#2021தேர்தல்களம் அரசியலில் காமெடி, சஸ்பென்ஸ், பன்ச் டயலாக், ஸ்டன்ட் காட்சிகள்!

கமல்காசர் கட்சிக்கு 2021 சட்டசபைத் தேர்தலில் டார்ச் லைட்  சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டதாம்! எம்ஜியார் மக்கள் கட்சி என்ற வெளியே எவருக்குமே தெரியாத கட்சிக்.. கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாம்! TOI  செய்தி இதைச் சொல்லிவிட்டு, "டார்ச்லைட் சின்னம் கிடைக்கா விட்டால் லைட்ஹவுஸ் சின்னம்! அவர்கள் நம்மை விஸ்வரூபம் எடுக்கத் தூண்டுகிறார்கள். விஸ்வரூபம் எப்போது எடுக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லுங்கள்! உடனே எடுத்து விடுவோம்"  என்று கமல்காசர் காமெடி செய்து இருப்பதாகவும் சொல்கிறது தமிழகத்தில் டார்ச்லைட் சின்னம் மறுக்கப்பட்டாலும் பாண்டிச்சேரியில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையம் செய்திருக்கிற காமெடி! அதேநேரம்  விஸ்வரூபம் 2 தியேட்டரில் ஊத்திக் கொண்டதை கமல்காசர் மறந்துவிட்டார் போல!   


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருப்பதன் 4வது பகுதி வருகிற ஜனவரியில் வெளிவருகிறது என்று பதிப்பாளர்கள் அறிவித்திருக்கிற நிலையில், அவரது மகனும் மகளும் புத்தகத்தை வெளியிட வேண்டாம் / வேண்டும் என்கிற இழுபறிப்போட்டியை இன்று ட்வீட்டரில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.


மேலே அபிஜித் முகர்ஜி! பிரணாபின் மகன், முன்னாள் எம்பியும் கூட! நிறுத்துங்கள், என்னைக் கேட்காமல் வெளியிடக் கூடாது என்கிறார். அவரது சகோதரியும் சோனியா காங்கிரசின் செய்தித் தொடர்பாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி என்ன சொல்கிறார் பாருங்கள்!
 

என்ன கண்ராவி இது? எப்படியிருந்தாலும் புத்தகத்தை நாங்கள் வாங்கவோ படிக்கவோ போவதில்லையே, அப்புறம் எதற்காக இது என்கிறீர்களா? புத்தகம் கூட வேண்டாம்! பொதுவாக முகர்ஜிகளைப் பற்றிய ஒரு நயம் நையாண்டிப் பகிர்வை முகநூலில் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதியிருக்கிறார்! அதையாவது படித்து விடுங்கள்!  இது கருநாடக  மேலவையில் காங்கிரஸ் சூரப்புளிகள்! துணைசபாநாயகரை இருக்கையிலிருந்து இழுத்துத் தள்ளுகிறார்கள்!  


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்த, 2021 தேர்தல்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மம்தா பானெர்ஜி பிரசாந்த் கிஷோருடைய பிரசார உத்திகளை நாடியது பலனளிக்கவில்லை போல! கட்சியின் முக்கிய தலைவர்களை வரிசையாக இழந்து வருவது தான் மிச்சம்! மார்க்சிஸ்டுகளைப் ஆட்சிக்கட்டிலில் இருந்து கீழிறக்கிய மம்தா பானெர்ஜி மார்க்சிஸ்ட் கட்சி செய்த அதே தவறுகளை,அதுவும் வன்முறை வெறியாட்டத்தை கையிலெடுத்திருப்பது, மார்க்சிஸ்டுகளின் இன்றைய பரிதாப நிலைக்கே கொண்டு போய்விட்டுவிடும் போல!

ஆனாலும் நீதி பன்ச் டயலாக் ஸ்டன்ட் காட்சிகளைத் தொடர்ந்து அரங்கேற்றுவது குறைந்தபாடில்லை!

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

 1. பிரணாப் மகன்-மகள் சண்டை சுவாரஸ்யம்.  ஆனால் ஏனோ எனக்கு பிரணாபை பிடித்திருந்தது.  காங்கிரஸ் ஆட்சியில் ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆற்றிய ஒரு நீண்ட உரையை அப்போது யதேச்சையாகக் கேட்டிருந்தேன்!

  ReplyDelete
  Replies
  1. பிரணாபைப் பிடித்திருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை ஸ்ரீராம்! அவரைச் சுற்றியிருந்தவர்க்காலோடு ஒப்பிடுகையில் மிகவும் நல்லவராகத் தெரிந்தது ஒரு காரணம். மனிதர் எல்லோருடனும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் சுமுகமான உறவு வைத்திருந்ததும் இன்னொரு காரணம். இந்திராவுக்கு அடுத்து தானே பிரதமராகத் தகுந்தவர் என்பதை வெளிப்படுத்திய ஒரே காரணத்தால் சோனியா கும்பல் அவரை கடைசி வரை நம்பவே இல்லை 2012 பதிவுகளில் இந்த சமாசாரம் நிறையவே பேசப்பட்டிருக்கிறது .

   Delete
 2. சுதாகர் கஸ்தூரியின் முகர்ஜி காமெடியை ரசித்தேன்.  

  ReplyDelete
  Replies
  1. பிடித்திருந்தது குறித்து மிகவும் சந்தோஷம் ஸ்ரீராம்! பிரணாப் முகர்ஜியின் மகன் மகள் இருவரும் எதிரெதிர் நிலை எடுத்திருப்பது யாரைக் குளிர்விக்க?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!