இலவசங்கள் என்ற மாயை!பொறுப்பு நமக்கும் இருக்கிறதே!


 தினமணி தலையங்கம்: தீதும் நன்றும் பிறர் தர வாரா!


பால் விலை, பஸ் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்காக அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் நிச்சயமாக குறை சொல்லும். 
  
(சொல்கிறார்கள், கொதிப்பைத் தூண்டுகிறார்கள்!)
றுபரிசீலனை செய்து பஸ் கட்டண உயர்வை குறைக்கச் சொல்வார்கள். தமிழக அரசும் நிச்சயமாக இதில் சிறிது மாற்றங்களைச் செய்து, கட்டணங்களைக் கொஞ்சம் குறைக்கலாம். ஒட்டகத்தின் மீது சுமையை ஏற்றிவிட்டு, கொஞ்சம் சுமையை ஒட்டகத்தை ஏமாற்றக் கீழே போடும் உத்திதான் இதுவும்!

 (அந்த முட்டாள் ஒட்டகம் மாதிரியே, நாமும் ஏமாறப் போகிறோமா?)
பால் மற்றும் பஸ் கட்டணத்தின் நியாயத்தை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். அதேவேளையில், அடுத்த நடவடிக்கையாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வு தவிர்க்கப் படக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை. மின்சாரத் துறையைப் பொருத்தவரையில் வழித்தட இழப்பை குறைப்பதும், வெளி மாநிலங்களில் மின்சாரம் வாங்குவதைத் தவிர்ப்பதும் செலவுகளைக் குறைக்க உதவும். இதனால் மின்கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிக்க முடியும்.

 (என்ன செய்தாலும்,சந்தை நிலவரத்தை ஒட்டி விலை வைக்காமல் தவிர்க்க முடியாது)
லவச மின்சாரம் அளித்தாலும், அவற்றை மீட்டரில் அளந்து பதிவு செய்யவும், அந்த விவசாய நிலத்தில் மின்பயன்பாட்டுக்கு ஏற்ப விவசாயம் நடைபெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொத்தாம் பொதுவாக இலவச மின்சாரம் வழங்குவதால், அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது.


 (இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்!There is no free lunch!கசப்பானாலும் யதார்த்தம் இதுதான்!)
த்திய அரசுக்கு இணையாக சம்பளம், மின்வாரியத்தில் கூடுதலாக ஆட்கள் நியமனம் ஆகியவற்றால் அத்துறைக்கு ஏற்பட்டுள்ள செலவினம்தான் அத்துறைக்கு இழப்பைக் கூடுதலாக்குகிறது. அதைச் சரிசெய்யத்தான் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது. மின்துறையைப் பொருத்தவரை சரியான அணுகுமுறை, நடவடிக்கை எடுக்கப்பட்டாலே போதும் இந்த மின்கட்டண உயர்வைத் தவிர்க்க முடியும்.

 (ஊழியர் சம்பளம் காரணம் என்பதைவிட, வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறார்களா என்பதும்,திறமையான நிர்வாகமும் மிக முக்கியம்!)
பால் கொள்முதல் விலை குறைவு என்றும், ஒரு லிட்டர் சுத்தி கரிக்கப்பட்ட தண்ணீர் விலை ரூ.15, அரை லிட்டர் பாலின் விலையும் ரூ.15 தானா என்றும் விவசாயி கேட்கும்போது, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய கோரிக்கை நியாயமானது என்று சொல்ல முடிகிறது. ஆனால், இதற்காக பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியே ஆக வேண்டும் என்கின்ற போது, அதன் அடுத்தகட்ட தாக்கம் விற்பனை விலையின் மீதுதான் விழும். இல்லையென்றால் இந்த விலை உயர்வை அரசு தாங்கிக் கொள்ள வேண்டும்.

ப்போதும்கூட அரசின் கொள்முதல் விலையைவிட விற்பனை விலை குறைவுதான். எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 28 ஆக உயர்த்தப் பட்டாலும் பால் ஒரு லிட்டர் ரூ.24 மட்டுமே

(பால்விலை விவகாரத்தில், கவனிக்கத் தவறுகிற விஷயம், தமிழ்நாட்டின் தினசரி பால் உற்பத்தியான 150 லட்சம் லிட்டர்களில், தனியார் பங்கு தான் அதிகம்!128 லட்சம் லிட்டர்கள்!ஆவின் கொள் முதல் செய்வது வெறும் 22 லட்சம் லிட்டர்கள்தான்!ஏழில் ஒரு பங்கை விற்பனை செய்யும் ஆவின் இப்போது தான் விலை உயர்வை அதிகரித்திருக்கிறது. ஏழில் ஆறு பங்கை  விற்கிற தனியார்கள் லிட்டருக்கு ரூ. 31 முதல் ரூ.36 வரை விலை உயர்த்தி பல மாதங்கள் ஆயிற்று.)
.
ஸ் கட்டணம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே உயர்த்தப் பட்டிருக்க வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் டீசல் விலை பல முறை உயர்த்தப் பட்ட பின்னரும்கூட பஸ் கட்டணத்தைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு உயர்த்தாமல் காலம்கடத்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. தனியார் பேருந்துகள் மட்டும் சில வழித் தடங்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்த்திக் கட்டணம் வசூலித்தன. அதை அந்த அரசு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

து குறித்துப் பத்திரிகைகள் எழுதியபோது, அரசு அளித்த விளக்கம் வினோதமானது: "பண்டிகை நாளில் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை உயர்த்துவதைக் குறித்துதான் பொதுவாக பத்திரிகைகள் எழுதியுள்ளன. அரசு கட்டணத்தை உயர்த்தவில்லை'' என்பதுதான் அன்றைய போக்கு வரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு அளித்த பதில். தனியார் பேருந்துகளில் செவிவழி உத்தரவு மூலம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர்கள் ஆசியுடன் நடந்த இந்த விவகாரத்துக்கு அமைச்சர் அளித்த விளக்கம் அது.

னியார் பேருந்துகளைப் போன்று, அப்போது பொதுவாக ஒரு ரூபாய் உயர்த்தியிருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த இரு ஆண்டுகளில் சில நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். தேர்தலை மனதில் இருத்தி அன்றைய திமுக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்துவிட்டது. அன்று கொஞ்சம் உயர்த்தி இருந்தாலும் கூட, இன்று இந்த பஸ் கட்டண உயர்வுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் காண முடியும்.

மிழக அரசின் பால் விலை, பஸ் கட்டண உயர்வின் நியாயத்தைப் புரிந்துகொண்டாலும், இந்த விலை உயர்வை அரசே, சென்ற ஆட்சிக் காலத்தில் திமுக செய்ததைப்போல, தாங்கிக்கொண்டு சமாளிக்க முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது. இலவசங்களை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே போகிற அரசினால், இதைச் செய்ய முடியாது. மக்கள் தாங்கள் பெறும் இலவசங்களுக்குத் திருப்பித் தரும் விலைதான் இத்தகைய கட்டணங்கள் மற்றும் விலை உயர்வு. இந்த இலவச திட்டங்கள் இல்லாமல் இருக்குமேயானால், இந்த விலை உயர்வைக் கூடாது என்று கேட்கும் தார்மிக உரிமை நமக்கு இருந்திருக்கும். அரசுக்கும் விலையுயர்வைத் தவிர்க்கும் பொருளாதார வசதி இருந்திருக்கும்.

மிக்ஸி, 20 கிலோ அரிசி, லேப்டாப், ஆடு, மாடு என்று இலவசங்களை அடுக்கிக்கொண்டே போனால், இந்த அரசினால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை தானே ஏற்றுத் தாங்கிக்கொள்வது என்பது சாத்தியமில்லாதது.

தைவிடக் கசப்பான புள்ளிவிவரம்: மது விற்பனை தமிழ்நாட்டில் மாதம் தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏப்ரலில் ரூ.1555 கோடி, மே மாதம் ரூ.1736 கோடி, ஜூன் ரூ.1732 கோடி, ஜூலை ரூ.1796 கோடி, ஆகஸ்ட் ரூ.1800 கோடி, செப்டம்பர் ரூ.1824 கோடி, அக்டோபர் ரூ.1924 கோடி.

த்தனை கோடி ரூபாய்க்கு சாராயம் (ஐஎம்எப்எல் என்றும் நாகரிகமாக சொல்லலாம் தான்) குடிக்கிற தமிழன், பாலுக்கும் பஸ்சுக்கும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்கட்டுமே என்று அரசு நினைத்தால், அதற்காக யாரைக் குறை சொல்வது?

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

சென்ற மார்ச் மாதப்பதிவு ஒன்றில் எழுதியிருந்தது இது.....!

இலவசங்களையும் கடன் பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது.


இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல் வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப் பட்டிருந்தது.

மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி? 

இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப் படுவதைப் போல, அரியணையில் கொலு வீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பாவம், வெறும் விட்டில்பூச்சிகள் தானா மக்கள்?
மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!  
 

லிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

யேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு  திரும்புகிறான்!

தே மாதிரித் தான்!

மூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

 

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?
 

4 comments:

 1. படிக்கப் படிக்கப் பயம் தான் அதிகமாகிறது. புலி வாலைப் பிடித்த கதையாக இலவசம் மாறி வருவதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது போல சாராயத்துக்குக் காசு இருந்தால் மின்சாரத்துக்கு இல்லாமல் போகுமா?..

  ReplyDelete
 2. is Tamilnadu a bankrupt State? அரசாங்கத்துக்கான பேலன்ஸ் சீட் கிடைக்குமா?

  ReplyDelete
 3. வாருங்கள் அப்பாதுரை சார்!

  இலவசங்கள் என்பது வேறு, சமூகத்தில் கடை நிலையில் இருக்கிற பகுதியைக் கை தூக்கி விடுவதற்காக செய்யும் உதவிகள் வேறு என்பதைஜனங்களும் சரி, அரசியல்வாதிகளும் இங்கே புரிந்துகொள்ளவே இல்லை.ஊதாரித்தனமாக இருந்தால், தனிநபர் மட்டுமல்ல ஒரு அரசுமே திவாலாக வேண்டியதுதான்.

  இதில் தமிழ்நாடு என்று மட்டுமே அல்ல, எல்லா மாநிலங்களுமே ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றன. இவ்வளவு இலவசங்களை அறிவிக்காத மேற்குவங்க மாநிலம் தமிழ்நாட்டைப் போல இரண்டுபங்கு கடனாளியாக இருக்கிறது.

  பட்ஜெட் என்பதே பாலன்ஸ் ஷீட் தானே!

  ReplyDelete
 4. பட்ஜெட் என்பதே பாலன்ஸ் ஷீட் தானே? இந்த பதிலைச் சொன்ன பிறகுதான் வேறுபாடு கொஞ்சம் சுளீரென்று உறைத்தது.

  வரவு செலவுக் கணக்கில் இன்ன வரவுக்கு இன்னின்ன செலவு, இவ்வளவு மிச்சம் அல்லது கடன் என்று மட்டுமே இருக்கும்.பட்ஜெட் என்பது deficit financing என்ற கீனீஷியன் பொருளாதாரக் கொள்கையின் நீட்சி.கடன் வாங்கிக் கல்யாணம் என்று சொல்வார்களே, அது மாதிரி, இந்தியச் சூழ்நிலைகளில், கடன் வாங்கி வாரிசுகளின் கஜானாவை நிரப்பி, ஜனங்களுடைய தலையை மொட்டை அடிப்பது என்றாகிவிட்டது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!