#சோனியாகாங்கிரஸ் பற்றி ராமசந்திர குஹா! #உண்மைகசக்கும்

இப்போதிருக்கிற காங்கிரஸ் சோனியா காங்கிரஸ் மட்டும்தான்! சோனியா, ராகுல், பிரியங்கா இந்த மூவருடைய குடும்பக் கட்சிதான் என்பதை நீண்ட நாட்களாகவே இந்தப்பக்கங்களில் சொல்லி வருகிறேன். வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிடிமானமுள்ள ஒரு பதிவர் (எழுத்தாளரும் கூட) என்னிடம் ஒழிந்து போ காங்கிரசே என்றெல்லாம் எழுதவேண்டாமே என்ற ரீதியில் முன்பு வலியுறுத்தியதுண்டு. அவருக்குத் தெரியாத, தெரிந்தாலும் புரியாத விஷயம் ஒன்றுண்டு. 1965          ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நாட்களிலிருந்தே காங்கிரசை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைபாட்டில் இன்று வரை மாறாமல் இருப்பவன் நான். வெறும் கண்மூடித்தனமான எதிர்ப்பு என்றில்லாமல் கொஞ்சம் விஷயஞானத்தோடு தொடர்கிற அரசியல் தெளிவு அது என்பதை அவருக்குப் புரிய வைக்க முடியாது என்ற நிலையில் அந்த CPI சார்புள்ள எழுத்தாளருடனான தொடர்பும் விடுபட்டுப் போனது வேறு விஷயம்! ஆனால் சோனியா காங்கிரசைப் பற்றிய என் அபிப்பிராயத்தில் கொஞ்சமும் பிசகில்லை என்பதை நிரூபிக்கிற விதமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் கிடைத்துக் கொண்டே வருவதைத் தடுத்துவிட முடியுமா? இந்த 34 நிமிட வீடியோவில் ராமசந்திர குஹா கரண் தாப்பரிடம் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


In a 34-minute interview to Karan Thapar for The Wire, Guha spelt out in detail why he believes the Gandhis are both weakening Congress whilst strengthening the Modi government. First, he says, the Gandhis don’t have a consistent ideology. “Sonia and Rahul claim to be principled secularists one day and promote soft Hindutva the next. They take credit for the free-market reforms promoted by past Congress governments one day but pour scorn on entrepreneurs the next.” “They only believe in family control of the party. Rahul and Priyanka have never known otherwise.”

Guha’s second criticism of the Gandhis is their lack of hard work. Citing Rahul Gandhi’s behaviour during the Bihar campaign, when he suddenly took a holiday in Himachal Pradesh, Ramachandra Guha says, “Rahul lacks dedication and commitment.” Referring to Rahul Gandhi’s behaviour during the lockdown, Ramachandra Guha says other than “one photo -op” Rahul effectively disappeared. Guha says he’s only “active on Twitter” and that “it’s his sole area of activity”.

இதெல்லாம் பேட்டியில் ராம் குஹா சொன்னதாக கரண் தாப்பருடைய வார்த்தைகள் அடுத்துச் சொல்வது இன்னும் டேமேஜிங்காக இருக்கிறது. 2019 டிசம்பரில் ஜமிலியா மிலியா   பல்கலைக்கழக போராட்டங்களில் காங்கிரஸ் எங்கேயென்று தேடவேண்டியிருந்தது. இப்போதோ விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசை வர வேண்டாம் என்றே போராட்டக்காரர்கள் சொல்லி விட்டதாக! Guha claims that even Jamia Millia Islamia students and farmers have either lost trust in the Gandhis or see them as a liability. During the Jamia protests of December 2019, “Congress was invisible”, he says. At the moment, when farmers are protesting outside Delhi, they have “told Congress not to come”. Guha added that the farmers are worried that associating with Congress will mean they will be seen as “stooges of a discredited party”.

பயனில்லாத சுமையாகிப்போன சோனியா & கோ வெளியேறினால் தான் நரேந்திரமோடியின் பிஜேபிக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவாக முடியும் என்கிறார் ராமசந்திர குஹா. வீடியோ பார்க்கப் பொறுமை இல்லை என்றால் பேட்டியின் சாராம்சத்தை கரண் தாப்பர் வார்த்தைகளில் இங்கே  உண்மை கசக்கத்தான் செய்யும்! நரேந்திர மோடி மீது கண்மூடித்தனமான வெறுப்பு இருந்தால் எட்டிக்காயாக இன்னும் கசக்கத் தான் செய்யும்! ராமச்சந்திர குஹா அவருடைய ஆசையை அழுத்தமாகச் சொல்லிவிட்டார்தான்! ஆனால் நடைமுறைக்கு எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்?   

பயன்படுத்த முடியாத பாழடைந்த கட்டடத்தை இடித்து விட்டுப் புதிதாகத்தான் கட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் கூட அதுபோலத்தான்! M Kகாந்திக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் வேறு, M K காந்தி விட்டுச் சென்ற காங்கிரஸ் வேறு. நேருவின் மகள் இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காக அஸ்திவாரத்தையே உடைத்தார், பலவீனமான ஒன்றாகவே வைத்துவிட்டுப் போனார். இன்றைக்கிருப்பது சோனியாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரு கும்பல்என்பதைத் தாண்டி, ஒரு கட்சியாக, ஸ்தாபனமாக இல்லை. ஸ்தாபனம் என்றால் என்ன என்கிற பதிவின் கீழே இருக்கிற குறியீட்டுச் சொல் மீது அழுத்திப்பாருங்கள்! இன்னும் அதிக விவரங்கள் கிடைக்கும்.  

அப்படியானால் காங்கிரசுக்கு விழும் வாக்குகள்?காலியாகிப்போன பெருங்காய டப்பாவில் கூட, கொஞ்சகாலத்துக்கு பெருங்காயவாசனை இருப்பது போல, அந்தக்காலத்துக் காங்கிரஸ் சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி, மகாத்மா காந்தி, நேரு , படேல் போன்ற தியாகிகள் கட்சி என்று நடப்பு              நிலவரம் புரியாதவர்களிடமிருந்து கிடைப்பது! அதுவும் தேர்தலுக்குத் தேர்தல் வேகவேகமாகக் குறைந்து வருகிறதே!

மீண்டும் சந்திப்போம்.       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!