்த்தார், பிறகு வேறு வழியே இல்லாமல் ராஜினாமா செய்தார். ஒரு விலைமாதுடன் உறவு என்ற பிரச்சினைக்காக அல்ல, அந்தப் பெண்ணின் சில நண்பர்கள் ரஷ்ய உளவாளிகள் என்று தெரியவந்ததால் தான் என்பது கதைச் சுருக்கம். அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தோடு ஒப்பிட்டால், வெறும் சப்பை மேட்டர்! ஆனால் பிரிட்டிஷ் மக்களுக்கு வரலாறுதான் இல்லையென்றால் இந்த மாதிரி மேட்டர் கூட சப்பை என்பது எவ்வளவு பெரிய சோகம்?!
ஜான் ப்ரொஃயூமோ ராஜினாமா செய்துவிட்டு அமைதியாக ஒரு தொண்டுநிறுவனத்தில் தன்னுடைய பணிகளை செய்துவந்தார். 1975 இல் மார்கரெட் தாட்சர், ராணி எலிசபெத்துடன் ஒரே வரிசையில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டார் என்று உள்ளதைச் சொல்வது ஆன்டி க்ளைமேக்சாக உங்களுக்குத் தெரியலாம்! ஆனால் அதுதானே அரசியல்! கிறிஸ்டின் கீலர் தான் பாவம்! மந்திரி நாடாளுமன்றத்தில் மறுப்புத் தெரிவித்த சமயத்தில் ஸ்பெயினுக்கு ஓடி நிம்மதியற்ற ஒரு வாழ்க்கை. 2017 டிசம்பர் 5 அன்று நுரையீரல் தொற்று நோயால் 75 வயதில் மரணத்தைச் சந்திக்கிற வரை கிறிஸ்டின் கீலரைத் துரத்திக் கொண்டே இருந்தது போல.
,
இப்போது எனக்கிருக்கிற ஒரே கேள்வி, ஜவஹர்லால் நேரு, அவர் தங்கை விஜயலட்சுமி பண்டிட், மகள் இந்திரா இப்படியான பிரசித்திபெற்ற நபர்களுடைய வெளியே தெரியாத இன்னொரு பக்கத்தைத் துணிச்சல் உள்ள ஆசாமி யாராவது எப்போது இந்தமாதிரி சீரியல் எடுத்து ஆவணப் படுத்துவார்கள் என்பதுதான்! M O மத்தாய் புத்தகத்தின் மீதான தடை இன்றுவரை நீக்கம் செய்யப்படவில்லை என்பதாவது தெரியுமா?இல்லையா?
The Nation wants to know, Sir! மீண்டும் சந்திப்போம்
ஜெ பற்றிய அந்த வெப் சீரிஸை மூன்று பகுதிகளுக்கு மேல் என்னால் பொறுமையாகப் பார்க்க முடியவில்லை!
ReplyDeleteஎனக்கு இந்தவிஷயத்தில் கொஞ்சம் பொறுமை அதிகமென்று தான் சொல்லவேண்டும் ஸ்ரீராம்! Queen வெப் சீரிசையாவது பார்த்து முடித்துவிட்டேன். ஆனால் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் biopc The Crown வெப் சீரீசின் மூன்றாவது பாகத்தின் மூன்றாவது எபிசோடைத்தாண்டி பார்க்க சகிக்கவில்லை.அப்படியே அந்தரத்தில் நிற்கிறது இந்த லட்சணத்தில் இன்னும் 70 எபிசோடுகள் (மொத்தம் 100) எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
Deleteஇங்கே தலைவர்களுடைய biopic எடுப்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. நேரு குடும்பக் கதையை எப்போது எடுப்பார்கள்? அடுத்து திராவிடத் தலைவர்களுடைய கதையை உள்ளது உள்ளபடியே எடுக்க விட்டுவிடுவார்களா?