#அரசியல்களம் நாளை #பாரத்பந்த் --தோற்றுப்போன அரசியல்வாதிகளின் ஆயுதம்!

நாளை டிசம்பர் 8 பாரத் பந்த் என்ற பெயரில் ஒரு கோமாளித்தனம்! நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயி சங்கங்கள் நாளை பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், வேலை வெட்டி எதுவுமில்லாமல் காய்ந்து கிடக்கும் பதினெட்டுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உடனே இந்த பாரத் பந்த்துக்கு ஆதரவாகக் களம் இறங்கப் போவதாகவும்  செய்திகள் சொல்கின்றன. இந்தக்கட்சிகளுக்கு தொழிற்சங்க ஒட்டுவால்கள் உண்டே! அவை இல்லாமலா? ஆட்டோ ஓடாது, பஸ் ஓடாது, வங்கிகள் இயங்காது, டீக்கடை, ஹோட்டல்கள் மூடல் என  நாடே ஸ்தம்பித்துப் போகிற அளவுக்கு சாலை மறியல், ரயில் மீது கல்வீச்சு, விமானங்களைப் பறக்கவிடாமல் தரை இறக்கம் இப்படி ஏகப்பட்ட பில்டப்புகளை இடதுசாரிகள் நீண்டகாலமாக அடுக்கிக்கொண்டே போனதில் ரீல் அறுந்து, நூலாம்படை நிரம்பத் தொங்கிக் கொண்டிருக்கிறது.           



Replying to
In 2010 , the great Kaka Sharad Pawar who returned Padma award demanding participation of Private players in agri marketing . Same kaka sings different tune now . Turncoats to the core .
Image

நம்மூரில்  வேலைநிறுத்தங்கள், பந்த் என்கிற முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள்  எல்லாமே பாதிக்கப்பட்ட  தரப்பினருடையதாக இல்லாமல், தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவரும் அரசியல் கட்சிகளுடைய கைகளில் சேரும்போது  எதற்கும் பயனற்ற வெற்றுக் கோமாளித் தனமாகவே ஆகிவருவதை இந்தப்பக்கங்களில் பலமுறை பேசி இருக்கிறோம். இப்படி அரசியல் கட்சிகளுடைய கோமாளித்தனம் ஜனங்களுக்கு மிகவும் தொல்லை தருவதாகவே இருப்பதை இன்னும் எத்தனை நாட்களுக்கு சகித்துக் கொண்டே இறுக்கப் போகிறோம்?

இங்கே மாற்றிப்பேசுவது பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் மட்டுமே அல்ல. வசதிக்கேற்ற மாதிரி நம்மூர் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை மாற்றி மாற்றிப் பேசுபவைதான்! நம்மூர் திமுகவைப் பற்றித் தனியாகச் சொல்லவே வேண்டாம்! #ஒருசாம்பிள் 


திமுகவின் 2016 சட்டசபைத் தேர்தல் அறிக்கை! இதையெல்லாம் யார் சார் படிச்சிருக்கப்  போறாங்க? இப்படி ஒரு அறிக்கை, அதில் சொன்னதை எல்லாம்  இசுடாலினிடம் கேட்டுத்தான் பாருங்களேன்!   

மம்தா பானெர்ஜி   இந்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக கம்பைன் கோமாளிகளிடமிருந்து ஒதுங்கியிருக்க கற்றுக்கொண்டவிட்டார். நரேந்திர மோடியை மேற்கு வங்கத்தில் தனியாக எதிர்த்தால் போதுமே! எதற்காக இந்தக்கோமாளிகளுடன் கூட்டுச் சேர வேண்டும்? தன் கட்சி சார்பாக டெரெக் ஓ பிரையனை டில்லிக்கு அனுப்பி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி சீன் போட்டாயிற்று! அதேவேளையில் மேற்கு வங்கத்தில் பாரத் பந்த்துக்கு ஆதரவு, அனுசரணை எதுவும் கிடையாது! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அது எதிரானதாம்!  நம்ப முடிந்தால் நம்புங்கள்!


மம்தா பானெர்ஜியிடமிருந்து கூடப் பாடம் எதையும் கற்றுக்கொள்ள வேண்டாம்! மிகச் சமீபத்தில் தெலுகு தேசம் கட்சியின் சந்திர பாபு நாயுடு செய்த அதே தவறைச் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா? நரேந்திர மோடியுடன் முறுக்கிக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து  மேடைகளில் போட்டோவுக்குப் போஸ் கொடுத்த நாயுடுவின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியாதா என்ன? 


இது 2019 மே மாத நடப்பு 
 
ஹைதராபாத் முனிசிபல் கார்பொரேஷன் தேர்தல் முடிவுகளில்  தெலங்கானா முதல்வர் K சந்திரசேகர ராவ் கசப்புதான், ஆனாலும் பாடம் கற்றுக் கொண்டாரா? இல்லையே என்கிறது நடப்பு நிலவரம்.  
  
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பிஜேபியிடம் சரிபாதி இடங்களைப் பறிகொடுத்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர், தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பாரத் பந்த்தில் இணைகிறாராம்!   Several political parties, including the Congress, AAP, DMK, Shiv SenaKamal Haasan’s MNM, Left parties and the TRS, have joined ranks with the protesting farmers. NDA constituent Rashtriya Loktantrik Party has also supported the bandh call என்கிறது செய்தி. 

150 இடங்களிலும் போட்டியிட்ட TRS கட்சி 55 இடங்களில் மட்டும் வெற்றி, வாங்கிய மொத்த வாக்குகள் 12,04,167 (35.81%), 149 இடங்களில் போட்டியிட்டு 48 இல் ஜெயித்த பிஜேபி வாங்கிய வாக்குகள் 11,95,711 (35.56%), 51 இடங்களில் போட்டியிட்டு  44 இல் ஜெயித்த  AIMIM வாங்கிய வாக்குகள் 6,30,866 (18.76%) முதலிரண்டு இடங்களைப் பிடித்த கட்சிகளுக்கிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 8456 (0.25%) தான்! இது புள்ளிவிவரப் பிரியர்கள் வேண்டிக் கேட்கவிரும்பும் தகவல், அவ்வளவே!💪😄😄 

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. சம்பந்தமே இல்லாமல் எங்கோ இருக்கும் என்னை விடுப்பு எடுக்க விடாமல் செய்தது இந்த பா ப.  நான் பந்தில் ஈடுபடமாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு விடுப்பு கொடுக்கிறேன் என்றார்கள்.  என்னடா விடுப்புக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருந்தபோது செய்திகளில் ஆட்டோ ஓடும், பஸ் ஓடும் என்றெல்லாம் வந்ததும் எனக்கும் விடுப்பு கொடுத்து விட்டார்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீராம்!

      இந்தப்பொது வேலைநிறுத்தம், பந்த் எல்லாம் அரசியல் கலப்பினால் பயனற்றதாகிப் போனது தெரிந்தும் கூட இடதுசாரிகள் சகவாசத்தினால் அத்தனை அரசியல்கட்சிகளுமே இந்த வெட்டிவேலையைச் செய்து பார்க்கத் தொடங்கியது, இந்திய அரசியலின் மிகப்பெரிய வியாதி.

      லீவுப் பிரச்சினை மிகப்பெரிய காமெடி! தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் கூட்டுச் சேர்வது வெறும் சம்பளமில்லாத விடுப்பு என்பதையும் தாண்டி break in service and other consequences என்று சட்டங்கள் கடுமையாக ஆனால் அப்போது தெரியும் லட்சணம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!