சண்டேன்னா மூணு! ரஜனி அரசியல்! கனிமொழி நாடார்i #டிசம்பர்13 பார்லிமென்ட் மீது தாக்குதல்!

என் கேள்விக்கென்ன பதில்? யாரை வேண்டுமானாலும் இப்படிக் கேட்பதென்னவோ மிக எளிதுதான்! ஆனால் கிடைக்கும் பதில் எல்லா நேரங்களிலும் சரியானதாகவோ, திருப்தி அளிப்பதாகவோ இருப்பதில்லை! தந்திடிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி கூட  பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான்! ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நடத்தியவிதம், இதை தந்திடிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக ஆக்கியது உண்மை. அவரால் தயார் செய்யப்பட்ட ஹரிஹரன் கூட இந்த நிகழ்ச்சியை அவரால் முடிந்தவரை நன்றாகத்தான் நடத்துகிறார் ஆனாலும்,, ,,,,,,? 

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி உடன் நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி எப்படியென்பதைப் பார்த்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்! 


ஆடிட்டர் குருமூர்த்தி  நீண்டநாட்களாகவே ரஜனிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக அவர் ஒருவர்தான் இருக்கமுடியும் என்று சொல்வதெல்லாம், அவருடைய ஆசை என்பது தாண்டி நடப்பு நிலவரங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா?சாதாரணமாக ஒரு தடுப்பூசி வெளிவருவதற்கே பலகட்ட பரிசோதனைகளில் ஜெயித்து, நிரூபித்தாக வேண்டும் என்கிற போது, அரசியலில் ஒரு மாற்று சக்தியாக ரஜனிகாந்த் வரமுடியுமென்பதே கோமாளித்தனமான கற்பனை என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. நடிகர் சாருஹாசன் சிலகாலத்துக்கு முன்பு ரஜனி--கமல் இருவர் சேர்ந்தாலுமே 10% வாக்குகளை மட்டுமே பெற முடியும் என்று சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? கமல்காசர் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து, ஒரு பொதுத்தேர்தலையும் சந்தித்து விட்டார். சுமார் 4.5% வாக்குகளை வாங்கியது நினைவிருக்கிறதா? ஆனால் இன்னமம் கட்சியே ஆரம்பிக்காத ரஜனிகாந்த், 2021 மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபைத்தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகளை வாங்கிவிடமுடியும்? எந்த அடிப்படையில் ரஜனியை நம்புகிறார்களோ, அதுவே இன்று வரை தெளிவுபடுத்தப்படவில்லையே! 

அதைவிடுங்கள்! ஹரிஹரன் குருமூர்த்தியிடம் என்ன கேட்க விரும்பினார்? எதைத் தெரிந்து கொண்டார் என்ற கேள்விக்காவது விடை கிடைத்ததா? நிகழ்ச்சியில் எந்த ஒரு கேள்வியும், விஷயமும் தெளிவாக இல்லாமல் மிக மேம்போக்காகவே இருந்ததைக் கவனித்தீர்களா?

 ================================================      குருமூர்த்தி பேட்டி ஒருவிதமான நையாண்டி என்றால். முகநூலில்  ஸ்டேன்லி ராஜனுடைய இந்தப் பகிர்வு சூப்பர் நையாண்டி! 


நாடார் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கனிமொழி எப்போது ஆனார் என்ற சந்தேகம் இந்தப் போஸ்டரைப் பார்த்ததும் எழுந்தால், அது நியாயமே!  

தொடக்கத்தில் பரிசுத்த நாடார் எனும் ஒரு நாடாரை எதிர்த்து வென்றவர் கருணாநிதி, அவரின் அரசியல் நாடார்களை எதிர்த்துத்தான் தொடங்கிற்று.
அரசியலில் பரிசுத்த நாடார், காமராஜ் நாடார், ம.பொ.சி (அப்பக்கம் நாடார்) போன்றோரை எதிர்த்து முழு நாடார் எதிர்ப்பதைத்தான் காட்டினார்
காமராஜருக்கும் கருணாநிதிக்குமான‌ பெரும் போர் உலகறிந்தது
விருதுநகரில் காமராஜரை கருணாநிதி இல்லா பொய் சொல்லி தோற்கடித்தபொழுதுதான் கனிமொழி பிறந்தார்
நாகர்கோவில் வரை அவரை விரட்டியடித்தார் கலைஞர்
நாகர்கோவிலில் "இது நாடாளுமன்ற தேர்தலா? நாடார் மன்ற தேர்தலா?" என முழங்கியவர் கருணாநிதி
நாகர்கோவிலில் காமராஜர் வென்றபின் அந்த தோல்வியில் காமராஜருக்கு பக்கபலமாக இருந்த நாடார் தொழிலதிபர்களை எல்லாம் ஓட ஓட அடித்தவர் கருணாநிதி
அப்பொழுது கனிமொழிக்கு வயது 5
அந்த கனிமொழி இப்பொழுது நாடார்கள் பலமான தூத்துகுடியில் தானும் நாடார் வாரிசு என வந்து நிற்கின்றார்
காலம் எப்படி எல்லாம் விசித்திரமாக காட்சிகளை காட்டுகின்றது..
நாடார்கள் காங்கிரஸில் அதிகம் உண்டு இதனால் நாடார் இனமே திமுக விரோத இனம் என கங்கணம் கட்டி திரிந்த கருணாநிதியின் மகள் இன்று நாடார் இனத்துக்கு காவலாம்
பிணம் இருக்குமிடம் குவியும் கழுகுக்கும், வோட்டு இருக்குமிடம் ஓடிவரும் திமுகவுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை
திமுக சாதி ஒழிக்க வந்த புரட்சி கட்சி
ஆனால் கனிமொழி நாடார், கலப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என திமுக ஊளையிட்ட காலத்தில் பிறந்தவர் கனிமொழி
ஆனால் அவருக்கு அவரின் தாய் சாதி உண்டாம், தகப்பன் சாதி கிடையாதாம்
சாதி வேண்டாம் என்றால் பெற்றோரின் இரண்டு சாதியும் வேண்டாம்,
வேண்டும் என்றால் இரண்டு சாதியும் வேண்டும் அல்லவா?
திமுக பெண்கள் உரிமை காக்கும் அமைப்பு, பின் ஏன் தாயின் பெயர் சேர்க்க கூடாது?, தந்தைபெயர் மட்டும் ஏன்?
ஆக திமுகவின் பெண் உரிமைபடியும், தகப்பன் சாதியினை சேர்த்தும் இப்படித்தான் சொல்ல வேண்டும்

"கனிமொழி கருணாநிதி ராசாத்தி இசை வேளாள நாடார்.." வாழ்க..                                        

 ================================================

டிசம்பர் 13, 2001. பாகிஸ்தானின் ISI யால் பயிற்சி அளிக்கப் பட்ட ஐந்து தீவீரவாதிகள்  AK 47 போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஐந்து காவலர்கள் உட்நடைபெறவிருக்கும் பட 7 பேர் பலியானார்கள் 30 நிமிடங்கள் நீடித்த தாக்குதலில் ஐந்து தீவீரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆனாலும் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இன்று வரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.LeT, JeM  போன்ற சிலபல பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சம்பவமாக 2001 டிசம்பர் 13  தாக்குதல் இருந்தது. அதன் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று. On this day in 2001, a five-member suicide squad comprising Lashkar-e-Taiba and Jaish-e-Mohammad terrorists attacked Parliament house, while the Lok Sabha was in session: the Houses were adjourned at the time of the attack, but several parliamentarians and staff were present inside the building.The attackers came in an Ambassador car, and were able to gain entry because of a forged government sticker. But as the car moved inside the Parliament complex, one of the staff members became suspicious. The vehicle was thus forced to turn back and in the course, hit then vice president Krishan Kant’s vehicle.the course, hit then vice president Krishan Kant’s vehicle இது செய்தி. பின்னாட்களில் திரைப்படம், வெப் சீரீசுமாக வந்தன தேடுவோருக்கு இணையத்தில் கிடைக்கும்.நினைவுதினம், நினைத்துப்பார்ப்பது என்பதெல்லாம் நடந்த சம்பவங்களிலிருந்து சரியான பாடம் கற்றுக் கொண்டோமா மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நடக்காமல் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோமா என்பதில் தான் அர்த்தமுள்ளதாகிறது என்பதை இங்கே நண்பர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். பிக்பாசில் இன்றைக்கு வெளியேறப்போவது யார், டிவி நடிகை சித்ரா தற்கொலை, அவருக்குப்பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கப்போவது யார் என்பதை எல்லாம் குடைந்து பார்ப்பதை விட, இதுமாதிரி விஷயங்களைத் தேடுவது மிகவும் நல்லது என்பதை நான் வேறு தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?!    

      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!