அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய் தாலிபான்களுக்கு எல்லாமுமாக இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய் தாலிபான்களுக்கு எல்லாமுமாக இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?
அமெரிக்கர்களை அலுப்படைய வைத்திருக்கிற 17 ஆண்டுகாலமாய்த் தொடரும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களோடு நடக்கும் போர் முடிகிற அறிகுறி தெரிவதாக பிபிசி செய்தி இன்று சொல்கிறது.
US and Taliban negotiators have agreed on a draft framework for a peace deal that would put an end to the 17-year conflict in Afghanistan, Washington's top negotiator has said.
US negotiators held six days of talks with the Taliban in Qatar, last week.The Taliban have so far refused to hold direct talks with Afghan officials, whom they dismiss as "puppets". இதென்ன புதிய செய்தியா? இல்லை! இப்படியாகுமென்று 2014 இலிருந்தே அமெரிக்கர்களுடைய தளர்ச்சியும், ராணுவக் கூட்டாளிகள் ஒவ்வொருவராக, ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிக்கொண்டபோதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன என்பதை World Economic Forum மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
Briefed President @ashrafghani last night on the progress we've made. Peace is America's highest priority in #Afghanistan, a goal we believe all Afghans share.
அமெரிக்கர்கள் நினைப்பது போல அமைதியோ, அமைதிப் பேச்சுவார்த்தைகளோ உறுதியான ஒரு வடிவத்தை எட்டப் போவதில்லை என்று விஷயம் தெரிந்த வல்லுநர்கள் அபிப்பிராயப்படுவதாக பிபிசி இன்னொரு செய்திக் கட்டுரையில் சொல்கிறது.
இது சென்ற அக்டோபரில் எழுதியதுதான்! ஆப்கன் நிலவரம் என்ன என்பதைக் கொஞ்சம் பரிச்சயம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்!
அக்கம் பக்கம், ராஜீய உறவுகளும் சிக்கல்களும், வெளியுறவுக் கொள்கை, செய்திகள், விமரிசனங்கள், என்று இங்கே ஒரு புதிய வலைப்பக்கத்தில் தொடர்ந்து படித்துப் பார்த்து அபிப்பிராயம் என்னவென்றுதான் சொல்லுங்களேன்!
//ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா? //
ReplyDeleteயாராவது உள்ளூர் அரசியல்வாதிகளிடம் கேட்டுப் பார்க்கலாமா?..
வருமானத்துக்கு வழியிருக்கிறதா இல்லையா, வருமானம் போக எத்தனை ஓட்டுக்கள் தேறும் என்று உத்தேசமாகக் கூட்டல் கழித்தல் இல்லாமல் எந்த அரசியல்வாதியும் ஆஜராக மாட்டார்கள் ஜீவி சார்!
Deleteஅது உள்ளூரோ மாநிலமோ தேசீய அளவிலானதோ வரும்படிக்கு உட்பட்டதுதான்!