ஒளிபிறந்தபோது! மேலும் சில செய்திகளுடன்!

ஜனவரி 12, சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள்!

எதையும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே  இருந்த நரேன் என்கிற நரேந்திரநாத் தத்தா. சுவாமி விவேகானந்தராக பரிணமித்ததும் அவருடைய  குரல் உறங்கிக்  கொண்டிருந்த பாரதத்தை, தட்டியெழுப்புவதாக விடுதலை வேட்கையை வளர்ப்பதாக இருந்ததையும் நன்றியோடு  நினைத்துப் பார்த்து வணங்க வேண்டிய தருணம் இது.


இங்கே தினசரி தளத்தில் திருமதி கமலா முரளி எழுதியிருக்கிற அஞ்சலிக் கட்டுரையைப் படிக்க 

  
நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை எப்படி மறந்தே போய் விடுகிறோம் என்று முந்தைய பதிவில் விசனம் மிகுந்து சொன்னது கவனிக்கப் பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்! 

*******
மேலும் கவனிக்கப்பட வேண்டிய செய்திகளாக சில 

*******

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளோம். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸூக்கு செல்வாக்கு இல்லை. 
வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வழக்கம் போல் உத்தர பிரதேசத்தில் இருந்து தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார், எங்கள் கூட்டணியின் சார்பில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
******* 

என்ன புத்தகம் வாங்கலாம் என்பது சரி, எப்படிப் புத்தங்களை வாங்கவேண்டும்?- சிறார் எழுத்தாளர் விழியனிடம் பேசியது இங்கே 
’’முதலில் பெற்றோர், தங்களின் குழந்தைகளைப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். போனவுடனே புத்தகங்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து அரங்குகளையும் முழுமையாகச் சுற்றிப்பார்த்து விட்டு, குழந்தைகளுக்குப் பிடித்த புத்தகங்களை குறித்துக் கொள்ளச் சொல்லலாம்.
அதில் குழந்தைகளே புத்தகத்தின் பேர், விலையைக் குறித்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டைக் கொடுத்து, அதற்குள்ளாகப் புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்ல வேண்டும். புத்தகங்களை, முழுக்க குழந்தைகளின் தேர்வுக்கே விட்டுவிட வேண்டும். அதில் பெற்றோரின் 20 சதவீத தலையீடு இருக்கலாம்.

விழியன்

ஏனெனில், குழந்தைகளின் தேர்வில் தலையிட்டால், வாசிப்பில் அவர்களுக்கு ஈடுபாடு மறையலாம், குறையலாம். புத்தகத்தின் அட்டையோ, படங்களோ, எழுத்து வடிவமோ அவர்களுக்குப் பிடித்திருக்கலாம். அதனால் அவர்களின் விருப்பத்துக்கு விட்டுவிடுவது நல்லது. அதுவே அவர்களின் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும்’’ என்றார் விழியன்.

விழியன் என்கிற உமாநாத் செல்வனுடன் உரையாடி  நீண்ட நாட்களாகி விட்டது என்பதும் நினைவுக்கு வருகிறது!  

2 comments:

  1. எங்கள் வீட்டில் பெரிய புத்தகக் கலெக்ஷன் இருந்தது. என் சிறு வயதில் புத்தகங்களோடே வளர்ந்தேன். அப்போது தொலைகாட்சி, ஸ்மார்ட் போன் போன்ற கவனக்கலைப்புகளும் கிடையாது. என் வீட்டில் இப்போதும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. மகன்களும் இருக்கிறார்கள்..... ம்...ஹூம்!

    ReplyDelete
    Replies
    1. எதுவும் கைக்கெட்டுகிற மாதிரி இருந்தால் ருசி போய்விடுமோ என்னவோ ஸ்ரீராம்? சிறுவயதில் அண்ணன்மார்களிடமிருந்து தொற்றிக் கொண்ட வாசிப்பு என்வரை இன்னும் தொடர்கிறது. மகன் நிறைய விஷயங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனாலும் புதிய எழுத்தாளர்களில் வாசித்தே ஆகவேண்டும் என்கிற ஆர்வத்தை விதைக்கிறவர்களைத்தான் காணோம் என்றுதான் தோன்றுகிறது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!