கடந்த எழுபது ஆண்டுகளில் ஆளும் கட்சிகளாக இருந்த காங்கிரசோ, ஒமர் அப்துல்லா (NC) மெஹபூபா முப்தி (PDP) கட்சிகளோ நடத்தத் துணியாத உள்ளாட்சித் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்து, முடிவுகளும் வெளியாகி விட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை இப்படித் தானென்று இதுவரை சொல்லப்பட்டு வந்த பொய்களை இந்தத் தேர்தல் முடிவுகள் நொறுக்கித்தள்ளி விட்டன என்று சொன்னால் மிகையல்ல.
மெஹபூபா முக்தியுடன் பிஜேபி கூட்டணி வைத்திருந்த போது, ஹிந்துக்கள் அதிகமாக இ.ருந்த ஜம்மு பகுதியில் பிஜேபி மெஜாரிட்டியாகவும், இஸ்லாமியர்கள் அதிகம் இருந்த காஷ்மீர் பகுதியில் மெஹபூபாவின் PDP கட்சி அதிக இடங்களில் வென்ற மாதிரித்தான் இப்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் நடந்திருக்கிறது என்று மேலோட்டமாகச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை மேலே 14 நிமிட வீடியோவில் பார்க்கலாம். இது இன்று காலை 9.30 மணி நிலவரமாக ANI செய்தி நிறுவனம் ட்வீட்டரில் வெளியிட்ட செய்தி.
பிஜேபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. குப்கார் கூட்டணி என்றழைக்கப்படும் ஒமர் அப்துல்லா (NC) தலைமையிலான கூட்டணியில் தேசிய மாநாடும், மெஹபூபாவின் PDP கட்சியும் பிரதானமானவை. வேறு சில உள்ளூர் உதிரிகளும் அடக்கம். மேலே ANI செய்திப் படி ஒமர் அப்துல்லா கட்சி காஷ்மீரில் கொஞ்சம் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.மெஹபூபாவின் PDP அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வி! சுயேட்சைகளாகக் களமிறங்கியிருக்கும் தனிநபர்கள் வெற்றிபெற்ற இடங்களில் பாதிகூட ஜெயிக்க முடியாத மெஹபூபா முப்தி, இன்னமும் வாய்கிழியத் தம்பட்டம் அடித்துக் கொள்வதை நிறுத்திக்கொள்ளவில்லை என்பது காஷ்மீர் அரசியலின் வினோதம்! பெரும் சோகம்!
இது இன்று கடைசியாகக் கிடைத்த நிலவரம்
2:49 PM · Dec 23, 2020Twitter Web App
இதற்கும், மேலே மெஹபூபா பீற்றிக் கொண்டதற்கும் பொருத்தம் இருக்கிறதா? நீங்களே சொல்லுங்களேன்!
“Independent candidates have polled more votes than the Congress and the PDP. The same Mehbooba Mufti who’d refused to unfurl the Tricolour has got a befitting reply today,” இப்படி பிஜேபியின் அனுராக் தாக்குர் கேட்டிருப்பதில், ஜம்மு காஷ்மீரில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது மிகத்தெளிவாகவே புலப்படுகிறது
#மாற்றத்துக்கானதருணம்இது
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!