பெயில் கெடச்சவுடனே அடுத்தது இதுதானே!
அப்படி இப்படி வசனம் எடுத்து உட்டாத்தானே அனுதாபம் பெருகும்!
அம்மாவை ஆறுதல்
படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக் காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...''
என்றபடி
கோர்ட்டுக்கு அருகே நிற்கும்
வேனில் ஏறச்
சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார்
நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத அந்த சக்தி!
நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத அந்த சக்தி!
இப்படித் தொடர்ந்து கனிமொழிக்கு அனுதாபம் தேடித் தருகிற மாதிரி செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி! என்று போஸ்டர் அடித்துத் திருவிழாக்கள் சங்கமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்னால்,தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிப் போயிருக்கிறது, கனிமொழி ஜாமீன் விவகாரம்!
அடுத்த நிகழ்ச்சி, நவாப் நாற்காலி!
நிகழ்ச்சிக்குப்போகுமுன் ஒரே ஒரு கேள்வி!
ஒரே நாற்காலிக்கு எத்தனை வாரிசுகள்? எத்தனை போட்டிகள்?
கனிமொழி நாளைய தலைவராவது சாத்தியம்னே தோணுது. பொதுமக்களின் சராசரி ஞாபக சக்தி can be easily skewed.. ஓட்டுனு வரும் பொழுது அனுதாபம் பரிதாபம் என்றைக்குமே தராசில் கொஞ்சம் இறங்கிப் போவது சகஜம்.
ReplyDeleteசில விபத்துக்கள் தவிர்க்க முடியாதவைதான் என்றாலும் எல்லா விபத்துக்களுக்குமே அதைப் பொது விதியாக்கி விட முடியாதே அப்பாதுரை சார்!
ReplyDeleteதிமுக இந்த அளவுக்கு வளர்ந்ததே ஒரு விபத்து தான், இதில் தொடர் விபத்துக்கள் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?