2G ஸ்பெக்ட்ரம் ஊழல்! வழக்கு விசாரணை அப்டேட்ஸ்!
டந்த வெள்ளிக் கிழமையன்று தொடங்கிய 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் முதல்நாள் இருந்த பரபரப்பு கூட்டம் மாதிரி, நேற்றும் இன்றும் இல்லை! என்னமோ சூப்பர் டூப்பர் ஸ்டார் நடிகர்  நடித்த பட ரிலீஸ் மாதிரி முதல்நாளன்று அலை மோதிய கூட்டம், இன்றைக்கும் நேற்றைக்கும் காணாமலேயே போனது.

முதல் நாள் மிகப் பரபரப்பாக இயங்கிய டிவிட்டரும், ஊடகங்களும் சுவாரசியத்தை இழந்துவிட்டனவா?

ப்படி எல்லாம் இல்லை!
                                               
திர்பார்த்ததுபோலவே, சாட்சியங்கள் மழுப்பியிருக்கிறார்கள்! 

ப்படியே அந்தர்பல்டி அடிக்கவில்லை என்பதைத் தவிர ஊடகங்களுக்குத் தேவையான பரபரப்பு, சென்சஷன் எதுவும் சாட்சியங்களில் இல்லை.பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தமுதல் சாட்சி ரிலையன்ஸ் காபிடல் ஆனந்த் சுப்பிரமணியம், அடுத்து விசாரிக்கப் பட்ட ரிலையன்ஸ் சேதுராமன்  இருவருமே பாம்பும் நோகாமல் தடியும் நோகாமல் சாட்சியமளித்ததாக கிடைக்கிற செய்திகள் சொல்கின்றன. சிபிஐ வழக்கறிஞர் என்ன செய்தார் என்ற தகவல் தெரியவில்லை.

ஆ.ராசாவோ  சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். நேற்றைக்கு நீதிமன்ற வளாகத்திலேயே நன்றாகத் தூங்கி வழிந்ததாக ட்விட்டர் செய்தி ஒன்று சொன்னது. இன்றைக்கும் தூங்க விட்டார்களா என்று இன்னமும் தகவல் இல்லை.

சிபிஐ  தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் லலித், உச்சநீதிமன்றத்தில் அவருக்கிருந்த மற்ற வழக்குகளில் இருந்து விலகி, இந்த வழக்கில் மட்டுமே கவனம் செலுத்தப் போகிறார்.

தனிப்பட்ட முறையில் பேசும்போது திமுகவினர் காங்கிரசை அவ்வளவு கேவலமாகத் திட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஒரு புதுடில்லி செய்தியாளர். கனிமொழி ஜாமீன் மீது டில்லி உயர்நீதிமன்றம் இன்னமும் தன் முடிவைச் சொல்லவில்லை என்றாலும் கூட, இனிமேல் ஜாமீன் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான் என்பதைத் திமுகவினரே உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான், வெட்டிக் கூட்டம் போட வேண்டாமே என்று திமுகவினர் நீதிமன்றத்தில் திரளாக அணிதிரளவில்லையாம்!அதுவே தலீவருக்கு மிகப்பெரிய குறையாக இருந்ததாம்! குமுதம் ரிபோர்டர் மட்டும் தகவல் தெரிந்து சொல்கிறார்!

நேற்றைக்கு பாடியாலா நீதிமன்றத்தில் நடந்த இரண்டாம் நாள் விசாரணையை விட, பாராளுமன்றக் கூட்டுக் குழு முன் சிஏஜி அலுவலக
திகாரி திரு சிங் ஆஜராகித் தன்னை மிரட்டி அறிக்கையில் கைநாட்டு வாங்கியதாகச் சொன்னதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.அதோடு கதை முடிந்ததா?ஜேபிசி காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால்,எதிர்க்கட்சித் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக் கணக்குக் குழு, சிதம்பரம், பிரதமர் இருவரும் தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்குக் காரணம் என்று தனது இரண்டாவது அறிக்கையை இன்று கசிய விட்டிருக்கிறது.

முதல் அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஊற்றி மூடிவிட்டார்! இரண்டாவது அறிக்கைக்கும் அதே கதிதான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேட்டிருந்த கோப்பை தருவதில் சிபிஐ சுணக்கம்!

இன்று மதியம் மூன்று மணிக்கு மேல் நீதிமன்றத்தில், ஒரு வார காலமாகியும் கூட சிபிஐ நீதிமன்ற உத்தரவுப்படி சுவாமியிடம் தர வேண்டிய கோப்பைத் தரவில்லை என்று புகார் அளிக்க இருப்பதாக சுவாமி தனது ட்விட்டர் செய்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சிபிஐ இன்னும் இரண்டு நாள் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறது. நீதிமன்றமும்  இரண்டு நாட்களுக்குள் தர வேண்டும் என்று கடுமையாக எச்சரித்து
அதை ஏற்றுக்கொண்டிருப்பதாக, அப்படித் தரவில்லையானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப் போவதாக சுவாமி டிவிட்டியிருக்கிறார்.

Chidambaram: Caught by courts, bowled by Swamy?

Rediff தளம் சரியாகத் தான் தலைப்பிட்டிருக்கிறது!!

ஆக, சிபி ஐ, பானாசீனா, சோனி(யா) காங்கிரஸ் என்று இப்படி சுவாமி பயம் ஒருத்தர் விடாமல் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது!

@ வசந்தி ஸ்டேன்லி!

சுவாமி பயம் நீங்க, வழக்கறுத்தீசுவரர் கோவில் பரிகாரம் பண்ணிய மாதிரி எந்தக் கோவிலில் பரிகாரம் பண்ணினால் சரியாக இருக்கும்?

பகுத்தறிவுப் பாசறையில் தயாரான உங்களுக்குத் தானே, ஆத்திகர்களை விட இந்த மாதிரியான விவரங்கள் அத்துப்படி!

கூட்டணி தர்மத்தில் காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டுமே!!

2 comments:

 1. ஸ்பெக்ட்ரம் குறித்த உங்கள் கட்டுரைகளைப் பார்க்கும் இரண்டு பகுதிகள் நினைவுக்கு வருகின்றது.

  தொடக்க நிகழ்வுகளை எதிர்காலத்தில் எவராவது தெரிந்து கொள்ள நினைத்தால் உண்மைத்தமிழன் பதிவு உதவும்.

  அதன் தொடர்ச்சியை படிக்க வேண்டுமென்றால் உங்கள் பதிவுகள் அவர்களுக்கு பல விசயங்களை புரியவைக்கும்.

  அவசியம் தேவை உங்கள் முயற்சி.

  ReplyDelete
 2. வாருங்கள் ஜோதிஜி!

  உண்மைத்தமிழன், பிற தளங்களில் இருந்து பெறப்பட்ட செய்திகளை மட்டுமே பிரதானமாகப் பதிவிட்டிருக்கிறார்.குறிப்பாக நிரா ராடியா டேப் விவகாரம் வெளியே வந்தபோது மிகவும் சிரமப்பட்டு தமிழில் தந்திருக்கிறார்.அவருடைய உழைப்புக்கு முன்னால் என்னுடைய முயற்சி ஒன்றும் பெரிதே இல்லை அதே நேரம் உண்மைத்தமிழன் தன்னுடைய சொந்தக்கருத்தை முன்வைத்து அதிகம் பேசியதே இல்லை என்று கூட சொல்லலாம்.

  என்னுடைய பாணியே வேறு!செய்திகளைப் படிக்கும்போதே கொஞ்சம் அனலைஸ் செய்து தேவையான அளவுக்கு மட்டுமே பிற தளங்களில் இருந்து தரவுகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!