ஏன் தான் தேர்தல்கள் அடுத்தடுத்து வருகின்றனவோ? தேர்தல், ரிசல்ட் என்ற வார்த்தைகளே சோனியா காங்கிரசைக் குலைநடுங்க வைக்கிற மாதிரி ஆயினவோ? ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெறும் 2 கவுன்சிலர்களை மட்டுமே பெற முடிந்த காங்கிரஸ், தான் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபியிடம் தோல்வியை சோனியாவின் பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறது.
Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers’ protests, Covid-19. The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection.The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ். அம்மணி பிறந்தநாளைக் கொண்டாடாமல் போனதற்கு அவருடைய உடல்நலக்குறைவு மட்டுமே காரணம்! போன வருடம் கூடத்தான் கொண்டாடவில்லை! அதற்கு என்ன காரணம் சொன்னார்களாம்?
சரித்திரத்தின் சாட்சி என அழைக்கப்படும் ராமச்சந்திர குஹா, தன்னுடைய ஒருகண் பார்வையிலிருந்து மட்டுமே சரித்திரம் பேசுகிறவர் என்பது நண்பர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். ராம் குஹா நேருவின் அதிதீவிர அபிமானி, இந்தியா ஒரு நாடானதே நேருவினால்தான் என்று வாசகர்களை நம்பவைக்க அரும்பாடுபடுகிறவர். நேருவுக்கு பாரம்பரியம் என்று ஒன்று இருந்ததாகவும் அதை இப்படித் தொடர் தோல்விகளால் கெடுக்கிறார்களே என்கிற கோபத்தால் மட்டுமே சோனியா & கோவைப் போய்த் தொலையுங்கள் என்று 2014க்குப் பிறகு தொடர்ந்து எழுதி வருபவர்.
A recent headline in the Hindustan Times summed up all that is wrong with the Congress Party today, and why under its present leadership, the party cannot present an effective or credible alternative to the Bharatiya Janata Party. The headline read: "Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers's protests, Covid-19". The vanity and self-regard in this public pronouncement was staggering, if entirely characteristic. Do the Gandhis think they are akin to royalty, so that the cancellation of one of their birthday parties becomes a mark of identification with their suffering subjects?
Why The Gandhis Must Go Now - by Rama chandra Guha Updated December 09, 2020 12:02 pm IST மேலே இன்றைக்கு NDTV :தளத்தில் ராமச்சந்திர குஹா அழாத குறையாகக் குமுறி எழுதியிருக்கும் Opinion கட்டுரையின் துவக்க வரிகள். Whether or not Sonia Gandhi celebrates her birthday this year (or any other) will not affect the nation's future. The sacrifice she should make is to retreat from politics, and take her children with her. Their departure will increase our chances of rescuing what. remains of the Republic from the ravages of Hindutva authoritarianism.என்று முடித்திருப்பதில் நேரு பாரம்பரியம், பரம்பரை மீதான அபிமானம் அக்கறை வெளிப்படுவதை விட நரேந்திர மோடியைத் தேர்தல்களில் தோற்கடிக்க முடியவில்லையே என்கிற இயலாமையே அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. லிங்கில் முழுப்புலம்பலையும் படித்துப்பாருங்கள்
Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா, ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்!
காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக் குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!
காங்கிரசின் கதையைச் சொல்லி எழுதியவை இங்கே பலமுறை பலவிதமாகச் சொல்லப்பட்டதுதான்! எதுவும் புதிதல்ல
மீ.ண்டும் சந்திப்போம்.
சோனியாவிற்கு எங்கே இந்திய பாரம்பர்யம் தெரியும்?, அவங்க பசங்களையும் சேர்த்துத்தான். அதனால்தான் பணம் சேர்ப்பதிலும் ஆட்சியை உபயோகப்படுத்துவதிலும் குறியாக இருந்தார்கள். இனி எங்க எழுந்துவந்து....
ReplyDeleteவாருங்கள் நெ.த சார்!
Deleteசோனியா இனிமேல் எங்கே எழுந்துவந்து .. என்பது கேள்வியல்ல! நரேந்திர மோடியிடம் தோற்றுக் கொண்டே இருக்கிறார்களே! இந்த ஆத்தா, மகன், மகள் மூன்றுபேர் கும்பல் ஒழிந்து போனால்தான் அடுத்து என்ன செய்வது என்பதையே யோசிக்க முடியுமென்று ராமச்சந்திர குஹா ஒப்பாரி வைக்கிறாரே அதுதான் இந்தப்பதிவின் அடிநாதமே! லிங்கில் முழுக்கட்டுரையையும் வாசித்துவிட்டு ரசியுங்களே!ன்