இட்லி வடை பொங்கல்! #72 #சேகர்குப்தா #கம்யூனிஸ்ட்கட்சிகள் #ஜம்முகாஷ்மீர்

சேகர் குப்தா அனுபவமுள்ள பத்திரிகையாளர் என்பதில் எனக்கு சந்தேகமே இருந்ததில்லை. அவருடைய ஒருபக்க சார்பு கூடத் தெரிந்ததுதான் என்றாலும் 360 டிகிரியில் விஷயங்களைப் பார்ப்பதற்கு அவர் என்ன சொல்கிறார், என்ன எழுதுகிறார் என்பதைக் கவனிக்கத் தவறியதும் இல்லை பிரதமர் நரேந்திர மோடி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அமித் ஷா மேற்கு வங்கத்தில் CAA பற்றிக் கொஞ்சம் மென்மையாகப் பேசினார். அவை பற்றி சேகர் குப்தாவுக்கு எப்படித் தோன்றுகிறதாம்?


Tactics, Tactical Retreat  என்பதெல்லாம்  கொஞ்சம் ஆழமான பொருள் கொண்டவை. சேகர் குப்தா அத்தனை ஆழமாகவெல்லாம் யோசித்து இந்த 15 நிமிட வீடியோவில் பேசிய மாதிரி எனக்குத் தோன்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒருவாரத்தில் மட்டும்  கோபத்தில் இருக்கிற இஸ்லாமியர்கள்,  விவசாயிகள் என்று இரு முக்கியமான தரப்பினருடன் ஒரு சுமுகமான அணுகுமுறையைக் கையாளத் தொடங்கியிருக்கிறார் என்பது போல ஆரம்பிக்கிறார் எதற்கு? இதர கட்சிகள் போல வெறும் வாக்குகளுக்காகவா? பெரும்பாலான இஸ்லாமியர், பஞ்சாப் விவசாயிகள் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க விரும்புவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல பிஜேபி / நரேந்திர மோடி இவர்களது ஓட்டுக்காக ஏங்கித்தவிக்கவுமில்லை. சேகர் குப்தாவே இதையும் ஒப்புக்கொள்கிறார் ஆனாலும்  Tactical Retreat  என்று சொல்வானேன்? 

Everybody likes awards, honours and adulation. Yet, whatever these mean to Modi personally, more important is that this was part of his very significant reaching out to Muslim, especially Arab, countries. This was a deft outflanking of Pakistan to its West. What he tried to the East, with Xi Jinping, failed.  

Now, if the move with China failed — and at this point we have troops eyeball-to-eyeball and Pakistan has more or less ‘progressed’ to becoming a Chinese client state or protectorate — it is because Xi Jinping saw more value in that. The ploy with the Arab world, meanwhile, has worked so far. Saudi Arabia and the UAE, Pakistan’s closest friends, patrons and moneybags, have drifted far away. So far, that Saudis are demanding their loans back, China plays the white knight to rescue Pakistan, and the UAE has stopped issuing visas to Pakistani workers. சேகர் குப்தா எழுதியது முழுமையாக இங்கே.  

வெளியுறவுகளை மேம்படுத்திக் கொள்ள உள்நாட்டில் சமரசம் செய்து கொள்கிறார் அதற்காக தந்திரமாக ஜகா வாங்குகிறார் என்று சொல்வது சரிதானா?


The United Front … is an important magic weapon for strengthening the party’s ruling position … and an important magic weapon for realising the China Dream of the Great Rejuvenation of the Chinese Nation.

— Chinese President Xi Jinping, Central United Front Work Conference, 2015

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே உண்டான நடைமுறைத் தந்திரங்களில் முக்கியமானது ஐக்கிய முன்னணித் தந்திரம்  1935 ஏழாவது  கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜார்ஜ் டிமிட்ரோவ்  சமர்ப்பித்த கோட்பாடு இது கம்யூனிஸ்ட் கட்சியினர்  எப்படி பிரதானமான எதிரிக்கு எதிராக  இதர எதிரிகளுள் ஊடுருவி அல்லது கூட்டணி அமைத்துப் போராடவேண்டும் என்பதை விளக்குகிற 247 பக்கப் புத்தகமாகத் தமிழிலேயே மேலே நீல நிறத்தில் ஐக்கிய முன்னணித் தந்திரம் என்ற வார்த்தையைக் க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்யக் கிடைக்கும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஜார்ஜ் டிமிட்ரோவை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது என்பதை ப்ரம்ம செலானியின் இந்த ட்வீட்டர் செய்தி சொல்கிறது.

China possesses what no other country has — surveillance, censorship and propaganda systems to control or construct a narrative. China’s initial coronavirus coverup relied on these systems, resulting in a local outbreak in Wuhan turning into a still-raging global health calamity.

8:07 PM · Dec 24, 2020Twitter Web App

இதெல்லாம் ஜெயித்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே சாத்தியம்! இந்தியா, நேபாளம் மாதிரியான நாடுகளில் அரசுக்கு எதிராகக் கலகம் செய்துகொண்டே இருப்பார்கள்.தப்பித்தவறி ஏதோ ஒன்றிரண்டு மாநிலங்களில் அல்லது சிறிய பிரதேசத்தில் ஜெயித்து விட்டால், தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வதோடு கட்சியையும் உடைப்பார்கள், குறுங்குழுக்களாக சிதறுண்டு போவார்கள்! 

எதனால்? கடைசி வரை கலகம் .என்றே செயல்படுவதில் ஏற்படுகிற இறுதி முடிவு அது! போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம் என்று கோஷமிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கதி என்னவாயிற்றோ அதுவே  நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்போது  நடந்து கொண்டிருப்பதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை விட சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிகம் வலிக்கிறதாம்! நேபாளத்துக்கான சீனதூதர் முயற்சிகள் பலிக்காமல் மேலிடத்துக்கு SOS அனுப்பியதில் நாளை ஞாயிறு அன்று சீனா 4 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அனுப்புகிறது. It is, however, not clear yet if Prime Minister KP Sharma Oli, who had earlier turned down requests from Ambassador Hou to meet her, would meet the Chinese delegation. Chances of PM Oli, who has taken a staunch Nepali nationalist role, meeting the visiting delegation are slim. He has already conveyed to Ambassador Hou that China should not interfere in internal affairs of Nepal since the legal challenge to the decision to dissolve Parliament is already before the Supreme Court. என்று இங்கே சொல்கிறார்கள்.   

China is openly interfering in the internal affairs of Nepal, its new tool against India. Concerned by a vertical split in Nepal's ruling communist party, it is sending a vice minister-led delegation tomorrow. This comes after its defense minister's visit.
Leading a four-member delegation, Guo Yezhou, vice-minister of the International Department of the Communist Party of China, is arriving on Sunday.

சீனாவுக்கு நேபாளம், பூடான் போன்ற மிகச்சிறிய நாடுகள் மீது ஏன் இத்தனை கரிசனம்? இங்கே என்ன சொன்னார்கள் என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமே! 

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் PDP மெஹபூபாவின் கட்சி குப்கார் கூட்டணியில் இருந்தும் கூட மிகக் குறைவான வாக்குகள், குறைவான இடங்கள் மட்டுமே பெற்றிருப்பதில், அடுத்துவரும் தேர்தல், வரையாவது தாக்குப்பிடிக்க முடியாது என உறுதியாகிவிட்டதோ?  ஒமர் அப்துல்லாவின் NC கட்சி ஜம்மு பகுதியில் 26 இடங்களில் ஜெயித்திருப்பதைக் கழித்து விட்டுப் பார்த்தால் காஷ்மீர்  பகுதியில் 41 இடங்கள் மட்டுமே ஜெயித்திருக்கிறது. சுயேட்சைகள் அதைவிடக் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது ஜம்மு காஷ்மீர் மக்கள் மனதில் ஏற்பட்டு வரும் மாறுதலுக்கான அடையாளம் என்பதை ஏனோ நம்மூர் ஊடகங்களுக்கு  உறைக்கவே மாட்டேனென்கிறதே! செய்தி இங்கே     

இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என்று வெறுமனே கூவிக் கொண்டிருக்கிற ராகுல் காண்டிக்கு பதிலடியாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட  உள்ளாட்சித்தேர்தல் நடத்தாமலிருக்கிற பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் ஜனநாயகத்தை பிரதமர் நினைவுபடுத்தி இருப்பது சரிதானே!

மீண்டும் சந்திப்போம் 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!