யாராவது #மண்குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்குவார்களா? #ரஜனிஅரசியல்

ஒரு இரசிகனாக உங்கள் முடிவை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பால் உங்களுடைய 40 ஆண்டுகால குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி! என்று ரஜனிகாந்த் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற மூன்றுபக்க அறிக்கை ட்வீட்டுக்கு முதல் கமென்ட்டாக போட்டிருப்பவர் ISR செல்வகுமார்.



அந்த 40 ஆண்டுகள் என்பதில் தான் கொஞ்சம் கணக்கு இடிக்கிறது பாட்ஷா படத்தின் 100வதுநாள் விழாவில் அவர் பேசியது ஜெயலலிதாவை உரசுகிற மாதிரி இருந்தது கொஞ்சம் பழைய கதையைச் சுருக்கமாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.


1996 இல் நேரடியாகவே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசினார் ரஜனி அதன் பலனை மாநிலத்தில் திமுகவும், GK மூப்பனாரும் அடுத்து பானாசீனாவும் அறுவடை செய்து கொண்டார்கள். ஆக ரஜனிகாந்த் அரசியல் வாய்ஸ் கொடுத்தது அவருக்குப் பயன்படவே இல்லை . அதனால் தானோ என்னவோ அவர் அப்புறம் வாய்ஸ் கொடுக்கவே இல்லை. ஆனாலும் அரசியலுக்கு வரப்போவதாக, ஓவ்வொரு படரிலீஸுக்கு முன்னால் ஒரு பரபரப்பு கிளம்பும்! அப்புறம் அடங்கிவிடும். இப்போதும் கூட பெரிய வித்தியாசமில்லை.





ரஜனிகாந்த் அரசியல் ப்ரவேசத்தைப் பற்றி எனக்குப் பெரிதான அபிப்பிராயம் எப்போதுமே இருந்ததில்லை. 



சிவகங்கை சின்னத்துரும்புகள் கூட இளப்பம் செய்கிற மாதிரியாகி விட்டதே!

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. இதோ சாப்பாடு ரெடியாகிறது, இதோ வந்துவிடும் எனச் சொல்லிச் சொல்லி திடுமென ஹோட்டல் கதவை மூடுவது போன்றது இது.

    96ல் முதல்வராகியிருக்கலாம்.

    பிறகு பாமகவை எதிர்த்து அறிக்கை கொடுத்ததில் பாமகவுக்கு சிறிய சேதாரம்தான் ஏற்படுத்த முடிந்தது. அதை மறந்துவிட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. பாட்ஷா படத்தயாரிப்பாளர் RM வீரப்பனை ஜெயலலிதா மட்டம் தட்டியதில் ரஜனிகாந்த் முதன்முதலாக வாயைத்திறந்தார். அந்தவாய்சை முழுக்கப்பயன்படுத்திக் கொண்டது திமுகவும் மூப்பனார் வகையறாவும் (பானாசீனாவும் அன்று அதில் உள்ளடக்கம்) தான்! 1996 இல் ரஜனி முதல்வராகியிருக்கலாம் என்பதெல்லாம் அதீதக் கற்பனைதான் நெ..த. சார்!

      பாமக விசிக ஒரே அணியில் இருந்த நாட்களில் சினிமாக்காரர்களை எதிர்த்து (நடந்தது பிளாக்மெயில்) கலவரம் கலாட்டாக்களில் ஈடுபட்டதில், அவர்களுடைய சாயம் வெளுத்ததென்பது வரை உண்மை. ரஜனிகாந்த் தான் அதை சாதித்தார் என்பதும் ஒரு நிரூபிக்கப்படாத மதிப்பீடு.

      வெவ்வேறு மாவட்டங்களில் குஷ்பு மீது பாமக விசிக ஆசாமிகள் கற்பு பற்றிக் குஷ்பு பேசியதன் மீது அவதூறு வழக்குகளைத் தொடுத்து (75 வழக்குகள் என்று நினைவு) அலைய விட்ட போது கருணாநிதி அபயக்கரம் நீட்டி உச்சநீதிமன்றத்தில் ஒரே வழக்காக எடுத்துக்கொள்ளச் செய்து, அப்படியே திமுகவுக்குள் இழுத்துக் கொண்டார். வெளியில் வைத்தே ரஜனியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தது கருணாநிதி -பானாசீனா சாமர்த்தியம்!

      ரஜனிகாந்த் அரசியல் பேசும்போதெல்லாம் சிரிக்கத்தான் தோன்றியதே தவிர வேறொன்றும் இருந்ததில்லை


      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!