இரண்டு வேலைநிறுத்தங்களுக்கிடையே சனி ஞாயிறு லீவு வேற! இது டிசம்பர் மாதக் கூத்து!
வேலைநிறுத்தங்கள், தொழிலாளியின் கடைசி ஆயுதமாகச் சொல்லப்பட்டதெல்லாம் போய் தொடர்கதை ஆனதையும் தாண்டி மெகாசீரியல் அபத்தங்களாக ஆகிவிட்டதை, ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதியாக வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
எண்பதுகளிலேயே வேலைநிறுத்தங்கள் பயனற்றவை தான் என்றாகிப்போன பிறகும் கூட, இங்கே சங்கங்களோ பின்னிருந்து நடத்துகிற கட்சிகளோ படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளவில்லை. இதையும் ஒரு அரசியல் போராட்டமாகத் தான் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். Change Management மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி என்று ஏற்கெனெவே அங்கே ஒரு புத்தகத்தை முன்வைத்துப் பேசியதை மறுபடியும் நாட்டு நடப்புக்களை வைத்துப் இங்கேயும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.
ஒருநாள் வேலைநிறுத்தங்கள் பயனற்றுப்போனதால் இப்போது impact அதிகமாக இருக்க வேண்டுமென்று விடுமுறைநாட்களை ஒட்டியோ, அடுத்தடுத்து தொழில் சுணக்கம் ஏற்படுத்துகிற மாதிரி ஒருநாள் அப்புறம் இரண்டுநாள் என்று அறிவித்துக் கொண்டு போவதில் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 9க்கும் இடைப்பட்ட இருபது நாட்களில் இது மூன்றாவது! முந்தைய காலங்களைப் போல Indefinite Strike என்று அறிவிப்பதற்கும் எந்தத் தொழிற்சங்கத்துக்கும், பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுக்கும் இப்போது தைரியமில்லை
It’s a tried and tested method to express your dissatisfaction with the way you’re being treated at work – but is it effective? என்று 7 கேள்விகளை முன்வைத்து இங்கே ஒரு செய்திஅலசல்
Why do people go on strike?
What makes or breaks a strike?
Aren’t strikes a bit unfair to customers or service users?
What’s the role of governments in all this?
How else could workers express their dissatisfaction with the way they’re being treated?
Is there an ideal set-up anywhere in the world?
Have you ever been on, or considered going on, strike?
இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதும் பதிலும் வெளிநாடு ஒன்றில் தான் என்றாலும் கேள்விகள் இங்குள்ள சூழலுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் வேலைநிறுத்தங்கள் பெரும்பாலும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் மீதல்லாமல், பின்னிருந்து இயக்குகிற அரசியல் கட்சிகளுடைய சொந்த அஜெண்டா மீது நடப்பதுதான் என்பது சிதம்பர ரகசியம்!
இந்த ஏழு கேள்விகளுக்கு உங்களுடைய பதில் என்ன? மௌனமாகக் கடந்துபோய்விடாமல், ஒரு பதில் சொன்னால் தான் என்ன? !!
இது 5/1/2019 தேதியன்று சேர்க்கப்பட்ட டிஸ்கி. இங்கே
பதில்கள் எதுவும் வரவில்லை ஆனால் இதைப்பற்றி கூகிள் ப்ளஸ் தளத்தில் செய்திருந்த அறிமுகத்துக்கு இரண்டு நண்பர்கள் பதிலளித்திருந்தார்கள். அதையும் பதிவின் உள்ளடக்கமாகச் சேர்த்து வைத்திருக்கிறேன்
புதிய பொருளாதாரக் கொள்கை தாக்கம் ஒரு காரணமாக இருக்கிறது.
இரண்டு ஒரு தொழிற்சாலை ஒரு பொருள் (அது டிவி அல்லது வாசிங்மிஷின் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது கார் பஸ் லாரி)உற்பத்தி முறை போய் ஒரு பொருளுக்கு பல இடங்களில் உற்பத்தி என்றமுறையில் (அரசின் சலுகைகள் உதவி யோடு வரிவிலக்கு மின்கட்டண சலுகைகள்) உற்பத்தி முறை மாதிரி இருப்பதால் அதற்கேற்ப தொழிற் சங்க கொள்கை மாறாமல் இருப்பது பின்னடைவு
இதற்கு முதலில் ஒரே பொருள் உற்பத்தி செய்யும் கம்பெனி கிளைகள் எல்லாம் ஒரே சங்கமாக மாறவேண்டும். பின்னர் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என விரிவடைய வேண்டும்.
கட்டுரை படிக்க வில்லை இது என்னுடைய எண்ணம்.
1960லிருந்தே அனேகமாக வேலை நிறுத்தம் வெற்றியாயிருக்கிறது ஆனால் கோரிக்கைகள் நிறைவேறியதாகச் சொல்ல முடியாது. அனேகமாக எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் என்பதால் அவர்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏற்ப போராட்டங்கள் வெடிக்க வைக்கப்படும். ஆனால் இப்போதெல்லாம் அதுவும் No work No Pay என்று ஆன பிறகு லீவு எடுத்து ஓடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாகத் தொலைபேசித் துறையில் மக்களிடம் பிஎஸ்என்எல் அனேகமாக மதிப்பிழந்து போன நிலையில் மாற்றி யோசிக்கத் தெரியாத கம்யூனிஸ்ட் தலைமைகள் வசம் மாட்டிக்கொண்ட ஊழியர்கள் பாவம்!
+Raguveeradayal Thiruppathi Iyengar ஆப்பரேஷன் சக்சஸ் ஆனால் பேஷண்ட் இறந்துவிட்டார் கதையாகத் தான் வெற்றி பெற்றதாக இங்கே வேலைநிறுத்தங்கள் நம்ப வைக்கப் படுகின்றன. No work No Pay என்பதனால் மட்டுமல்ல, இங்கே வேறு மாற்று என்ன என்பதை யோசிக்க முடியாத நடுத்தர வர்க்கம் (எல்லாத் தொழில்களிலும் தான்), இங்கே தொழிற்சங்கங்களை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது.
மாற்றி யோசிக்கத் தெரியாத கம்யூனிஸ்ட் தலைமையால் என்பது மட்டுமே முழு உண்மை அல்ல. மாற்றி யோசிக்க முடிந்திருந்தால் அவர்கள் ஏன் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருக்கப் போகிறார்கள்?
+Palani Chamy வலைப்பதிவில் ஒரு ஏழு கேள்விகளை முன்வைத்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதில் எத்தனைபேர் பதில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
வலைப்பதிவுகளில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும் என்றே விரும்பினேன். அது நிகழாததால் தான் G + தளத்தில் சின்னச் சின்னதாக செய்திகளின்மீது ஒருசிறு குறிப்பு அல்லது கேள்வியை முன்வைத்து எழுத ஆரம்பித்தேன்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!