மண்டேன்னா ஒண்ணு! #வங்கித்துறை அரசியல்!

கரூர் லட்சுமி விலாஸ் வங்கி மிகமோசமான செயல் பாட்டால் திவாலாகும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட போது ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது தொழிற்சங்கங்கள் அதை ஏதாவது பொதுத்துறை வங்கி தலையில் கட்டவேண்டுமென்ற ரீதியில் கூக்குரல் எழுப்பின. கடந்த மூன்றாண்டுகளில் வங்கியை takeover செய்து நடத்தத் தகுதியான எதுவும் முன்வராத நிலையில் DBS Bank Indiaவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்து மத்திய அமைச்சரவையும் ஒப்புதலளித்து விட்டது இங்கே நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.


ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வங்கியில் பணம் போட்டிருந்தவர்களுடைய நலன் (ரூ.20300 கோடி) மற்றும் 4000 ஊழியர்களுடைய வேலை, ஆக இரண்டு முக்கியமான விஷயங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளாமலேயே விமரிசனங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன   

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் கூட இந்த இணைப்பை எதிர்த்திருக்கிறார். சிங்கப்பூர் வங்கியான DBS Bank உடனான இணைப்பு 2G spectrum ஊழலைப் போன்றது என்பது அவரது வாதம்!  வழக்கம் போல மத்திய அரசு டாக்டர் சுவாமியைத் தனியாகப் புலம்பவிட்டுவிட்டது என்பதைத் தாண்டி வேறொன்றும் நடக்கவில்லை.

இன்றைய இந்து தமிழ் திசையில் வணிகவீதி பகுதியில் எம் ரமேஷ் என்பவர் வங்கிகளின் வீழ்ச்சியை ஏன் தடுக்க முடியயின் வில்லை   என்ற தலைப்பில் அபத்தமானதொரு செய்திக்கட்டுரையை எழுதி இருக்கிறார். LVBயின் பிரச்சினைகள் என்ன, கடந்த மூன்றாண்டுகளில் நிலைமையைச் சரிசெய்யவோ, கூடுதல் மூலதனத்தைத் திரட்டவோ, தகுதியான உள்ளூர் நிறுவனத்துடன் இணைக்கவோ இப்படி எதுவும் ஏன் நடக்கவில்லை என்பதைப்பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எனக்கு கேட்கத்தான் தெரியும் என்கிற திருவிளையாடல் நாகேஷ் காமெடி மாதிரி கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.

வங்கித்துறை எப்படி இயங்குகிறது? ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு கொஞ்சம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதற்காக.  

பேராசையின் எல்லை எது ? The Moneychangers!


ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!
 
அவசியம் படிக்கவேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் புதினம் இது. வெறும் கதை என்ற அளவோடு நின்று விடாமல், நிறைய வங்கித் துறை சார்ந்த தகவல்களை, கிரெடிட் கார்ட் உள்ளிட்டு, மேற்கத்திய வங்கிகள் இயங்கும் விதத்தை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர். டாலர் முதலீட்டை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகப் பாதுகாப்பானது என்பதை, கதையினூடே, மிகுந்த கவனத்துடன், ஆதாரங்களை வைத்துச் சொல்கிறார்.

45 வருடங்களுக்கு முன் வெளிவந்த புத்தகம், என்றாலும், இன்றைக்கும் வங்கித் துறையைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் புதினம். இங்கே புத்தகக் கடைகளில் 130 ரூபாய்க்குக்கிடைக்கிறது.         

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!