Showing posts with label கேள்விகள். Show all posts
Showing posts with label கேள்விகள். Show all posts

ஒரு புதன் கிழமை! தொடரும் கேள்விகள்! பதிலைத் தேடுகிறீர்களா என்ன?

2009 இல் கமல் காசர் உன்னைப்போல் ஒருவன் என்று A Wednesday ஹிந்திப்படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்தபோது இங்கே வலைப்பதிவுகளில் ஏகப்பட்ட நண்பர்கள் பொங்கினார்கள். சொல்லிவைத்துக் கொண்டு செய்த மாதிரி, தங்களுடைய சீற்றத்தை வெளிப்படுத்திய பதிவுகளை டெலிட் செய்த கதை ஒவ்வொரு புதன்கிழமையும் கேள்விகளாக இந்தப் பக்கங்களில் எழுதப்படும் பதிவுகளின் அடிநாதமாக இருக்கிறது. ஆதி காரணமாக இருந்த பத்ரி சேஷாத்திரியும், நேசமுடன் வெங்கடேஷும், அந்த சர்ச்சையைக் கடந்து வெகுதூரம் போய்விட்டார்கள்.

       
ஆனால் அந்தத் திரைப்படம் எழுப்பிய சில அடிப்ப்டைக் கேள்விகளோடு, விடைகளைத் தேடி ஒரு நேர்மையான சுயபரிசோதனை செய்துகொள்ள முடியாத சமூகமாக இன்னமும் நாமிருப்பதை அறிந்திருக்கிறோமா?

இந்திய வரலாற்றில் என்னால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாத விஷயமாக, ஹிந்து முஸ்லிம் divide தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதற்கு யார் காரணம்? முஸ்லிம் சமுதாயம் ஏன், சிறுபான்மைக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரையே இன்னமும் தொடர்ந்து நம்பிக் கொண்டு இருக்கிறது? மதச்சார்பின்மை என்பது பெரும்பான்மை மக்களை வில்லன்களாகச் சித்தரித்து, நாங்கள் மட்டுமே ரட்சகர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ளும் சிகுலர் காங்கிரஸ், திமுக மாதிரியானவர்களுடைய 
உள்நோக்கங்களை, இத்தனை ஆண்டுகளாகியும் அவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
இப்படித் தொடர் கேள்விகளாக எழுந்து கொண்டே இருப்பதில் #புதன்கிழமைக்கேள்விகள் இன்னமும் அப்படியே இருக்கிறது.மேலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு 73 வங்கிக் கணக்குகளில் 120 கோடி ரூபாய் வரை திரட்டி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்டு வேறு சில மாநிலங்களிலும் நிதியுதவி கொடுத்துப் போராட்டங்களைத் தூண்டுவது குறித்தான விவாதத்தைப் பார்த்தபோது கேள்விகள் அப்படியே இருப்பது புரிந்தது.

உன்னைப்போல் ஒருவன் படத்தின் மீதான பதிவர்கள் சர்ச்சைகளுக்கு முன்னால் தி சா ராஜு எழுதிய ஒரு சிறுகதையை எடுத்துக் கொண்டு பேசிய இந்தப் பதிவில் வந்த பின்னூட்டம், பதில் இது.
  1. இதை நீங்கள் தமிழகத்திலும் காணமுடியும். மெஜாரிட்டியாக இருப்பவர்கள் மைனாரிட்டியாக இருப்பவர்களை புறக்கனிப்பதென்பது பல இடங்களில் காண முடியும். இங்கு மெஜாரிட்டி/மைனாரிட்டி என குறிப்பிடுவது அவர்கள் வாழும் இடங்களில் யார் அதிகம் என்பதை குறிப்பிட. ஒரு சில ஊர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இந்த வேற்றுமை உணர்வை புறந்தள்ள ஆரம்பப் பள்ளிகளில் தான் அடித்தளம் அமைக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு ஆசிரியர்கள் முழு பொறுப்புடன் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் வரும் தலைமுறைகளில் மாற்றம் காண முடியும். ஒருவர் அடுத்த மதத்தின் கொள்கைகளை ஏற்காமல் இருக்கலாம் ஆனால் வெறுக்காமலும் இருக்கவேண்டும். இது மதத்தை பின்பற்றாதவர்களும் பின்பற்றவேண்டும்.
    ReplyDelete
  2. தமிழகத்திலேயே இதைப் பார்ப்பதினால் தானே, இந்தக் கதையை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்கிறேன்! தமிழகத்தில் என்று இல்லை, இங்கே என்னுடன் தாய் பிள்ளையாகப் பழகிய பல நண்பர்களே, இப்போது கொஞ்சம் ஒதுங்கித் தங்களுக்குள் ஒரு கூட்டமாகச் செயல்படுவதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இப்போது, அவர்களுக்கு மதமும், நம்பிக்கைகளும் முக்கியமாக ஆகிவிட்டன.

    பேதப் படுத்திபார்ப்பது என்பது என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இல்லை. இரண்டு பக்கங்களிலுமே இருக்கிறது என்பது தான் விஷயம். இப்போது கேள்வி, பேதங்களை அகற்றி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியும் அதேபோல் இரண்டுபக்கங்களில் இருந்தும் ஆரம்பிக்கவேண்டும்.
    ஆரம்பப் பள்ளியில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்பதில் தான் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை எழுகிறது. காரணம், பேதங்களை வளர்ப்பதாகவே இன்றைய கல்விமுறையும், கையாலாகாதவர்களாக ஆசிரியர்களும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இங்கே நண்பர் நவாஸுதீன் மாதிரி ஒரு நேர்மையான உரையாடலைத் தொடர, ஒரு சமுதாயமாக அவர்கள் முன்வரும் நாட்களுக்காகக் காத்திருக்கிறோம்.


ஆனால் அப்படி உருப்படியாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர்களில் ஒரு பகுதி துடிப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறதே!  

மீண்டும் சந்திப்போம். 

விங் கமாண்டர் அபிநந்தன்! இருவேறு கோணங்கள், கேள்விகள்!

தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானிகளிடம் பிடிபட்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள், இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மூன்று விமானிகளை சிறை பிடித்திருப்பதாகவும் அடித்த தம்பட்டம்  கொஞ்ச நேரம் தான்!அப்புறம் பொய்யாகிப் போனது என்பதை நிறைய நண்பர்கள் இங்கே கவனிக்கத்  தவறுகிறார்கள்! வீண் பதட்டமும் #givepeaceachance என்ற உபதேசங்களும் நிறையக் கிளப்பிவிடப்படுகின்றன!


வேறெந்தத் தருணத்திலும் இங்கே தமிழேண்டா போராளிகளும் இணையதள திமு கழக போராளிகளும் இத்தனை வக்கிரமாக, இந்திய பாகிஸ்தான் உரசல்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைக்கு மிக  நெருக்கமாகப் போய் நான் பார்த்ததில்லை!  கழக இணைய தளக் கூட்டமே அணு ஆயுதப்போர் மூளுமோ? போர்வேண்டாமென்று சொல்லுங்கள் என்று தேவையே இல்லாத அச்சத்தை, விஷத்தை விதைத்துக் கொண்டு வருகிறது என்பது தற்செயலானதுதானா?

அதேநேரம், முன்னெப்போதுமில்லாத அளவுக்கு உலக நாடுகள் ஆதரவை இந்தியா பெற்று வருவதை இவர்கள் வேண்டுமென்றே கவனிக்கத் தவறுகிறார்கள்!  மசூத் ஆசார் விவகாரம், பாகிஸ்தான் சொந்தமண்ணில் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதை அம்பலப் படுத்தி வருகிறது.

ஐ.நா பாதுகாப்புசபையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் முதலான நாடுகள் மசூத் ஆசார் மற்றும் அவன் நடத்தும் ஜெயிஷ் ஏ மொகமது இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளன. வழக்கம் போல சீனா தனது வீட்டோ உரிமையைப் பயன்படுத்தி, இதற்கு முட்டுக்கட்டை போடலாம்! ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து தனிமைப்படுத்தப் படுவதை சீனாவால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? கவிழ்ந்துபோன பாகிஸ்தான் பொருளாதாரத்தை நிமிர்த்தி விடத்தான் முடியுமா? எல்லோருக்கும் தெரிகிற விடைதான்! நம்மூர் திருகல் டேனியல்களுக்கோ, கழகக் கண்மணிகளுக்கோ கண் தெரியாமல் செலெக்டிவ் blindness வந்துவிடும்! 1971 இல் தைவானுக்குப் பதிலாக ஐநா பாதுகாப்புசபையில் இடம்பிடித்த  சீனா முதன்முதலாக தன்னுடைய veto power ஐப் பயன்படுத்தியதே 1972 இல் வங்காளதேசத்தை ஐ.நா  உறுப்புநாடாக ஏற்கக்  கூடாது  என்பதில்தான்! 1965 இந்தோ பாகிஸ்தான் போர் சமயத்திலிருந்தே  சீனாவின்உள்நோக்கம் பாகிஸ்தானைப் பாதுகாப்பது அல்ல! குறி இந்தியா மீது தான் என்பது புரிந்தால் சரி ! 

நான்கு வருடங்களுக்கு முந்தைய வீடியோ இது! எப்படி பாகிஸ்தான் உருவான நாட்களிலிருந்தே மதத்தின் பெயரால் தீவீரவாதிகள், தாலிபான்களை  உருவாக்குகிற பயிற்சிக்கூடங்களை நடத்திவருகிறது என்பதை ஒரு 12 நிமிடக் காணொளியில் சொல்கிறார்கள். தேடினால், பாகிஸ்தான் என்பதே இந்தியவெறுப்பு என்ற ஒற்றைக் கனவில் உதித்த தேசம் என்பதற்கு ஏராளமான சான்று, தரவுகள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன.

பாகிஸ்தானுடன் சமாதானம் உண்மையிலேயே சாத்தியமா? பயங்கரவாதத்தின் விஷப்பல்லை பிடுங்க நம்மால் முடியுமா?

இந்தக்கேள்விகளை இருவேறுகோணங்களில் இருந்து பார்க்கிற பார்வைகளாக! ஒன்று ப்ரம்ம செலானி சொல்வது போல Unless India is willing to take the battle to Pakistan’s terror masters, the latter will continue employing their terrorist proxies against it

இன்னொன்று TOI செய்தி ‘Non-military’ raid: How India and Pakistan differ இது செய்தியின் தலைப்பு. 

இரண்டையும் பார்த்துவிட்டு ஒரு கருத்து அல்லது கேள்வி இயல்பாகவே வரும் அல்லவா? இங்கே வந்து சொல்லலாம் அல்லவா!  

         



சண்டேன்னாமூணு! கொஞ்சம் படம்! கொஞ்சம் செய்தி! கொஞ்சம் கேள்வி!




இங்கே நித்தியானந்தா விவகாரத்தில் முன்னேற்பாட்டுடன் வீடியோவெல்லாம், அதை மூன்று நான்கு நாட்கள் சலித்துப் போகிற வரை ஒளி பரப்பினமாதிரி, ஜனங்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்த்த மாதிரி அங்கே எல்லாம் இல்லை போல! 

அல்லது இதெல்லாம் சகஜமப்பா கேசு தானோ?!

 பாதிரிமார் சில்மிஷமெல்லாம் வீடியோவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை! கிரேக்கத் தீவு ஒன்றில் நீலக் கடலின் பின்னணிக்குத் தோதாக, கிறித்தவ தேவாலயத்தின் கோபுரமும் நீல வண்ணத்தில்! 


நீலப் படம் அல்ல! அல்ல!
 
போப் பெனடிக்ட் எங்கே போனாலும், வில்லங்கம் அங்கே முன்னால் போய் ஆஜராகி விடுகிறது!

ஊனமுற்ற சிறுவர்களிடம், அனாதைகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அங்கே அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் பாதிரிமார் சில்மிஷம், பாலியல் வன்முறை செய்துவருவதும் குறையவில்லை! தினசரி
ஏதோ ஒன்று அம்பலமாகிக் கொண்டிருப்பதும்,  உலகெங்கும் கண்டனங்கள் பெருகி வருவதும் நீண்ட தொடர்கதையாகி வருகின்றன. 

பாதிரிமார் சில்மிஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் வழக்குத் தொடருவதும் நஷ்ட ஈடாக பல நூறு கோடி டாலர்களை சர்ச்சுகள் தண்டம் அழுது வருவதுமே கூட மெகா சீரியலாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன! இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் வழக்குகள், செய்திகள் கிளம்புமோ தெரியவில்லை!

இங்கிலாந்துக்கு இருபத்தெட்டு வருடம் கழித்து, வருகிற செப்டம்பர் மாதம்  ஒரு போப் விஜயம் செய்ய இருக்கும் தருணத்தில், கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் கலந்தமாதிரியான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யோசனை செய்த விவரம், அது வெளியே தெரிய வந்ததும், பிரிட்டிஷ் அரசு வாடிகனிடம் வருத்தம் தெரிவித்ததும் முழு விவரங்களுக்கு 
மேலே லின்கைச் சொடுக்கிப் பாருங்கள்!

அப்படி என்ன வில்லங்கமான நிகழ்ச்சி நிரல், யோசனை என்று கேட்கிறீர்களா?

கருச் சிதைவு, ஓரினத் திருமணம் இவற்றை கத்தோலிக்க சர்ச் கடுமையாக எதிர்த்து வருகிறது! 


போப் வரும்போது, ஓரினத் திருமணம் (ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்) ஒன்றை ஆசீர்வதித்து நடத்துவது, 

போப்  பிராண்டுடன் கருத்தடைக்கான காண்டம்களை வெளியிடுவது, 

ஒரு மருத்துவ மனையில் கருத்தடைக்கான வார்டைத்  திறந்து வைப்பது 

உள்ளிட்ட யோசனைகளை ப்ரெயின் ஸ்டார்மிங் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதில், ஒரு அரசு ஊழியர் யோசனைகளாக சமர்ப்பித்த விவரம்  வெளியே கசிந்து, பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது! சண்டே டெலிகிராப் பத்திரிகையில் நேற்றைக்கு இந்த செய்தி வெளியானதும், வாடிகனில் உள்ள பிரிட்டிஷ் தூதர் போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தாராம்!

போப்பின் வருத்தம் தீர்ந்ததா? அல்லது பாதிரி சில்மிஷப் பிரச்சினை தீர்ந்ததா?

oooOooo 


பரிணாமம் படும் பாடு!
இப்போதெல்லாம் வேலைக்கு ஆகாத, பொழுதுபோக்குக்கு மட்டும்  நாத்திகம் பேசுகிற மாதிரியே பரிணாமத்தைப் பற்றிப் பேசுவதுமே ஒரு ட்ரெண்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது! பரிணாவியலைப் புரிந்து கொண்டுதான் பேசுகிறார்களா, எழுதுகிறார்களா என்று தேடிப்பார்த்தால் விடை பூஜ்யம் தான்!


வாலுடன் பரிணாமம் பேசினால் இப்படித்தான் இருக்குமோ!

இந்தப் படத்தைப் பாருங்கள்! உங்களுக்காவது நாத்திகம், பரிணாமம், பரிணாமவியல் ஏதாவது புரிகிறதா?

oooOooo

கல்லறைக்குப் போனால் மட்டும்  சும்மா விடுவேனா ?!


 
காதலிக்காகத் தாஜ் மஹால் கட்டினான், தற்கொலை செய்து கொண்டான் என்று இங்கே எல்லாத் தியாகத்தையும் ஆண்கள் தான் செய்து கொண்டிருப்பதாக சில வெட்டி மன்றப் பேச்சாளர்கள் சொல்வதுண்டு! இது வரை எந்தப் பெண்ணுமே அந்த மாதிரி செய்தததாகக்   கேள்விப்பட்டதும் இல்லையென்பதால் நான் கூட அதை அதை நம்பினதுண்டு! ஒருவலைத் தளத்தில்  பார்த்த படம், செய்தி, கொஞ்சம் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!




ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் மாசிடோன் என்ற கல்லறைத் தோட்டத்தில், ஒரு பெண்மணி தன்னுடைய மாளாத காதலைச் சொல்கிற மாதிரி இறந்த காதலனுடைய கல்லறை மேல் சிற்பமொன்றை வடிவமைத்திருக்கிறாராம்!

மாளாத காதலைச் சொல்வது கிடக்கட்டும்! கல்லறைக்குள் போனாலும் உன்னை விட மாட்டேன் என்று சொல்கிற மாதிரியும் இருக்கிறதே என்று புள்ளிராசா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம் அண்ணாச்சி கருத்துத் தெரிவிக்கிறார்!

உங்கள் கருத்தென்னவோ?!

oooOooo

காங்கிரஸ் காமெடி! இன்றைய கேள்வி !

வருகிற மே மாதம் முதல் தேதி, குஜராத் மாநிலம் அமைந்து ஐம்பதாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, நரேந்திர மோதி அரசு பொன் விழாக் கொண்டாட்டங்களை விரிவாக ஏற்பாடு செய்திருக்கிறது. ஜனாதிபதியை அழைத்திருந்தார்கள்! வர இயலாது என்று ஏதோ சால்ஜாப்பைச் சொல்லி நிராகரித்ததன் பின்னணியில், காங்கிரஸ் கட்சி இருப்பது பெரிய ரகசியமுமல்ல!

ஜனாதிபதிப் பதவி என்பது  வெறும்  ரப்பர் ஸ்டாம்ப் மாதிரிப் பயன்படுத்துவது, அல்லது ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்தபோது பெருமையாகச் சொல்லிக் கொண்டபடி, மேடம் உத்தரவிட்டால் காலணியைக் கூடத் துடைக்கத் தயாராக இருப்பதாக- அந்த மாதிரி  வேலைக்குத் தான் என்பது இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது! மோதி குஜராத் மாநில அரசியலில்  வலுவாகக் காலை ஊன்றிக் கொண்டிருப்பதும், அடுத்த பிரதமர் பதவி வேட்பாளராகக் கூட அறிவிக்கப் படலாம் என்ற அளவுக்குத் தேசீய அளவில் வளர்ந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் கண்ணை ரொம்ப நாளாகவே உறுத்திக் கொண்டிருக்கிறது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு நரேந்திர மோதியை விசாரித்ததும், அரசியல் பின்னணியே தவிர, உண்மையில் அந்தப் பெட்டி எரிக்கப் பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் வழங்க அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான்! 


இன்றைக்கும், அப்புறம் வரலாற்றில் என்றைக்கும் காமெடிப் பீஸ் காங்கிரஸ் கட்சிதான் என்று பெயர் வாங்குவதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! 

காங்கிரஸ்காரர்கள், காமேடிப்பீசாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு முன்னெப்போதும் இவ்வளவு கடுமையாக உழைத்தது இல்லை! கோமாளிப் பட்டமெல்லாம் இதற்கு முன்னால்தானே வந்து சேர்ந்தது தான்!

கொஞ்ச நாளைக்கு முன்னாள், மும்பை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று ராஜீவ் காந்தியின் நண்பராக இருந்து, இன்றைக்கு ஆகாமல் போனவரான அமிதாப் பச்சனை அழைத்து விட்டு, போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்த பின்னால், ஐயா காங்கிரஸ் மேலிடத்துக்கு வேண்டாதவர் என்று உறைத்ததும், அழைப்பு அனுப்பவே இல்லை என்றுமகாராஷ்டிரா மாநில முதல்வர்  பல்டி அடித்து, அப்புறம் ஒரு அமைச்சர் நான் தான் அழைத்தேன், இது முதலமைச்சருக்குக்கும் தெரியும், அவர் ஒப்புதலோடு தான் அழைப்பே அனுப்பப் பட்டது என்று போட்டு உடைத்த கூத்து நினைவுக்கு வருகிறதா?

பி கே ஹரி பிரசாத் என்று ஒரு காங்கிரஸ்காரர்! காங்கிரஸ் பொது செயலாளர்களுள் ஒருவர்! குஜராத் மாநிலத்துக்குப் பொறுப்பானவரும் கூட!

அமிதாப் பச்சனை குஜராத் மாநில அரசு தன்னுடைய பிராண்ட் அம்பாசடராக  வைத்திருப்பது ஏன் என்று கேள்வியை எழுப்பி
ருக்கிறார்! குஜராத் மாநிலத்தின் தலை சிறந்த தொழில் அதிபரான அம்பானிகளை விட்டு விட்டு, அமிதாப் பச்சனை நல்லெண்ணத் தூதுவராக நியமிப்பானேன் என்பது அவருடைய கேள்வி!

ரொம்பவே நியாயமானது தான்!
செய்தி இங்கே!

கேள்வியைக் கேட்பதற்கு முன்னால், அது ஏன் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தான் தலைவராக இருக்க வேண்டும்? வேறு உள்ளூர்க் காரர்கள், இந்தியர்கள் எவருமே இல்லையா? நேரு குடும்பத்து வாரிசுகளைத் தவிர, காங்கிரசுக்கு வேறு நாதியே இல்லையா?  

இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டு பிடித்து விட்டு, அப்புறம் நரேந்திர மோதி, ஆகாமல் போன அமிதாப் பச்சனைக் கேள்வி கேட்கட்டுமே!

காங்கிரஸ் காமெடிப் பீஸ்களிடம்,
அடிப்படை நேர்மை,குறைந்த பட்ச அறிவைக் கூட எதிர்பார்க்க முடியாது என்பதால்............

உங்களைத் தான் கேட்கிறேன்! 

இன்னும் எத்தனை நாள், இந்த முதுகெலும்பே இல்லாத,  காங்கிரஸ் கட்சியை சகித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?