2020ஆம் ஆண்டு ஒருவழியாக விடைபெறத்தயாராகிக் கொண்டிருக்கிற தருணம் இது! அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் சட்டசபைத் தேர்தல்களை சந்திக்கப்போகிற மாநிலங்களின் அரசியல் களநிலவரம் இப்படித் தான் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாதபடி, ஒவ்வொன்றிலும் பிரத்தியேகமான குழப்பங்கள்! நேற்றும் இன்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாமேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திரிணாமுல் கட்சியின் தூணாக இருந்த, சுமார் 110 சட்ட சாபைத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்த சுவேந்து அதிகாரி ஒரு MP, 8 TMC + 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 60ற்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், ஜில்லா பரிஷத், பஞ்சாயத் சமிதி உறுப்பினர்களோடு, அமித் ஷா முன்பாக நேற்றைக்கு பிஜேபியில் சேர்ந்திருப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போய்த் தொலையட்டும் நல்லதுதான் என்று பொருமித் தீர்த்திருக்கிறது.
சேகர் குப்தா, நிறைய அனுபவம் வாய்ந்த ஊடகக் காரர்தான்! நடுநிலையானவர் அல்லவென்பதை இங்கே பலமுறை அழுத்தமாகச் சொல்லி வந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த 29 நிமிட வீடியோவில் மேற்குவங்க அரசியலின் நேற்று இன்று நாளையாக என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!
பிரசாந்த் கீழோர் வந்து தூக்கி நிறுத்த முடியாத அளவுக்கு மம்தா பானர்ஜியின் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்த்ருக்கிறதே! இந்த களயதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சொல்லப்படும் ஆரூடங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அசாமில் கூட அதே நிலைமைதான் போல! டிசம்பர் 26 அன்று அமித் ஷா அங்கே வரும்போது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் முண்டியடித்துக் .கொண்டு பிஜேபியில் சேரக்காத்திருப்பதாகச் செய்திகள்! Election looming, Congress leaders look to join BJP in Assam என்கிறது நேற்றைய எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்
தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் எப்படிப் போகிறது?
ஏகப்பட்ட பில்டப்புடன், ஒரு போர்க்குரலை எழுப்பப் போகிறார் இசுடாலின் என்று துரைமுருகனுடைய முன்னோட்டத்துடன் நடந்து முடிந்த திமுகவின் கலந்துரையாடல் கூட்டம் ( மேடையிலிருந்தவர்கள் தவிர அப்படி யார் யாருடன் கலந்து என்னென்ன உரையாடினார்களாம்? கேட்கக் கூடாத கேள்வி இது! பதில்தான் எல்லோருக்கும் தெரியுமே!) நடந்தது முடிந்தது!
அதிமுகவை நிராகரிப்போம்! இதுதான் திமுகவின் போர் முழக்கமா? 1600 பிரசார பேச்சாளர்கள் 14000 இடங்கள்! ஜெயலலிதா பாணியில் யாருடன் கூட்டணி எத்தனை சீட் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! 200 சீட் இலக்கு! இதெல்லாம் வழக்கமான பல்லவிதானே!
நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர் என்று பேசியிருப்பதன் பொருள் என்ன?
பேசிப்பேசியே தமிழகத்தைக் கெடுத்த இரண்டு கழகங்களுமே குழப்பத்தில் இருப்பதையே காட்டுவதாகத் தான் எடுத்துக் கொள்ளண்டியிருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!