நாளை டிசம்பர் 8 பாரத் பந்த் என்ற பெயரில் ஒரு கோமாளித்தனம்! நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயி சங்கங்கள் நாளை பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், வேலை வெட்டி எதுவுமில்லாமல் காய்ந்து கிடக்கும் பதினெட்டுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உடனே இந்த பாரத் பந்த்துக்கு ஆதரவாகக் களம் இறங்கப் போவதாகவும் செய்திகள் சொல்கின்றன. இந்தக்கட்சிகளுக்கு தொழிற்சங்க ஒட்டுவால்கள் உண்டே! அவை இல்லாமலா? ஆட்டோ ஓடாது, பஸ் ஓடாது, வங்கிகள் இயங்காது, டீக்கடை, ஹோட்டல்கள் மூடல் என நாடே ஸ்தம்பித்துப் போகிற அளவுக்கு சாலை மறியல், ரயில் மீது கல்வீச்சு, விமானங்களைப் பறக்கவிடாமல் தரை இறக்கம் இப்படி ஏகப்பட்ட பில்டப்புகளை இடதுசாரிகள் நீண்டகாலமாக அடுக்கிக்கொண்டே போனதில் ரீல் அறுந்து, நூலாம்படை நிரம்பத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
In 2010 , the great Kaka Sharad Pawar who returned Padma award demanding participation of Private players in agri marketing . Same kaka sings different tune now . Turncoats to the core .
நம்மூரில் வேலைநிறுத்தங்கள், பந்த் என்கிற முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் எல்லாமே பாதிக்கப்பட்ட தரப்பினருடையதாக இல்லாமல், தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துவரும் அரசியல் கட்சிகளுடைய கைகளில் சேரும்போது எதற்கும் பயனற்ற வெற்றுக் கோமாளித் தனமாகவே ஆகிவருவதை இந்தப்பக்கங்களில் பலமுறை பேசி இருக்கிறோம். இப்படி அரசியல் கட்சிகளுடைய கோமாளித்தனம் ஜனங்களுக்கு மிகவும் தொல்லை தருவதாகவே இருப்பதை இன்னும் எத்தனை நாட்களுக்கு சகித்துக் கொண்டே இறுக்கப் போகிறோம்?
இங்கே மாற்றிப்பேசுவது பஞ்சாப் ஹரியானா விவசாயிகள் மட்டுமே அல்ல. வசதிக்கேற்ற மாதிரி நம்மூர் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை மாற்றி மாற்றிப் பேசுபவைதான்! நம்மூர் திமுகவைப் பற்றித் தனியாகச் சொல்லவே வேண்டாம்! #ஒருசாம்பிள்
திமுகவின் 2016 சட்டசபைத் தேர்தல் அறிக்கை! இதையெல்லாம் யார் சார் படிச்சிருக்கப் போறாங்க? இப்படி ஒரு அறிக்கை, அதில் சொன்னதை எல்லாம் இசுடாலினிடம் கேட்டுத்தான் பாருங்களேன்!
மம்தா பானெர்ஜி இந்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக கம்பைன் கோமாளிகளிடமிருந்து ஒதுங்கியிருக்க கற்றுக்கொண்டவிட்டார். நரேந்திர மோடியை மேற்கு வங்கத்தில் தனியாக எதிர்த்தால் போதுமே! எதற்காக இந்தக்கோமாளிகளுடன் கூட்டுச் சேர வேண்டும்? தன் கட்சி சார்பாக டெரெக் ஓ பிரையனை டில்லிக்கு அனுப்பி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிற மாதிரி சீன் போட்டாயிற்று! அதேவேளையில் மேற்கு வங்கத்தில் பாரத் பந்த்துக்கு ஆதரவு, அனுசரணை எதுவும் கிடையாது! திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அது எதிரானதாம்! நம்ப முடிந்தால் நம்புங்கள்!
மம்தா பானெர்ஜியிடமிருந்து கூடப் பாடம் எதையும் கற்றுக்கொள்ள வேண்டாம்! மிகச் சமீபத்தில் தெலுகு தேசம் கட்சியின் சந்திர பாபு நாயுடு செய்த அதே தவறைச் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா? நரேந்திர மோடியுடன் முறுக்கிக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து மேடைகளில் போட்டோவுக்குப் போஸ் கொடுத்த நாயுடுவின் தற்போதைய நிலைமை என்னவென்று தெரியாதா என்ன?
இது 2019 மே மாத நடப்பு
ஹைதராபாத் முனிசிபல் கார்பொரேஷன் தேர்தல் முடிவுகளில் தெலங்கானா முதல்வர் K சந்திரசேகர ராவ் கசப்புதான், ஆனாலும் பாடம் கற்றுக் கொண்டாரா? இல்லையே என்கிறது நடப்பு நிலவரம்.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பிஜேபியிடம் சரிபாதி இடங்களைப் பறிகொடுத்த தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர், தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக பாரத் பந்த்தில் இணைகிறாராம்! Several political parties, including the Congress, AAP, DMK, Shiv Sena, Kamal Haasan’s MNM, Left parties and the TRS, have joined ranks with the protesting farmers. NDA constituent Rashtriya Loktantrik Party has also supported the bandh call என்கிறது செய்தி.
150 இடங்களிலும் போட்டியிட்ட TRS கட்சி 55 இடங்களில் மட்டும் வெற்றி, வாங்கிய மொத்த வாக்குகள் 12,04,167 (35.81%),149 இடங்களில் போட்டியிட்டு 48 இல் ஜெயித்த பிஜேபி வாங்கிய வாக்குகள் 11,95,711 (35.56%), 51 இடங்களில் போட்டியிட்டு 44 இல் ஜெயித்த AIMIM வாங்கிய வாக்குகள்6,30,866(18.76%) முதலிரண்டு இடங்களைப் பிடித்த கட்சிகளுக்கிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 8456 (0.25%) தான்! இது புள்ளிவிவரப் பிரியர்கள் வேண்டிக் கேட்கவிரும்பும் தகவல், அவ்வளவே!💪😄😄
இரண்டு வேலைநிறுத்தங்களுக்கிடையே சனி ஞாயிறு லீவு வேற! இது டிசம்பர் மாதக் கூத்து!
வேலைநிறுத்தங்கள், தொழிலாளியின் கடைசி ஆயுதமாகச் சொல்லப்பட்டதெல்லாம் போய் தொடர்கதை ஆனதையும் தாண்டி மெகாசீரியல் அபத்தங்களாக ஆகிவிட்டதை, ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதியாக வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
எண்பதுகளிலேயே வேலைநிறுத்தங்கள் பயனற்றவை தான் என்றாகிப்போன பிறகும் கூட, இங்கே சங்கங்களோ பின்னிருந்து நடத்துகிற கட்சிகளோ படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவில்லை. இதையும் ஒரு அரசியல் போராட்டமாகத் தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். Change Management மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்று ஏற்கெனெவே அங்கே ஒரு புத்தகத்தை முன்வைத்துப் பேசியதை மறுபடியும் நாட்டு நடப்புக்களை வைத்துப் இங்கேயும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.
ஒருநாள் வேலைநிறுத்தங்கள் பயனற்றுப்போனதால் இப்போது impact அதிகமாக இருக்க வேண்டுமென்று விடுமுறைநாட்களை ஒட்டியோ, அடுத்தடுத்து தொழில் சுணக்கம் ஏற்படுத்துகிற மாதிரி ஒருநாள் அப்புறம் இரண்டுநாள் என்று அறிவித்துக் கொண்டு போவதில் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 9க்கும் இடைப்பட்ட இருபது நாட்களில் இது மூன்றாவது! முந்தைய காலங்களைப் போல Indefinite Strike என்று அறிவிப்பதற்கும் எந்தத் தொழிற்சங்கத்துக்கும், பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுக்கும் இப்போது தைரியமில்லை It’s a tried and tested method to express your dissatisfaction with the way you’re being treated at work – but is it effective?என்று 7 கேள்விகளை முன்வைத்து இங்கே ஒரு செய்திஅலசல் Why do people go on strike? What makes or breaks a strike? Aren’t strikes a bit unfair to customers or service users? What’s the role of governments in all this? How else could workers express their dissatisfaction with the way they’re being treated? Is there an ideal set-up anywhere in the world? Have you ever been on, or considered going on, strike? இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதும் பதிலும் வெளிநாடு ஒன்றில் தான் என்றாலும் கேள்விகள் இங்குள்ள சூழலுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் வேலைநிறுத்தங்கள் பெரும்பாலும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் மீதல்லாமல், பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுடைய சொந்த அஜெண்டா மீது நடப்பதுதான் என்பது சிதம்பர ரகசியம்! இந்த ஏழு கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்ன? மௌனமாகக் கடந்துபோய்விடாமல், ஒரு பதில் சொன்னால் தான் என்ன? !! இது 5/1/2019தேதியன்று சேர்க்கப்பட்ட டிஸ்கி. இங்கே பதில்கள் எதுவும் வரவில்லை ஆனால் இதைப்பற்றி கூகிள் ப்ளஸ் தளத்தில் செய்திருந்த அறிமுகத்துக்கு இரண்டு நண்பர்கள் பதிலளித்திருந்தார்கள். அதையும் பதிவின் உள்ளடக்கமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன்
புதிய பொருளாதாரக் கொள்கை தாக்கம் ஒரு காரணமாக இருக்கிறது. இரண்டு ஒரு தொழிற்சாலை ஒரு பொருள் (அது டிவி அல்லது வாசிங்மிஷின் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது கார் பஸ் லாரி)உற்பத்தி முறை போய் ஒரு பொருளுக்கு பல இடங்களில் உற்பத்தி என்றமுறையில் (அரசின் சலுகைகள் உதவி யோடு வரிவிலக்கு மின்கட்டண சலுகைகள்) உற்பத்தி முறை மாதிரி இருப்பதால் அதற்கேற்ப தொழிற் சங்க கொள்கை மாறாமல் இருப்பது பின்னடைவு இதற்கு முதலில் ஒரே பொருள் உற்பத்தி செய்யும் கம்பெனி கிளைகள் எல்லாம் ஒரே சங்கமாக மாறவேண்டும். பின்னர் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என விரிவடைய வேண்டும். கட்டுரை படிக்க வில்லை இது என்னுடைய எண்ணம்.
1960லிருந்தே அனேகமாக வேலை நிறுத்தம் வெற்றியாயிருக்கிறது ஆனால் கோரிக்கைகள் நிறைவேறியதாகச் சொல்ல முடியாது. அனேகமாக எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் என்பதால் அவர்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப போராட்டங்கள் வெடிக்க வைக்கப்படும். ஆனால் இப்போதெல்லாம் அதுவும் No work No Pay என்று ஆன பிறகு லீவு எடுத்து ஓடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாகத் தொலைபேசித் துறையில் மக்களிடம் பிஎஸ்என்எல் அனேகமாக மதிப்பிழந்து போன நிலையில் மாற்றி யோசிக்கத் தெரியாத கம்யூனிஸ்ட் தலைமைகள் வசம் மாட்டிக்கொண்ட ஊழியர்கள் பாவம்!
+Raguveeradayal Thiruppathi Iyengar ஆப்பரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் இறந்துவிட்டார் கதையாகத் தான் வெற்றி பெற்றதாக இங்கே வேலைநிறுத்தங்கள் நம்ப வைக்கப் படுகின்றன. No work No Pay என்பதனால் மட்டுமல்ல, இங்கே வேறு மாற்று என்ன என்பதை யோசிக்க முடியாத நடுத்தர வர்க்கம் (எல்லாத் தொழில்களிலும் தான்), இங்கே தொழிற்சங்கங்களை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
மாற்றி யோசிக்கத் தெரியாத கம்யூனிஸ்ட் தலைமையால் என்பது மட்டுமே முழு உண்மை அல்ல. மாற்றி யோசிக்க முடிந்திருந்தால் அவர்கள் ஏன் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருக்கப் போகிறார்கள்?
+Palani Chamy வலைப்பதிவில் ஒரு ஏழு கேள்விகளை முன்வைத்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதில் எத்தனைபேர் பதில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
வலைப்பதிவுகளில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்றே விரும்பினேன். அது நிகழாததால் தான் G + தளத்தில் சின்னச் சின்னதாக செய்திகளின்மீது ஒருசிறு குறிப்பு அல்லது கேள்வியை முன்வைத்து எழுத ஆரம்பித்தேன்.