ஒரு புதன் கிழமை! தொடரும் கேள்விகள்! பதிலைத் தேடுகிறீர்களா என்ன?

2009 இல் கமல் காசர் உன்னைப்போல் ஒருவன் என்று A Wednesday ஹிந்திப்படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்தபோது இங்கே வலைப்பதிவுகளில் ஏகப்பட்ட நண்பர்கள் பொங்கினார்கள். சொல்லிவைத்துக் கொண்டு செய்த மாதிரி, தங்களுடைய சீற்றத்தை வெளிப்படுத்திய பதிவுகளை டெலிட் செய்த கதை ஒவ்வொரு புதன்கிழமையும் கேள்விகளாக இந்தப் பக்கங்களில் எழுதப்படும் பதிவுகளின் அடிநாதமாக இருக்கிறது. ஆதி காரணமாக இருந்த பத்ரி சேஷாத்திரியும், நேசமுடன் வெங்கடேஷும், அந்த சர்ச்சையைக் கடந்து வெகுதூரம் போய்விட்டார்கள்.

       
ஆனால் அந்தத் திரைப்படம் எழுப்பிய சில அடிப்ப்டைக் கேள்விகளோடு, விடைகளைத் தேடி ஒரு நேர்மையான சுயபரிசோதனை செய்துகொள்ள முடியாத சமூகமாக இன்னமும் நாமிருப்பதை அறிந்திருக்கிறோமா?

இந்திய வரலாற்றில் என்னால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாத விஷயமாக, ஹிந்து முஸ்லிம் divide தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதற்கு யார் காரணம்? முஸ்லிம் சமுதாயம் ஏன், சிறுபான்மைக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரையே இன்னமும் தொடர்ந்து நம்பிக் கொண்டு இருக்கிறது? மதச்சார்பின்மை என்பது பெரும்பான்மை மக்களை வில்லன்களாகச் சித்தரித்து, நாங்கள் மட்டுமே ரட்சகர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ளும் சிகுலர் காங்கிரஸ், திமுக மாதிரியானவர்களுடைய 
உள்நோக்கங்களை, இத்தனை ஆண்டுகளாகியும் அவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
இப்படித் தொடர் கேள்விகளாக எழுந்து கொண்டே இருப்பதில் #புதன்கிழமைக்கேள்விகள் இன்னமும் அப்படியே இருக்கிறது.மேலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு 73 வங்கிக் கணக்குகளில் 120 கோடி ரூபாய் வரை திரட்டி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்டு வேறு சில மாநிலங்களிலும் நிதியுதவி கொடுத்துப் போராட்டங்களைத் தூண்டுவது குறித்தான விவாதத்தைப் பார்த்தபோது கேள்விகள் அப்படியே இருப்பது புரிந்தது.

உன்னைப்போல் ஒருவன் படத்தின் மீதான பதிவர்கள் சர்ச்சைகளுக்கு முன்னால் தி சா ராஜு எழுதிய ஒரு சிறுகதையை எடுத்துக் கொண்டு பேசிய இந்தப் பதிவில் வந்த பின்னூட்டம், பதில் இது.
  1. இதை நீங்கள் தமிழகத்திலும் காணமுடியும். மெஜாரிட்டியாக இருப்பவர்கள் மைனாரிட்டியாக இருப்பவர்களை புறக்கனிப்பதென்பது பல இடங்களில் காண முடியும். இங்கு மெஜாரிட்டி/மைனாரிட்டி என குறிப்பிடுவது அவர்கள் வாழும் இடங்களில் யார் அதிகம் என்பதை குறிப்பிட. ஒரு சில ஊர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இந்த வேற்றுமை உணர்வை புறந்தள்ள ஆரம்பப் பள்ளிகளில் தான் அடித்தளம் அமைக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு ஆசிரியர்கள் முழு பொறுப்புடன் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் வரும் தலைமுறைகளில் மாற்றம் காண முடியும். ஒருவர் அடுத்த மதத்தின் கொள்கைகளை ஏற்காமல் இருக்கலாம் ஆனால் வெறுக்காமலும் இருக்கவேண்டும். இது மதத்தை பின்பற்றாதவர்களும் பின்பற்றவேண்டும்.
    ReplyDelete
  2. தமிழகத்திலேயே இதைப் பார்ப்பதினால் தானே, இந்தக் கதையை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்கிறேன்! தமிழகத்தில் என்று இல்லை, இங்கே என்னுடன் தாய் பிள்ளையாகப் பழகிய பல நண்பர்களே, இப்போது கொஞ்சம் ஒதுங்கித் தங்களுக்குள் ஒரு கூட்டமாகச் செயல்படுவதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இப்போது, அவர்களுக்கு மதமும், நம்பிக்கைகளும் முக்கியமாக ஆகிவிட்டன.

    பேதப் படுத்திபார்ப்பது என்பது என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இல்லை. இரண்டு பக்கங்களிலுமே இருக்கிறது என்பது தான் விஷயம். இப்போது கேள்வி, பேதங்களை அகற்றி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியும் அதேபோல் இரண்டுபக்கங்களில் இருந்தும் ஆரம்பிக்கவேண்டும்.
    ஆரம்பப் பள்ளியில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்பதில் தான் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை எழுகிறது. காரணம், பேதங்களை வளர்ப்பதாகவே இன்றைய கல்விமுறையும், கையாலாகாதவர்களாக ஆசிரியர்களும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இங்கே நண்பர் நவாஸுதீன் மாதிரி ஒரு நேர்மையான உரையாடலைத் தொடர, ஒரு சமுதாயமாக அவர்கள் முன்வரும் நாட்களுக்காகக் காத்திருக்கிறோம்.


ஆனால் அப்படி உருப்படியாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர்களில் ஒரு பகுதி துடிப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறதே!  

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!