2G ஸ்பெக்ட்ரம் ஊழல்! (வினை) விதைத்தவன் (வினை) சிறையில் அறுப்பான்!



 நிரா ராடியா ஸ்டேட்மென்ட்!   

:: டாட்டாக்கள் தயவிருந்தால் வழக்கில் இருந்தும் தப்பலாம்!
கூட்டாளிகளை மாட்டிவிட்டு காங்கிரசும் தப்பலாம்
::

 
இதுதான் காங்கிரசின் மனக்கணக்கு அல்லது  கூட்டணி தர்மம்!!
 இதுவும் கீழே உள்ள இரண்டும் நிதித்துறை செயலராக இருந்த டி சுப்பாராவ் குறிப்புக்கள்  

சால்வை அழகருக்கு, வாய்க்கொழுப்புடன் திரிந்ததற்காகவோ என்னவோ ஆப்பு மேல் ஆப்பு!பிரதம மந்திரி அலுவலகத்தில் இருந்து, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது நிதித்துறை செயலாளராக இருந்த, இப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும்
டி சுப்பாராவ் எழுதிய அலுவலகக் குறிப்புக்கள் அம்பலமாகி
ருக்கின்றன. ஏற்கெனெவே சிபிஐ டாக்டர் சுவாமியிடம் அளித்த கோப்புக்களை வைத்து,   2001 நிலவரப்படி 2008 இலும் விலை நிர்ணயிக்க ராசாவோடு சேர்ந்து ஒப்புக் கொண்டது,மூன்று வருட லாக் இன் நிபந்தனையைத் தளர்த்தி, ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை கொழுத்த ஆதாயத்துக்கு வேறு நிறுவனங்களுக்குக் கைமாற்ற உடந்தையாக இருந்தது என்று ஆ. ராசா மீது சுமத்தப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுக்களிலும் பங்காளியாக ஆ.ராசா பக்கத்தில் உட்கார வைத்துவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை உறுதி செய்து, ஆப்புக்கு மேல் ஆப்பு வைக்கிற மாதிரி சுப்பாராவ் குறிப்புக்கள், பானாசீனாவும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது என்று தெஹெல்காவின் இந்த செய்தி சொல்கிறது.

சுக்ராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!


புதுதில்லி, நவ. 19: காங்கிரஸ்காரரும் , நரசிம்மராவ் அமைச்சரவையில் இருந்தவருமான முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் சுக்ராம், 1996ல் ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக ஒப்பந்தம் முடித்துக் கொடுத்ததற்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியது. இதை அடுத்து இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப் பட்டன.

இதன்படி, தில்லி நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. முன்னதாக தன் வயதைக் கருத்தில் கொண்டு தனக்கு கருணை காட்டுமாறு அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த வழக்கையும் சேர்த்து, சுக்ராம் இது வரை மூன்று வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கிறார்! ஊழல் வழக்கில் முதன்முதலாக தண்டனை பெற்று ஆ.ராசா முதலான பிரபலங்களுடன் திஹார் சிறையில் அடைக்கப்படும் பெருமையையும் பெற்றிருக்கிறார். 
ஆ.ராசா மாதிரியே, சுக்ராம் மகனும் சுக்ராம் செய்த சேவையை பாராட்டாமல், பொய்வழக்கில் சிக்க வைத்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்

அடுத்து மாட்டவிருக்கிற தயாநிதி, பானாசீனா இன்னும் பலருக்கும் முன்னோடியாக வாதங்களை எடுத்து வைத்த ஆ.ராசாவுக்கு இவர்கள் தனிப்படவாவது நன்றி சொல்லியிருக்கலாம்!

நன்றி கெட்ட உலகம்! நன்றி கெட்ட அரசியல்!

 


செத்துப்போனவர்களைக் கூட இந்த விவகாரம் விடாது போல இருக்கிறது! சிதம்பரம் தொடர்ந்து தோலுரிக்கப்படுகிற விவகாரத்தைத் திசை திருப்பவோ என்னவோ, சிபி ஐ இன்றைக்குத் திடீரென பிஜேபியின் முன்னாள் அமைச்சரும் இப்போது உயிருடன் இல்லாதவருமான பிரமோத் மகாஜன் பெயரையும் சேர்த்து ஒரு முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்து, வோடபோன், ஏர்டெல் அலுவலகங்களில் ரெயிடும் நடத்தியிருக்கிறது. 

அதென்னவோ தெரியவில்லை! தொலை தொடர்புத்துறையில் ஊழல் செய்தவன் கெட்டான், அவனுடன் சேர்ந்தவனும் கெட்டான் என்றே ஆகிக் கொண்டிருக்கிறதே, இதெல்லாம் என்ன விசித்திரம் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கொஞ்சம்யோசித்துத் தான் பாருங்களேன்!

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!