Showing posts with label ராமச்சந்திர குகா. Show all posts
Showing posts with label ராமச்சந்திர குகா. Show all posts

#சோனியாகாங்கிரஸ் பற்றி ராமசந்திர குஹா! #உண்மைகசக்கும்

இப்போதிருக்கிற காங்கிரஸ் சோனியா காங்கிரஸ் மட்டும்தான்! சோனியா, ராகுல், பிரியங்கா இந்த மூவருடைய குடும்பக் கட்சிதான் என்பதை நீண்ட நாட்களாகவே இந்தப்பக்கங்களில் சொல்லி வருகிறேன். வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிடிமானமுள்ள ஒரு பதிவர் (எழுத்தாளரும் கூட) என்னிடம் ஒழிந்து போ காங்கிரசே என்றெல்லாம் எழுதவேண்டாமே என்ற ரீதியில் முன்பு வலியுறுத்தியதுண்டு. அவருக்குத் தெரியாத, தெரிந்தாலும் புரியாத விஷயம் ஒன்றுண்டு. 1965          ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட நாட்களிலிருந்தே காங்கிரசை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைபாட்டில் இன்று வரை மாறாமல் இருப்பவன் நான். வெறும் கண்மூடித்தனமான எதிர்ப்பு என்றில்லாமல் கொஞ்சம் விஷயஞானத்தோடு தொடர்கிற அரசியல் தெளிவு அது என்பதை அவருக்குப் புரிய வைக்க முடியாது என்ற நிலையில் அந்த CPI சார்புள்ள எழுத்தாளருடனான தொடர்பும் விடுபட்டுப் போனது வேறு விஷயம்! ஆனால் சோனியா காங்கிரசைப் பற்றிய என் அபிப்பிராயத்தில் கொஞ்சமும் பிசகில்லை என்பதை நிரூபிக்கிற விதமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுத் தகவல்கள் கிடைத்துக் கொண்டே வருவதைத் தடுத்துவிட முடியுமா? இந்த 34 நிமிட வீடியோவில் ராமசந்திர குஹா கரண் தாப்பரிடம் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


In a 34-minute interview to Karan Thapar for The Wire, Guha spelt out in detail why he believes the Gandhis are both weakening Congress whilst strengthening the Modi government. First, he says, the Gandhis don’t have a consistent ideology. “Sonia and Rahul claim to be principled secularists one day and promote soft Hindutva the next. They take credit for the free-market reforms promoted by past Congress governments one day but pour scorn on entrepreneurs the next.” “They only believe in family control of the party. Rahul and Priyanka have never known otherwise.”

Guha’s second criticism of the Gandhis is their lack of hard work. Citing Rahul Gandhi’s behaviour during the Bihar campaign, when he suddenly took a holiday in Himachal Pradesh, Ramachandra Guha says, “Rahul lacks dedication and commitment.” Referring to Rahul Gandhi’s behaviour during the lockdown, Ramachandra Guha says other than “one photo -op” Rahul effectively disappeared. Guha says he’s only “active on Twitter” and that “it’s his sole area of activity”.

இதெல்லாம் பேட்டியில் ராம் குஹா சொன்னதாக கரண் தாப்பருடைய வார்த்தைகள் அடுத்துச் சொல்வது இன்னும் டேமேஜிங்காக இருக்கிறது. 2019 டிசம்பரில் ஜமிலியா மிலியா   பல்கலைக்கழக போராட்டங்களில் காங்கிரஸ் எங்கேயென்று தேடவேண்டியிருந்தது. இப்போதோ விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரசை வர வேண்டாம் என்றே போராட்டக்காரர்கள் சொல்லி விட்டதாக! Guha claims that even Jamia Millia Islamia students and farmers have either lost trust in the Gandhis or see them as a liability. During the Jamia protests of December 2019, “Congress was invisible”, he says. At the moment, when farmers are protesting outside Delhi, they have “told Congress not to come”. Guha added that the farmers are worried that associating with Congress will mean they will be seen as “stooges of a discredited party”.

பயனில்லாத சுமையாகிப்போன சோனியா & கோ வெளியேறினால் தான் நரேந்திரமோடியின் பிஜேபிக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவாக முடியும் என்கிறார் ராமசந்திர குஹா. வீடியோ பார்க்கப் பொறுமை இல்லை என்றால் பேட்டியின் சாராம்சத்தை கரண் தாப்பர் வார்த்தைகளில் இங்கே  உண்மை கசக்கத்தான் செய்யும்! நரேந்திர மோடி மீது கண்மூடித்தனமான வெறுப்பு இருந்தால் எட்டிக்காயாக இன்னும் கசக்கத் தான் செய்யும்! ராமச்சந்திர குஹா அவருடைய ஆசையை அழுத்தமாகச் சொல்லிவிட்டார்தான்! ஆனால் நடைமுறைக்கு எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்?   

பயன்படுத்த முடியாத பாழடைந்த கட்டடத்தை இடித்து விட்டுப் புதிதாகத்தான் கட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சியும் கூட அதுபோலத்தான்! M Kகாந்திக்கு முன்னால் இருந்த காங்கிரஸ் வேறு, M K காந்தி விட்டுச் சென்ற காங்கிரஸ் வேறு. நேருவின் மகள் இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காக அஸ்திவாரத்தையே உடைத்தார், பலவீனமான ஒன்றாகவே வைத்துவிட்டுப் போனார். இன்றைக்கிருப்பது சோனியாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரு கும்பல்என்பதைத் தாண்டி, ஒரு கட்சியாக, ஸ்தாபனமாக இல்லை. ஸ்தாபனம் என்றால் என்ன என்கிற பதிவின் கீழே இருக்கிற குறியீட்டுச் சொல் மீது அழுத்திப்பாருங்கள்! இன்னும் அதிக விவரங்கள் கிடைக்கும்.  

அப்படியானால் காங்கிரசுக்கு விழும் வாக்குகள்?காலியாகிப்போன பெருங்காய டப்பாவில் கூட, கொஞ்சகாலத்துக்கு பெருங்காயவாசனை இருப்பது போல, அந்தக்காலத்துக் காங்கிரஸ் சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி, மகாத்மா காந்தி, நேரு , படேல் போன்ற தியாகிகள் கட்சி என்று நடப்பு              நிலவரம் புரியாதவர்களிடமிருந்து கிடைப்பது! அதுவும் தேர்தலுக்குத் தேர்தல் வேகவேகமாகக் குறைந்து வருகிறதே!

மீண்டும் சந்திப்போம்.       

#தேர்தல்களம் காங்கிரசைத் தொடரும் தோல்விகள்! ராமச்சந்திர குகா குமுறுகிறார்!

ஏன் தான் தேர்தல்கள் அடுத்தடுத்து வருகின்றனவோ? தேர்தல், ரிசல்ட் என்ற வார்த்தைகளே சோனியா காங்கிரசைக் குலைநடுங்க வைக்கிற மாதிரி ஆயினவோ? ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் வெறும் 2 கவுன்சிலர்களை மட்டுமே பெற முடிந்த காங்கிரஸ், தான் ஆளும் மாநிலமான ராஜஸ்தானிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபியிடம் தோல்வியை சோனியாவின் பிறந்தநாள் பரிசாக அளித்திருக்கிறது.

Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers’ protests, Covid-19. The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection.The Congress leader, who will turn 74 on December 9, is currently in Goa after doctors advised her to shift out of Delhi in view of heavy pollution and poor air quality that had aggravated her chest infection என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ். அம்மணி பிறந்தநாளைக் கொண்டாடாமல் போனதற்கு அவருடைய உடல்நலக்குறைவு மட்டுமே காரணம்! போன வருடம் கூடத்தான் கொண்டாடவில்லை! அதற்கு  என்ன காரணம் சொன்னார்களாம்?   


சரித்திரத்தின் சாட்சி என அழைக்கப்படும் ராமச்சந்திர குஹா, தன்னுடைய ஒருகண் பார்வையிலிருந்து மட்டுமே சரித்திரம் பேசுகிறவர் என்பது நண்பர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். ராம் குஹா நேருவின் அதிதீவிர அபிமானி, இந்தியா ஒரு நாடானதே நேருவினால்தான் என்று வாசகர்களை நம்பவைக்க அரும்பாடுபடுகிறவர். நேருவுக்கு  பாரம்பரியம் என்று ஒன்று இருந்ததாகவும் அதை இப்படித் தொடர் தோல்விகளால் கெடுக்கிறார்களே என்கிற கோபத்தால் மட்டுமே சோனியா & கோவைப் போய்த் தொலையுங்கள் என்று 2014க்குப் பிறகு தொடர்ந்து எழுதி வருபவர்.

A recent headline in the Hindustan Times summed up all that is wrong with the Congress Party today, and why under its present leadership, the party cannot present an effective or credible alternative to the Bharatiya Janata Party. The headline read: "Sonia Gandhi not to celebrate her birthday in view of farmers's protests, Covid-19". The vanity and self-regard in this public pronouncement was staggering, if entirely characteristic. Do the Gandhis think they are akin to royalty, so that the cancellation of one of their birthday parties becomes a mark of identification with their suffering subjects? 

Why The Gandhis Must Go Now - by Rama chandra Guha     Updated December 09, 2020 12:02 pm IST மேலே இன்றைக்கு NDTV :தளத்தில் ராமச்சந்திர குஹா அழாத குறையாகக் குமுறி எழுதியிருக்கும் Opinion கட்டுரையின்  துவக்க வரிகள். Whether or not Sonia Gandhi celebrates her birthday this year (or any other) will not affect the nation's future. The sacrifice she should make is to retreat from politics, and take her children with her. Their departure will increase our chances of rescuing what. remains of the Republic from the ravages of Hindutva authoritarianism.என்று  முடித்திருப்பதில் நேரு பாரம்பரியம், பரம்பரை மீதான அபிமானம் அக்கறை வெளிப்படுவதை விட நரேந்திர மோடியைத் தேர்தல்களில் தோற்கடிக்க முடியவில்லையே என்கிற இயலாமையே அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. லிங்கில் முழுப்புலம்பலையும் படித்துப்பாருங்கள்   

Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா,  ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம்!

காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக்  குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

இப்படிக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசுக்கு இருந்ததா? இருக்கிறதா? என்பதில் ஆரம்பிக்கிற  குழப்பம், என்றைக்கும் தீருவதாயில்லை! 1885 இல் மாட்சிமைதாங்கிய ராணியின் சர்க்கார் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசா இன்றைக்கு இருப்பது? ஸ்ரீ அரவிந்தர், திலகர், கோகலே காலத்தைய காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1920 க்குப் பிறகு,மகாத்மா காந்தி வந்தபிறகு 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்திய காங்கிரசா இன்றைக்கு இருப்பது?

நேரு காலத்தில் இருந்த காங்கிரசா இது? கட்சியை உடைத்து இண்டிகேட் ஆக்கிய இந்திரா காலத்து காங்கிரசா இன்றைக்கிருப்பது?

இன்றைக்கிருக்கிற காங்கிரசின் சரித்திரம் சீதாராம் கேசரியை ஓரம் கட்டிவிட்டு, அன்டோனியோ மைனோ என்கிற சோனியா கட்சித்தலைவர் ஆனதிலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டீர்களானால், மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது!  ஏன் இவர்களை நிராகரிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துத்தான்!  

காங்கிரசின் கதையைச் சொல்லி எழுதியவை இங்கே பலமுறை பலவிதமாகச் சொல்லப்பட்டதுதான்! எதுவும் புதிதல்ல    

மீ.ண்டும் சந்திப்போம். 

சண்டேன்னா மூணு! ராகுல் கரண்டி! ராமசந்திர குகா! ஞானாலயா!

ராகுல் கரண்டி, நாடாளுமன்றத்  தேர்தல் தோல்விக்குத் தங்கள் தரப்பில் என்ன காரணங்கள் என்பதை ஆராய்ந்து பார்க்கத் துப்பில்லாமல் மறுபடியும் பிரதமர் நரேந்திர மோடி மீது ஒரு வெறுப்புப் பிரசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் என்பதில் காங்கிரசுக்கு வேறு அஜெண்டா எதுவுமில்லை, காங்கிரஸ் ஒரு கட்சியாகத் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல வந்த இடத்தில் பேசியவிதம் புலப்படுத்துகிறது.


நான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு ராமசந்திர குஹா! ஐம்பத்து நான்கே வயதான இந்த ஐ ஐ எம் பட்டதாரி, நேரு மீது அளவு கடந்த மரியாதை அபிமானம் வைத்திருப்பவர் நேரு மீது, காங்கிரஸ் கட்சி மீது  ஒரு மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனாலும் கூட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது விமரிசிக்கும்போது தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறவர் என்பதால் நம்பகத்தன்மை உள்ளவர். இவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் கூட இவரைப் புறக்கணித்து விட முடியாதபடி எழுதுகிறவர் என்ற அறிமுகத்தோடு 2013 ஜனவரியில் இவரைப்பற்றி ஒரு சிறு அறிமுகக் குறிப்போடு ஒரு பதிவை எழுதியிருந்தேன். 


News laundry தளத்துக்காக மது ட்ரெஹானுடன் ராமசந்திர குகா 2012 நவம்பரில் நடத்திய நேர்காணல் இது.ராமசந்திர குகா அந்த நாட்களில் இருந்தே ஒருவிஷயத்தில் தெளிவாகத்தான் இருந்துவருகிறார். இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெற, மேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குகா  சொல்வது இதுதான்:

முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி இருப்பதில் இருந்து வெளிவர, விடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள், அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்  

இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடியுமானால் முந்தைய பதிவில் அரேபிய சிந்தனையாளர் இபின் கால்தூனை சாக்கு வைத்து ராகுல் காண்டி அரசியலில் ஜெயிக்க முடியாது, தாக்கு பிடித்து நிற்க முடியாது என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லியிருக்கிறார் என்பதும் புரியும்.


அஸ்லாம் ஷேர் கான்! காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தாங்கத் தயாராம்! ராகுல் காண்டி என்ன செய்யப் போகிறார்?  

  
இந்தப்பக்கங்களில் அரசியல் உள்ளிட்டு எத்தனையோ விஷயங்களைக் குறித்து எழுதிக் கொண்டிருந்ததில், சென்ற ஆண்டு, வேண்டுமென்றே ஒரு பெருத்த இடைவெளி. சுமார் ஏழுமாதங்கள், பதிவுகளை எழுவதில் ஏகப்பட்ட இடைவெளி.வெறுமனே பதிவுகளைஎழுதிக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? நேரடியாகக் களம் இறங்கிச் செயல் படுகிறமாதிரி வருமா? என்னுள் உறுத்திக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது சரி என்று முடிவெடுத்தேன். தொழிற்சங்கம், அரசியல் என்று முப்பதுஆண்டுகளுக்கும்  மேலாகக் களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தவன் வேறு மாதிரி முடிவெடுக்க முடியாதே!

புதுத்திண்ணை இணைய இதழில் திரு மலர்மன்னன் 
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதிய ஒரு வேண்டுகோள் களத்தில் இறங்கிப் பார்த்து விடுவது என்ற முடிவுக்குத் தோதாக வந்து சேர்ந்து கொண்டது. புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் ஆதரவுக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்ற செய்தியை கூகிள் ப்ளஸ் முதலான தளங்களில்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.சென்ற அக்டோபர் கடைசி வரை,தொடர்ச்சியாக பொதுவெளியில் ஒரு இயக்கமாகவே நடத்திவந்தது,  கடந்த இருமாதங்களாகக் குறைந்தும் போனது கிடைத்த அனுபவங்கள் அப்படி! அனுபவங்களைப்பரிசீலனை செய்தத்தில் கிடைத்த தகவல்கள், அப்படியே பொதுவெளியில்பகிர்ந்துகொள்ள முடியாதவையும் கூட!
ஞானாலயா ஆய்வு நூலகம்  மாதிரியான புத்தக சேகரங்கள் பாது காக்கப்பட வேண்டியவை.கௌரவிக்கப்பட வேண்டியவை.இந்த விஷயத்தில் உங்களால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றுவதை, இந்தச் சுட்டிகளில் இருக்கும் செய்திகளைப் பார்த்து விட்டு நேரடியாக புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கே அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறேன்.  

இதுவும் கூட 2013 ஜனவரி 11 அன்று எழுதிய பதிவின் ஒரு பகுதிதான்! ஞானாலயா ஆய்வு நூலகம் என்றொரு ஆலமரத்தைத் தங்களுடைய சொந்தக்குழந்தையைப் போல பராமரித்துவரும் ஞானாலயா தம்பதியினர் பா.கிருஷ்ண மூர்த்தி டோரதி இருவரைப் பற்றியும் இங்கே நண்பர்களுக்கு மீள் அறிமுகம் செய்ய விரும்புகிறேன். புதுக்கோட்டையில் இந்த நூலகத்தை ஆரம்பிக்க வேண்டிய காரணமென்ன என்பதை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்க     

மீண்டும் சந்திப்போம்.