Sandeep Adhwaryu is a political cartoonist.
He considers himself an
‘extremist’ who is out to destroy the extremities of Indian democracy
இப்படி
ஒரு வித்தியாசமான அறிமுகத்துடன் சந்தீப் அத்வர்யு என்பவருடைய
கருத்துப்படங்களை சண்டே கார்டியன் இதழில் பார்த்தபோது, மிகவும்
ஆச்சரியப்பட்டேன். வித்தியாசமான கண்ணோட்டத்தோடு ஒவ்வொரு படமும்...! சண்டே
கார்டியன் இதழுக்கும் ஓவியருக்கும் மனமார்ந்த நன்றியுடன், சண்டேன்னா
கொஞ்சம் (கருத்து) சண்டை போடுகிற படங்களாக...! ஒவ்வொரு படத்துக்கும்
என்னுடைய விமரிசனக் குத்துகளுடன்!
இதற்குத்
தனிவிளக்கம் அவசியமில்லைதான்! ஆனாலும்,இது தமிழில் எழுதப்படுகிற
வலைப்பதிவு என்பதால்,தமிழினத்தலீவராகத் தன்னை சொல்லிக் கொள்பவரிடத்தில்
இருந்து ஆரம்பிப்பதில் தவறேதும் இல்லையல்லவா?
காங்கிரஸ்காரர்கள் தங்களை மாதிரியே ஆம் ஆத்மிக்கும் முதுகெலும்பு
இருக்காது என்று தான் நினைக்கிறார்கள்! பரிணாம வளர்ச்சியில்
சாமானியனுக்கும் முதுகெலும்பு மிக வலுவாக வளர்வது தவிர்க்க முடியாததுதான்
இல்லையா!
நேரு
பரம்பரை வாரிசை, அடுத்த ஆண்டு மத்திக்குள் எப்படியாவது பிரதமர்
நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிடவேண்டும் என்று இத்தாலிய மம்மிக்கு
ரொம்பவே ஆசை! டம்மிப் பீசை விட்டே அறிவிப்பு வெளியிடவும் நாள்
குறித்தாயிற்றாம்! ஆசை,தோசை, அப்பளம் வடை என்று, புத்து (budhdhu) இன்னும்
வளராமல், கொள்ளுத் தாத்தாவின் செருப்பு சைசுக்குக் கூட உயராமல் இருக்கிறேனே
மம்மி என்று ராவுல் விஞ்சி தவழ்ந்து கொண்டிருக்கிறாரே! பாவம், மம்மியின்
ஆசை அம்பேல்தானா?
கைவிடப்பட்டதாக உணர்கிறீர்களா?
ஆமாம்!
ஆமாம்!
விரக்தியின் உச்சகட்டத்திற்கே போய் விட்டீர்களா?
ஆமப்பா, ஆமாம்!
என்ன செய்வது என்றறியாமல் திகைக்கிறீர்களா?
அட ஆமாம்பா ஆமாம்!
அப்படியானால், என்ன செய்வது என்று எனக்கு வழிகாட்டுங்கள்!
...................
(....மன்மோஹனுக்குச் சொன்ன பதில் சென்சார் செய்யப்பட்டது!
அதற்காக யாரும் நாண்டுக்கிடவோ, நாக்குத் தள்ளவோ வேண்டாம்!)
(....மன்மோஹனுக்குச் சொன்ன பதில் சென்சார் செய்யப்பட்டது!
அதற்காக யாரும் நாண்டுக்கிடவோ, நாக்குத் தள்ளவோ வேண்டாம்!)
சீசராக
இருப்பதற்கும் சீசரின் முகமூடியாக இருப்பதற்கும் பெரிய வித்தியாசம்
ஒன்றுமில்லை!சீசருக்கு, ஒரே ப்ரூடஸ், ஒரே கத்தி! முகமூடிக்கு,சந்து கிடைத்த
இடத்தில் எல்லாம்கத்தி!
டம்மிப் பீஸ்களுக்கு அனுதாபப் பட இங்கே எவருமில்லை!இது தான் முக்கியமான வித்தியாசம்!
டம்மிப் பீஸ்களுக்கு அனுதாபப் பட இங்கே எவருமில்லை!இது தான் முக்கியமான வித்தியாசம்!
பூனை இளைச்சுதுன்னா, எலியே,ஓடைப்பக்கம் ஒதுங்கிக்கலாம் வாரியா என்று கூப்பிடுமாம்!பவார், கருணா பெருச்சாளிகள் என்ன என்ன செய்திருக்கும்?
பானாசீனா தானா சால்வை அழகர்தானா தாளம் வரும் தானா எகத்தாளம்வரும் தானா ......
தந்தனாப் பாட்டு பாடோணும்! துந்தனாத் தாளமும் போடோணும்! தந்தனா அடத் தந்தனா....
உன்னைக் கண்டு நான் பாட.......வாத்து மடையா வாத்து மடையா
என்னைக் கண்டு நீ ஆட .............வாத்து மடையா வாத்து மடையா
காங்கிரஸ்காரர்களின் கோஷ்டி கானம்!!
என்னைக் கண்டு நீ ஆட .............வாத்து மடையா வாத்து மடையா
காங்கிரஸ்காரர்களின் கோஷ்டி கானம்!!
காங்கிரசே!கலைஞரின் இளைஞனை சிறைக்குள் அடைத்து விட்டு சீனாவுடன் போட்டியா? ஆ.ராசாவை
வெளியே விட்டுப் பார்!
இல்லையென்றால் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை கொடுத்துப் பார்!!
தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteதமிழ்மணத்தில் சேர்ப்பதில்லையா?
ReplyDelete